திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 23.01.2017 அன்று மாலை 3 மணியளவில் குடியாத்தம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உண்மையான கொலைக் குற்றவாளிகளை உடனே கைது செய்!
தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்!
குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடு! - என காவல் துறையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் சிறுகாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் நந்தினி (16) கடந்த டிச.29 அன்று இந்து முன்னணியைச் சேர்ந்த கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் ஈடுபட் டுள்ள இந்து முன்னணியைச் சேர்ந்த உண்மையான கொலைக் குற்றவாளிகளை உடனே கைது செய்யவும்,குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழகத் தலைவர் தனது கண்டன உரையில், “இந்த கொடூர கொலைக்கு முக்கிய காரணமான இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரை உடனே கைது செய்யவேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், இந்த வழக்கில் கடமை ஆற்றத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என வலியுறுத்திப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திவிக மாவட்ட அமைப்பாளர் இரா.பா.சிவா தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் திலீபன் முன்னிலை வகித்தார். கஜேந்திரன் வரவேற்றார்.
காஞ்சி மக்கள் மன்றம் மகேசு,விடுதலை சிறுத்தைகள் நீலசந்திரகுமார், ஆவணப்பட இயக்குனர் பாலா, கழக தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், த.ஒ.இ. சார்பில் செவ்வேல், மா.பெ. பொ.க. சார்பில் சீனி.பழனி, அம்பேத்கர் தொழிலாளர் இயக்கம் சார்பில் மேயர் சுந்தர்,மறுமலர்ச்சி தமுமுக சார்பில் ஏஜாஸ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக அமுல்ராஜ் நன்றி கூறினார்.
திருச்செங்கோட்டில்
நாமக்கல் மாவட்ட கழக சார்பில் திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடந்தது. பொள்ளாட்சி, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 10 பெண்கள் உள்பட சுமார் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். சி.சிவகுமார் வரவேற்றுப் பேசினார். ர.பிரகாசு. திருச்செங்கோடு நகர இளைஞரணி செயலாளர் தலைமை தாங்கினார்.
கண்டன உரையாற்றியோர்: •கா.சு.நாகராசு. ஒருங்கிணைப்பாளர். பெரியார் திக. •இரத்தினசாமி. மாநில அமைப்பு செயலாளர். திவிக. திராவிடர் விடுதலைக் கழகம். •சிவகாமி. மாநில அமைப்பாளர். தமிழ்நாடு அறிவியல் மன்றம். •முல்லை வேந்தன். மேட்டூர் •மணிமொழி. திவிக. பொள்ளாச்சி. மா.வைரவேல். மாவட்ட அமைப்பாளர் மு.சாமிநாதன். மாவட்ட தலைவர் அ.முத்துப்பாண்டி. மாவட்ட பொருளாளர். இரா.பிடல் சேகுவேரா. இராசிபுரம் நகர அமைப்பாளர். திவிக நன்றியுரை: மு.சரவணன், மாவட்ட செயலாளர். திவிக.