periyar anna 350மேற்கண்ட தலைப்பின்படி ‘எனது காதல்’ என்பதாக தலைப்பெயரிட்டு கலப்பு மணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகக் கண்டு ஒரு கடிதம் ராமநாதபுரம் ஜில்லாவில் இருந்து ஒரு பெண்மணி எழுதியதாக எழுதப்பட்டு பிரசுரிப்பதற்காக நமக்கு அனுப்பப் பட்டிருக்கின்றது.

அதில் கையெழுத்தில்லாததாலும், எழுத்துக்கள் பெண் எழுத்துத் தானா என்று சந்தேகிக்கப்படக் கூடியதாகவும் இருப்பதால் அதை பிரசுரிக்கக் கூடவில்லை. ஆனால் அக்கடிதக் கொள்கைக்கு நாம் சார்பளிக்க வேண்டியது அவசியமாயிருப்பதால் அதை பிரசுரிக்க வேண்டியது அவசியமெனவும் தோன்றுகின்றது.

ஆகவே கையெழுத்துடனும், அது எழுதப்பட்ட பெண்ணின் படம் அல்லது கைரேகையுடனும் நமக்கு வேறு கடிதம் எழுதி அனுப்பப்பட்டால் பிரசுரிக்கத் தயாராயிருக்கிறோம். அதில் கண்ட காரியம் நடைபெறவும் நம்மால் ஆன அனுகூலம் செய்யத் தயாராயிருக்கின்றோம். (ப-ர்.)

(குடி அரசு - பத்திராபர் குறிப்பு - 15.02.1931)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.