bhramins 350jpgகும்பகோணத்தில் கி.பி. 1542 முதல் 2015 வரை 473 ஆண்டுகளாக நடைபெறும் ராஜவேதகாவியப் பாடசாலை கும்பகோணம் மகாமகக் குளத்தைச் சுற்றி 16 கல் மண்டபங்கள்உள்ளன. இந்தமண்டபங்களைக் கட்டியவர், நாயக்க மன்னர்கள் ஆட்சியில் முதன்மை அமைச்சராக இருந்த கோவிந்ததீட்சிதர்.

கன்னடரான மைசூர் தசரதராம அய்யரின் மகன்தான் கோவிந்த தீட்சிதர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களான சேவப்பநாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாதநாயக்கர் இம்மூவரின் ஆட்சிக்காலங்களில் முதன்மை அமைச்சராகவும் குலகுருவாகவும் இருந்தவர் கோவிந்ததீட்சிதர்.

ரகுநாதநாயக்கர் தனது ஆட்சிக்காலத்தில் கோவிந்ததீட்சிதரின் சேவையை மெச்சி அவருக்கு எடைக்கு எடை பொன் கொடுத்தார். அதைஅறப்பணிகளுக்குச் செலவிட்ட கோவிந்ததீட்சிதர் கும்பகோணம் மகாமகக் குளத்துக்குப் படிக்கட்டுகள்அமைத்ததுடன் குளத்தைச் சுற்றிலும் 16 மண்டபங்களை எழுப்பினார்.

இவரது காலத்தில் கும்பகோணம் யாகசாலை தெருவில் இவரால் கி.பி.1542இல் தொடங்கப்பட்டராஜ வேதகாவியபாடசாலைக்கு இப்போது வயது 473.

கோவிந்ததீட்சிதர் வழிவந்த ஒன்பதாம் தலைமுறை வாரிசான ரவிதீட்சிதர் வேதபாடசாலை குறித்து, தி இந்துவிடம் பேசினார்.

“ராஜவேத காவிய பாடசாலையில் வேதம் படித்தவர்கள்இப்போது உலகம் முழுவதும் உள்ளனர். வேதபாராயணங்களைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இங்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவை இலவசமாகக் கொடுத்து மூன்று வேதங்களையும் முறைப்படி கற்றுத் தருகின்றனர். மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள்வரையிலான வேதப் படிப்புகள் இங்கு உள்ளன. வேதம் படித்துக் கொண்டே பள்ளிப்படிப்பையும் தொடரலாம்”என்றார் ரவிதீட்சிதர்.

பல ஆண்டுகளாகப் புதுப்பிக்கபடாமல் இருந்த கோவிந்த தீட்சிதரின் ராஜவேதகாவியபாடசாலை மகாமகத் திருவிழாவை முன்னிட்டு கடந்தஏப்ரல் முதல் புதுப்பிக்கப்பட்டு வந்தது. இதற்கானபணிகள் முடிந்து இன்று (நவ.1) மீண்டும் திறக்கப்படுகிறது. (தி இந்து 01.11.2015, சென்னை)

இங்கு 170 பார்ப்பன மாணவர்கள், மூன்று வேதங்களையும், புரோகிதம் செய்கிற முறையையும் சமற்கிருத மொழியையும் 5 ஆண்டுகளுக்குப் படிக்கிறார்கள்

நால்வருணம் இந்து மதத்தில் மட்டுமே உண்டு. பார்ப்பனர் அல்லாதார் அனைவரின் வீடுகளிலும் பார்ப்பனர்கள் புரோகிதம் செய்வதற்கு, இங்கே பயிற்சிஅளிக்கப்படுகிறது. தேவ மொழி எனப்படும் சமற்கிருதம் கற்றுத் தரப்படுகிறது.

இங்கே இவற்றைக் கற்றவர்கள் தமிழகம் முழுவதிலும் இந்தியா முழுவதிலும் உலக நாடுகளிலும் வேதக் கொள்கைகளைப் பரப்புகிறார்கள்.

திராவிட இனத் தமிழர்களுக்கு & இளைஞர்களுக்கு நாம் என்னென்ன கற்றுத் தருகிறோம்?

நன்றி

சிந்தனையாளன்: ஜனவரி, 2016

Pin It