சர்வாதிகாரி ஹிட்லர் சொல்ல முடியாத தொல்லைகளை யூதர்களுக்கு கொடுத்து வந்தார். ஹிட்லர் ஜோதிடத்தில் ஆழ்ந்த பற்றுதல் உண்டு. ஒரு நாள் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்தபோது, “என்னுடைய கடைசி காலம் எப்படி இருக்கும்?” என் மரணம் எப்படி நிகழும்?” என்று கேட்டார். அதற்கு அந்த ஜோதிடர், “யூதர்களின் ஒரு திருநாள் அன்று நீங்கள் மரணம் அடைவீர்கள்” என்றார். “அந்த திருநாள் எப்போது வரும்” என்று ஹிட்லர் கேட்டதற்கு “நீங்கள் என்று மரணம் அடைகிறீர்களோ அந்த நாள் யூதர்களுக்கு திருநாள்தான்” என்று கூறிய ஜோதிடர் உடனடியாக கம்பி எண்ணப் போனார்

Pin It