பிரபலமான அமெரிக்க ஓவியங்களில் ஒன்று ஃபேமிலி போட்ரெய்ட் என்ற படம். இதை வையத் (1882-1945) என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு ஓவியர் வரைந்தது. இதை தகுந்த எக்ஸ்கதிர் மூலம் படம் எடுத்தபோது மேலே தெரியும் படத்திற்குக் கீழே இன்னொரு படத்தை ஓவியர் வரைந்திருப்பது தெரிந்தது. ஓவியர்கள் சிலசமயம் போதிய கேன்வாஸ் துணி இல்லாததால் சிக்கனம் கருதி ஒரு பெயின்டிங்கின் மீதோ இன்னொரு பெயின்டிங்கை வரைந்துவிடுவார்கள். சில சமயம் முதலில் வரைந்த படம் திருப்திகரமாக இல்லாவிட்டால் அதை அழிக்காமல் மேலே பெயின்ட் பூசி வேறு படம் வரைந்துவிடுவார்கள்.
வையஸின் பேமிலி போட்ரெய்ட் படத்திற்குக் கீழே இன்னொரு அற்புதமான குத்துச்சண்டை படம் இருப்பதை ஜெனிஃபர் மாஸ் என்ற பெண் அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி மாநாட்டில் வெளியிட்டிருக்கிறார். அமெரிக்க நாட்டிற்கு இன்னொரு ஓவியப் புதையல் கிடைத்திருக்கிறது என்று அவர் தெரிவிக்கிறார்.
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்