ஹிந்துமதம் என்பதும், ஹிந்துமத சம்பந்தமான சாஸ்திரங்கள், கடவுள்கள், கடவுள் கதைகள், நடத்தைகள் முதலியவைகள் எல்லாம் தமிழனுக்கோ, தமிழ்நாட்டிற்கோ சம்பந்தப்பட்டதல்ல; சிறிதளவும் சம்பந்தப்பட்டதல்ல. அவை யாவும் எந்தத் தமிழனாலும் ஏற்பட்டவையுமல்ல; அவற்றுள் எவையும் எதுவும் தமிழ்மொழியில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டவையுமல்ல.

இவையாவும் அந்நிய மொழியாகிய வட மொழியிலும், தமிழன் - தமிழ் நாட்டினன் அல்லாதவனான அந்நியன் மொழியாகிய ஆரிய மொழியிலும் வட நாட்டானான ஆரியனாலுமே ஏற்படுத்தப்பட்டவை, செய்யப்பட்டவையுமே ஆகும்.

ஆரியன் இங்கே வந்து “அய்யர்” ஆனான்

அது போலவேதான் ஜாதி என்பதும், ஜாதி முறை என்பதும், ஜாதி அமைப்பு என்பதும், தமிழ்நாட்டிற்கோ தமிழர் சமுதாயத்திற்கோ ஏற்றதுமல்ல; தமிழ் பழக்க வழக்கங்களுக்கு, தமிழர் வாழ்விற்கு ஏற்றவையுமல்ல; ஏனென்றால், இவை யாவும் யாவற்றுக்கும் ஏற்பட்ட நடப்பு எதுவும் தமிழ்மொழியில்லை என்பதோடு, தமிழர் சமுதாயத்தில் இருந்தவையுமல்ல; தமிழரால் உண்டாக்கப்பட்டவையுமல்ல.

ஜாதியானது, எப்படி வெள்ளைக்காரன் நம் நாட்டுக்கு வந்து “துரை”ஆனானோ - முஸ்லீம் எம்படி நம் நாட்டுக்கு வந்து, “சாயபு”ஆனானோ - அதுபோல் ஆரியன் நம் நாட்டுக்கு வந்து “அய்யர்” ஆனான்; “பிராமணன்” ஆனான்; “பிராமணாள்” ஆனான்.

பார்ப்பானைப்போல வேதத்தைத் தொட்டாலும் தீட்டு

பார்ப்பானுக்குக் குறிப்புப் பெயர் வேதியன் என்பதாகும். வேதியன் என்றால் வேதத்திற்கு உடையவன் என்பதுதான் பொரும். அந்த வேதம் எந்த விதத்திலும் தமிழர்களுக்குச் சம்பந்தப்பட்டதல்ல; தமிழர்களுக்கு உரியதுமல்ல; தமிழுமல்ல; தமிழரால் ஆக்கப்பட்டதுமல்ல. எப்படி ஆரியன் (பார்ப்பான்) கடவுள், தமிழன் தொட்டால் தீட்டு ஆகிவிடும் - கெட்டுப்போகும் என்று சொல்லப்படுகிறதோ, அதுபோலவே வேதமும் தமிழன் தொட்டாலும், அதைப் படித்தாலும், காதில் கேட்டாலும் கெட்டுவிடும். பார்ப்பான அல்லாதவன் பார்த்து கேட்டுவிட்டால், அவன் குருடனாக ஆக வேண்டும் - செவிடனாக ஆகவேண்டும் என்பது பார்ப்பனர் நிபந்தனை ஆகும்.

இதையேதான் சற்றேறக்குறைய பார்ப்பன ஆதாரங்களாகிய சாஸ்திர - தர்ம சாஸ்திர - புராணங்களுக்குமே பார்ப்பனர் நிபந்தனை விதித்து இருக்கிறார்கள். இவைகள்தான் இந்துமத தர்மம் ஆகவும் - இந்து மதக் கொள்கை ஆகவும் இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் இருந்துவருவதுமாகும்; இவைதான் இந்துமதத் தர்மமும் ஆகும்.

நமது மதமாயிருந்தால் நாம் ஏன் ஈனஜாதி இவற்றிற்குக் கட்டுப்பட்டவன்தான் - இந்த நிபந்தனையை ஏற்றவன்தான் ஹிந்து ஆவான். தமிழ் நாட்டாரே! தமிழ் சமுதாயத்தாரே! தமிழர்களே இப்பொழுது சிந்தியுங்கள்.

