உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து, நேரம் காலம் பாராமல் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு வீண் பொழுதைக் கழிப்பவர்கள் 'அடித்து வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு' (Couch Potato) என்று அழைக்கப்படுவதுண்டு.

கணினியில் Youtube தளத்தில் நிறைய வீடியோ படங்களைப் பார்த்து பொழுது போக்குபவர்களை Youtuber எனப்படுவர். Tuber எனப்படுவது சதைப் பற்றார்ந்த அடி நிலத் தண்டு உடையது என்றும் பொருள்படும்.

உருளைக் கிழங்கையும் Tuber என்று சொல்வர். Youtuber என்பதும் உருளை கிழங்கை உருவகப்படுத்துவதுதான். எனவே கணினியின் முன் ஆணியடித்தது போன்று இடத்தை விட்டு அகலாமல் இருப்பவரை Youtuber என்று அழைப்பது சரியே.

பெரும்பாலான பெண்கள் பகலிலும், மாலையிலும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது தொடர்ந்து தொலைக் காட்சியின் முன் அமர்ந்து 'நீண்ட தொடர்களை' சோகத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது அனைவரது வீட்டிலும் தவறாத காட்சி.

முன்பெல்லாம் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் 'வாசித்து விட்டீர்களா குமுதம்' என்றும் 'கல்கி, ஆனந்த விகடன்' என்றும் பெண்ணின் படம் பிரசுரமாகியிருக்கும். இப்பொழுது பெண்கள் புத்தகங்கள் படிப்பதைக் குறைத்துக் கொண்டு T.V. தொடர்களைப் பார்த்து வருவதாகத் தெரிகிறது.

வீட்டிற்கு உறவினர்களோ விருந்தினர்களோ வந்து விட்டால், எப்பொழுது கிளம்புவார்கள், தொலைக்காட்சியில் தொடர்களை பார்க்கலாம் என்பதிலேயே ஆர்வமாகவும், பரபரப்பாகவும் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலுமுள்ள ஆண்களும், பெண்களும் வேலை நேரம் போக, ஓய்வு நேரத்தில் நல்ல புத்தகங்களையும், செய்தித் தாள்களையும் படித்து வருவது நல்ல பழக்கமாகவும், நல்ல மனநிலையையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.

தொலைக்காட்சி நீண்ட நேரம் பார்ப்பதையும், கணினியில் அவசியமின்றி நீண்ட நேரம் பொழுது போக்குவதையும் தவிர்த்தால் உடல் நலம் பெறலாம்.

அதே நேரம் வாரத்திற்கு ஐந்து நாட்களாவது தினமும் அதிகாலையில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்க்கு பலனளிக்கும் பயிற்சியாகும்.

Pin It