கும்பகோணத்தில் கி.பி.1542 முதல் 2015 வரை 473 ஆண்டுகளாக நடைபெறும் ராஜவேத காவிய பாடசாலை

கும்பகோணம் மகாமகக் குளத்தைச் சுற்றி 16 கல் மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களைக் கட்டியது நாயக்க மன்னர்கள் ஆட்சியில் முதன்மை அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர்.

கன்னடரான மைசூர் தசரத ராம அய்யரின் மகன்தான் கோவிந்த தீட்சிதர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களான சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் இம்மூவரின் ஆட்சிக்காலங்களில் முதன்மை அமைச்சராகவும் குலகுருவாகவும் இருந்தவர் கோவிந்த தீட்சிதர்.

ரகுநாத நாயக்கர் தனது ஆட்சிக்காலத்தில் கோவிந்த தீட்சிதரின் சேவையை மெச்சி அவருக்கு எடைக்கு எடை பொன் கொடுத்தார். அதை அறப்பணிகளுக்குச் செலவிட்ட கோவிந்த தீட்சிதர், கும்பகோணம் மகாமகக் குளத்துக்குப் படிக்கட்டுகள் அமைத்ததுடன் குளத்தைச் சுற்றிலும் 16 மண்ட பங்களை எழுப்பினார்.

இவரது காலத்தில் கும்பகோணம் யாகசாலை தெருவில் இவரால் கி.பி.1542இல் தொடக்கப்பட்ட ‘ராஜ வேத காவிய பாடசாலை’க்கு இப்போது வயது 473.

கோவிந்த தீட்சிதர் வழி வந்த ஒன்பதாம் தலைமுறை வாரிசான ரவி தீட்சிதர் வேதபாடசாலை குறித்து, ‘தி இந்து’விடம் பேசினார். “ராஜவேத காவிய பாடசாலையில் வேதம் படித்தவர்கள் இப்போது உலகம் முழுவதும் உள்ளனர். வேத பாராயணங்களைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இங்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவை இலவசமாகக் கொடுத்து மூன்று வேதங்களையும் முறைப்படி கற்றுத் தருகின்றனர். மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரையிலான வேதப் படிப்புகள் இங்கு உள்ளன. வேதம் படித்துக் கொண்டே பள்ளிப்படிப்பையும் தொடரலாம்”ஞுஎன்றார். ரவி தீட்சிதர்.

பல ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாமல் இருந்த கோவிந்த தீட்சிதரின் ராஜவேத காவிய பாடசாலை மகாமகத் திருவிழாவை முன்னிட்டு. கடந்த ஏப்ரல் முதல் புதுப்பிக் கப்பட்டு வந்தது. இதற்கான பணிகள் முடிந்து இன்று (நவ.1) மீண்டும் திறக்கப்படுகிறது.

(“தி இந்து”, 01-11-2015, சென்னை)

*             இங்கு, 170 பார்ப்பன மாணவர்கள்,

                மூன்று வேதங்களையும்;

                புரோகிதம் செய்கிற முறையையும்;

                சமற்கிருத மொழியையும்

                5 ஆண்டுகளுக்குப் படிக்கிறார்கள்.

நால்வருணம் இந்து மதத்தில் மட்டுமே உண்டு. பார்ப்பனர் அல்லாதார் அனைவரின் வீடுகளிலும் பார்ப்பனர்கள் புரோகி தம் செய்வதற்கு, இங்கே பயிற்சி அளிக்கப்படுகிறது. தேவ மொழி எனப்படும் சமற்கிருதம் கற்றுத் தரப்படுகிறது.

இங்கே இவற்றைக் கற்றவர்கள்,

*             தமிழகம் முழுவதிலும்

*             இந்தியா முழுவதிலும்

*             உலக நாடுகளிலும்

வேதக் கொள்கைகளைப் பரப்புகிறார்கள்!

நமக்கு-திராவிட இனத் தமிழர்களுக்கு

நாம் என்னென்ன கற்றுத் தருகிறோம்?

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.