நாம் ஹிந்துக்களா? ஹிந்து மதத்தவர்களா? ஹிந்து மதத்திற்கு உரிய கடவுள், மத வேத சாஸ்திர புராண இதிகாச தர்மங்கள், ஜாதிமுறைகள், அமைப்புகள் - இவை சம்பந்தமான கோயில் குளம், அவற்றின் கதைகள் - நடப்புகள் நமக்குச் சம்பந்தப்பட்டவைகளா என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஹிந்துமதம் நமது மதமாயிருந்தால், அதில் நாம் நம்மை ஈன ஜாதி - இழிபிறவி - நாலாம் ஜாதி - சூத்திரன் பார்ப்பானின் அடிமை - பார்ப்பானின் தாசி மக்கள் - நமது பெண்கள் பார்ப்பானுக்குத் தாசிகளாக இருக்கத் தக்கவர்கள் என்று எழுதிவைத்துக் கொண்டிருக்க முடியுமா?

“ஹிந்து”என்ற சொல் “சிந்து”விலிருந்து வந்தது

நிற்க. ஹிந்து என்றோ - இந்துமதம் என்றோ - இந்தியா என்றோ ஆரியர்களின் எந்த ஆதாரத்திலும் ஒரு இடத்திலாவது - ஒரு சொல்லாவது இல்லவே இல்லை. மத ஆதாரங்களில் காணம் படுவதெல்லாம் பாரத தேசம், பாரதம் என்றும், சமுதாயத்திற்கும் ஆரியர் என்றும், தேவர்கள் என்றும், ஆரியர்களுடைய எதிரிகளைக் குறிக்க அசுரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், இராக்கதர்கள் என்றும்தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே ஒழிய - இந்தியா, ஹிந்து என்ற சொற்கள் எந்த சாஸ்திர - புராண இதிகாசங்களிலும் மத சம்பந்தமான எந்த ஆதாரங்களிலும் காணமுடிவதில்லை.

தவிரவும் இந்தியா என்ற சொல் - ஹிந்து என்ற சொல் “சிந்து”என்னும் ஒரு நதியின் காரணமாக அதன் கரையில் வாழ்ந்தவர்களுக்கு ஏற்பட்ட பெயர் என்றும், வடமொழியில் “சி” என்பதும் “ஹி”என்பதும் ஒரே சப்தமாக மாற இடம் உண்டு என்கிற காரணத்தால் சிந்து ஹிந்து என்றாயிற்று என்றும் சொல்லுகிறார்கள். ஆங்கில அகராதிகள் சொல்வது என்ன?

பிறகு, ஹிந்துக்களைக் கொண்ட நாடு இந்தியா என்று ஆயிற்று என்றும், இந்தப் பெயரும் அந்நியரால் கொடுக்கப்பட்டதென்றும், இந்தியாவில் வசித்ததால் ஹிந்து என்று அழைக்க நேர்ந்தது என்றும், இதுவும் இஸ்லாமானவர்களாலும் வெள்ளையர்களாலும் கொடுக்கப்பட்ட பெயரே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

அதுவும் எந்தவிதத்திலும் தமிழர்களுக்குப் பொருந்தாது என்பதோடு, ஆரியர்களுக்குத்தான் பொருந்தும் என்பதே ஆராய்ச்சியாளர்கள் முடிவு.

ஹிந்து என்ற சொல்லுக்கு “ ஆரியர்கள்” என்ற பொருள்.மேனாட்டு அகராதிகளில் காணப்படுகின்றது. தவிரவும், ஹிந்துக்கள் என்ற சொல்லுக்கு கிறிஸ்தவர், முகமதியர் அல்லாத மக்கள் என்று ஆங்கில அகராதிகள் (டிக்சனரிகள்) கூறுகின்றன.

The concise oxboard dictionary of current English(1968 ஆம் ஆண்டு பதிப்பு) பக்கம் 516 இல் Hindu என்பதற்கு “Aryan of N. india who(also any one who) professes hindusim என்று போட்டிருப்பதுடன் இதற்குச் சமஸ்கிருத “ரூட்” என்று குறிப்பிட்டு “SINDU RIVER” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து என்றால் அறிவற்றவன் - முட்டாள்

ஹிந்து என்ற சொல்லையும், இந்துக்கள் என்ற குழுவினரையும் மேனாட்டவர்களும் முஸ்லீம்களும் மிகமிக இழிவாகவே கருதுகிறார்கள். அதாவது, அஞ்ஞானிகள் என்றும் அறிவற்ற முட்டாள்கள் என்றும் கருதுகிறார்கள்.

மத கடவுள்கள், அக்கடவுள்களின் நடப்புகள். அவற்றின் கதைகளான புராண இதிகாசக் கூற்றுக்கள் நமக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டவை அல்ல என்பதைச் சிந்தித்துத் தெளியுங்கள்.

(தந்தை பெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-26-29)

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

Comments

24 comments

24
guna
தமிழன் ஹிந்து மதத்தை சார்தவன் இல்லை என்றால் சோழனும் சேரனும் பாண்டியனும் எதற்க்கா கோயில் கட்ட வேண்டும்?. நீங்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்காக முயற்சி செய்யலாம்.மதப் பெயர் யார் கொடுத்தார் என்பது முக்கியமல்ல .அப்படியே நீங்கள் எடுத்துக்கொண்டாலும் மொழிக்கு மொழி அர்த்தம் மாறும் .துலக்கன் என்றும் பெயர் உண்டு முசிலீம் களுக்கு தமிழில் .
நீங்களும் நானும் முசிலீம் என்றால் துரோகி என்று தமிழில் அர்த்தம் பண்ணினால் ஒரு பேசுக்காக அதனால் முஸ்லிம் என்றால் துரோகி என்று ஆகி விடுமா ?.

சோழனும் மற்ற அரசர்களும் ஐயர் சொல்லியா கோவில் கட்டினார்கள் ? அவர்கள் எல்லாம் முட்டளுகளா ?

வாதம் செய்ய நான் தயார் .நீங்கள் தயாரா ?

பார்பனன் நான் அல்ல . கடவுள் பல வடிவங்களில் வணங்கப் படலாம்.ஆனால் அனைவரும் சிவனையும் ,விச்னுவையும் தான் வணகினார்கள்.
தமிழ் கடவுள் என்று சொல்லும் முருகன் சிவனின் மகன் என்றுதான் இருக்கு.அதே போல் பெரியார் சொல்லுவதை போல் அய்யர் தான் ஹிந்து மதத்தை தோற்று விதான் என்று ஆகுமே ? சித்தர்கள் சொல்லுவதைப் போல் முதல் சிவலிங்கம் தமிழ் நாட்டில் தான் தோன்றியது .அவர்கள் வந்து பின்பற்றினார்கள் என்றால் பொருந்தும்.
tamilan
sokatharar guna ,
muthalil hindu endraal enna endru sollungal. atharkku artham enna?.. ennaku verum pechu mattum vendam . aathaaram vendum. hindu endra vaarthaiye kidaiyathu.ok va.
pin muslim endraal thulukkan endru sonnirkal.. atharku unmaiyana artham ungaluku theyriyuma?. turki nattil erunthu vanthavaragal enbathaal muslimkalai thulukkan endru sollikiroom., mattrum enka ulla muslimkal yaarum arab countryil erunthu vanthavargal ellai..
paarpana kudumaiyai thaanga mudiyaamal matham mariyavarkale eppothu erukkum muslimkal.
mattrum,soolan than muthalil piraanthana? allathu seran muthalil piranthana?. ellai sakotharaa..
atharkku munne paarpanan indiavuku austrilayavil erunthu vanthu vittaan,
M.balachandar
எல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது,வரலாறு உள்ளது.எல்லாம் தெரிந்தது போல் பேசக்கூடாது. தனி மனித ஒழுக்கம்தான் நல்ல தேசத்தை உருவாக்க முடியும். அப்படி தனி மனித ஒழுக்கம் எங்கிருந்து வரும் மதத்தில் இருந்துதான் வரும் என்று விவேகனந்தர் "ஹிந்து" மதத்தை பற்றி கூறியுள்ளார். புகழ் தேடவும் பணம் சம்பாதிக்கவும் வேறு வழியை தேடுங்கள்.
தியாகராஜன்.எஸ்
...துலுக்கனிடமும், கிருஸ்தவனிடமும் காசுவாங்கிட்டு இந்துக்களை குறை சொல்லுவதே வேலையா இருக்கீங்களே நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்களா
tamilan
ஒர் குடும்பம் வாழ மட்ரவர்கலை அடிமை படுதும் இந்து மதம் . GOD IS TRUE... GOD IS HOLY.... GOD IS LOVE... LOVE... LOVE... ETHUKUPA EZHAIGALA AVAMANAPADUTHURINGA NEENGA MUTHALLA THIRUNTHUNGA.
Tamilan
எனக்கு ஒரு கேல்வி ..

சிவபெருமன் முலெ கடவுல் . அவர் காதலித்து திருமனம் புரிந்தார். அதுவும் பார்வதியின் அப்பாவுக்கு தெரியாமல்.
கடவுல் என்பவர் மகிமை உல்லவர். அப்படியிருக்கெ அவர் எப்படி இப்படி செய்வர் .
Guest
நான் முழ்வதும் உங்கௌய் நம்புரென் கடவுல் இல்லை
ஈஸ்வரன் ,பழனி.
ஐயா திராவிடக் கொலுந்துகலா உங்களோட இந்த டயலாக்க சொல்றதுக்கு முன்னாடி திராவிடர்கலுனா
தமிழ்நாடு கர்நாடக ஆந்திரா கேரளா நாளும் சேர்ந்ததுதானே உங்களோட கடைய தமிழ்நாட்டுக்கு வெளிய விரிக்க முடியுமா? தமிழ உருவாக்குன அகத்தியர் ஒரிஜினலா திராவிடரா அல்லவா நீங்க நம்பாட்டியும் நாங்க நம்பர சிவன் யாரு? ஏன்னா தமிழ அகத்தியருக்கு சொல்லிக்குடுத்ததே சிவன்தானாம். சரி அத விடு தலைவா இந்து மதத்த இப்படி வாய் கிழிய திட்டற நீங்க இசுலாமிய மதத்த பத்தி ஏதாவது சொல்லுங்க பார்க்கலாம் அப்பத்தான் நீங்க ஆம்பலீங்க .இல்லாத பச்சத்துல நீங்க வெறும் ** தான்.தன் மதத்த தப்பா சொல்றவன போட்டு தாக்கர முஸ்லிம் சகொதரன நான் மனமார பாராட்டுறேன்.
ஈஸ்வரன்.பழனி.
Guest
தந்தை பெரியார் கடவுல் இல்லை என்ட்ரு சொன்னார் அது மட்ரவ்ருக்குதானெ தவிர அவருக்கு இல்லை.அவர் வனன்கிய தெய்வம் வினாயகர்.அவர் மூட நம்பிக்கையை ஒலிக்க சொன்னார்.அதைவிட்டுவிட்டு ஹிந்து மததய் குரை கூராதெ. கூனக்கு தைரியம் இருந்தால் குர் ஆன் இல் இருப்பதை மொழி பெயர்து கூரமுடியுமா.
hahaha
i think u are christian...
Guest
எல்லா மதமும்,மனிதன மனிதனாதான்.வாழசொல்லுது,கடவுல் இல்லை என்ட்ரு சொல்பவனும், கடவுல் உன்டு என்ட்ரு சொல்பவனும்,மொதல்ல மனிதனா வாழ முயலுஙல்
ajay
hindu matham enpathu manitharkalai caste varia pirithu nattai munnatruthukku thadai irrukkum ontru. hindu matham irrukkum varai india munnarathu
thanasingh
ஆரியர் சொல்லி அரசர் கோயில் கட்டினர்

பாபர் சொல்லி முகலாய அரசர் மசூதி கட்டினர்

ஏசுவின் சீடர் தோமா , அதன்பின் வந்த மிஷனரிகழும் சொல்லி ஆலயம் கட்டப்பட்டது

பின் ஏன் சண்டை
அமைதியாய் வாழுங்கள் நண்பரே!
venkat
hindu matham patri thelivaga padithuvittu athai patri katturai eluthavum ethuvume sariyaga theriyamal etho arai kuraiyaga therinthu kondu eluthi irukirire nengal arivullavaraga irunthal hindu matham patri thelivaga padikavum pinnar athai patri vimarsanam seiyyavum enaku matha nambikkai kidaiyathu anal varalaru meethu nambikkai ullathu so hindu mathathin thelivana varalarai padikkavum pinnar vimarsanam seiyyavum
sabari
அய்யா,
ஹின்டு மதம் என்ப்து வாழ்வியல் மூறை அதற்க்கு தொடக்கம் இல்லை. யாராலும் துவக்கபடவில்லை. எதொ மனம் போனபடி உளறகுடாது. நமக்கு பின்னால் வந்தவர்களால் சரியாக சொல்லி தரபடவில்லை. அரைகுறையாக உளறாகூடாது. தயவுசெஇது அர்ததமுள்ள இந்து மதம் படிக்கவும். உன்னை நீயெ எமாற்றி கொள்ளாதிர்.
நன்றீ வணக்கம். வாழ்க ஹின்டு வளர்க் ஹின்டு

jai hind
satham
முதலில் யாராவது கட்டுரைக்கு பதில் சொன்னிங்கலா

1.ஹிந்து என்ர வார்த்தை பகவத் கிதையில் எங்கு உல்லது?

2.உலகில் எந்த வேதமும் தன்னை ஆராய்ச்சி செய்யுங்கல் என்ரு சவால் விடுவது இல்லை அனால் குரானோ மக்கலிடம் சவால் விடுகிரது நீஙகல் ஒரு குரையை அதில் காண்பித்தால் நான் இன்றே இஸ்லாத்தை விட்டு விடுகிறேன் மாறாக நான் உஙகலுக்கு பகவத் கீதையில் மற்றூம் பைபிலில் எத்தனை குரைகளை காட்ட !!!

3.ஹிந்து மதம் ஒரு கடவுளை தான் வணங்க சொல்லி இருக்கிறது ஆனால் நீங்கல் ஏன் இத்தனை கடவுலை வணங்குகிரீர்கள் ...கிளே பாருங்கல்..

You are the One Creator of all the worlds,
and of that which moves and that which does not move,
You alone are fit for worship, You are the highest Teacher,
In all the worlds there is none equal to You.

- Bhagavad-Gita 11:43

He is Allah, the One and Only!
Allah, the Eternal, Absolute;
He begetteth not nor is He begotten.
And there is none like unto Him.

-qurann
Vinoth
mathangalai kadavul padaikala manaithanthan padaikiran ellam arintha kadavul avan ellamal asaivu ellai enra allha ,jesu ,sivan evangaluku theriyatha mathgalai uruwakuna manithan sandai poduwan enru.pagavathgeethaium.biblelum,kuranum .manithruku elluthapattathu alla manithna marunganu manithathanmaile erunthavanga kadavul peyaravatchi elluthunathaga erukum. Mathangal sollura mathirithan kadavul erunthar enral kadavul manithanai padaithiruka mattar avar padaithirunthal nallavaraga eruka mudiyathe
gk
திருக்குரான் என்ன சவால் விடுகிறது பகவத் கீதையில் மற்றும் பைபிலில் என்ன குறை கண்டீர் ஹிந்து மதம் ஒரு கடவுளை தான் வணங்க சொல்லி இருக்கிறது என்று எதை வைத்து சொல்லுகிரீர்கள்
bas
ஹின்டு மதம் உலக நிகல்வொடு சம்பந்தப்பட்டது.உதாரனம்,நவகிரகம்
tamil
indiaen all your love motheris god so my theasem god
hindu
ஹின்டு என்ட்ர சொல் வேததில் கிடையாது. யேன் என்ட்ரால் அப்பொலுது உலகில் இருந்த ஒரே மதம் ஹின்டு மதம் மட்டுமே . அதனால் அந்த மததிர்க்கு பெயர் தேவை பட வில்லை.
ananhan
indhu matham athigamaga mooda nambikaigal udayathu endu palar theriyamal pesukirarragal.
indhukalin ovvoru vilavilum science ullathu.
eg.
ovvoru vilavilum
iyarkai unavu. vaithe padaikirargal.
J.Ragu
Tamilarhal ellorum hindu 've sitthirai mudhal panguni varai Hindu villakal than veru madhathinar tamil madhangalai parppadhillai, ahave tamilan endral avan hindu dhan
tamizhan
Parpanan, sathriyan, vaishiyan, soothiran

Entha kadavulavathu paagupadu paathu padaipana?
Avvaru padaippaneyanal

Avan kadavul illai

Jaathi parkkum manithanaivida kevalamanavan......

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.