மயக்கம் என்ன என்றொரு திரைப்படம் பார்த்தேன். மிக நல்ல(!!!!) படம். அனைவரும் கரகோஷங்களை எழுப்புங்கள்! வீட்டுக்குச் சென்று இருக்கிற பெண்களை அடியுங்கள்!! உதையுங்கள்!!! கெட்டவார்த்தைகளால் திட்டுங்கள்!!!!

ப‌ட‌ம் என்ன‌ சொல்கிற‌து?

mayakkam_enna_400ஆண் என்பவன் சிங்கம். அதாவது மிருகம். அவன் எந்த அளவுக்குக் கீழ்த்தரமான செயல்களைச் செய்கின்றானோ அந்த அளவுக்கு அவனை அழகான படித்த பெண்ணுக்கு அதே காரணங்களால் பிடிக்கும். அவன் பரதேசியாக இருக்கலாம்; உதவாக்கரையாக திரியலாம்; அவனுக்கு வெறி வரலாம்; குடித்துவிட்டு அடிக்கலாம். கல்லாக வேண்டாம். பைத்தியம் பிடித்தாலும் கணவனே பெண் காணும், பெண் காண வேண்டிய ஒற்றைத் தெய்வம். அவன் கட்டிய மனைவியை வயிற்றில் கருக்கலையும் அளவுக்கு எத்துவான். அனைத்தையும் சகித்துக் கொண்டு, அந்த‌ பொறுக்கியை வாழ்வின் உச்ச‌த்துக்குக் கொண்டு செல்ல‌ வேண்டிய‌ பொறுப்பு அவ‌ளுக்கு இருக்கிற‌து. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்ப‌தை நிரூபிப்ப‌து அவ‌ளுக்கு இட‌ப்ப‌ட்ட‌ ப‌ணி.

ஏனெனில் கணவன் என்ப‌வன் கடவுள்.

முண்டக்கலப்பை என்ற சொல்லின் மீது உருவான அந்த தியாக தீபிகையின் காதல் கரு கலைந்த பின்னும் அவனது பிள்ளையைத் தாங்குவாள். அவனோடு பேசமாட்டாள். ஆனாலும் அதற்கெல்லாம் பின்னும் அடிமையாய் அவன் பின்னாலேயே திரிவாள். திரியவேண்டுமல்லவா... இல்லாவிட்டால் அவளென்ன பத்தினி....? அதற்குப் பின்னால் அவனுக்கு மெல்ல நல்ல புத்தி வரும். அந்த நேரத்தில் அவள் பிரசவத்தை நெருங்குகிற தாய்மையோடு காத்திருப்பாள். அவனெடுத்த ஒற்றை புகைப்படத்துக்கான சர்வதேச விருது கிடைக்கும். அதை வாங்கியவன் இந்த உலகத்திலேயே என்னை இந்த மேடையில் விருது பெறுமளவு உருவாக்கிய தேவதை என் மனைவிதான் என்று புல்லரிப்பான். படம் முடியும்.... விவசாயம் செழிக்கும். பன்னாட்டு முதலீடு குறையும். நாடு சுபிட்சமாகும். சமதர்மம் ஓங்கும்...

யாரும் ஓடிவிடக்கூடாது. இப்போது தான் நம்ம விஷயமே ஆரம்பிக்குது... அதுக்குள்ளே விமர்சனம் முடிந்ததுன்னு நீங்களா நினைச்சா.... பாகவதர் மகாவெறுப்பாகிவிடுவார்..

மயக்கம் என்ன திரைப்படத்தை நிராகரிக்கிறேன். அதற்கு முன் சில வரிகள்.

******************

1.அய்யா உயர்திரு செல்வராகவனார் அவர்களே.... உங்களது உடன்பருப்பை வைத்து தாங்கள் கிண்டுகிற பொங்கல் எல்லாமே மனப்பிறழ்வுப் பொங்கலாகவே இருக்கின்றதே ஏனய்யா...? கோடிக்கணக்கான தமிழ்ச்சமூக வாழ்க்கையில் தங்களது காதல்கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, இப்போது மயக்கம் என்ன... நடுவில் ஒரு தெலுங்கு படம் அது மட்டும் மனப்பிறழ்வு படமல்ல... ஏன்...?மீண்டும் தமிழில் ஆயிரத்தில் ஒருவன் என்ற அபத்தக்குப்பை. இங்கே சொல்லவேண்டிய ஏன்..? தெலுங்கு நுவ்வு மதர்டங்கூ....தமிழ் அதர் டங்கூ என்பதாலா...? தமிழன் இளித்தவாயனா...? அல்லது உம் பார்வைக்கு கிறுக்கனா..?

2.தங்களுக்கு  மிகவும் பிடித்த இடம் கழிவறை என்பதைத் தொடர்ந்து உங்கள் படங்களில் கக்கூசில் காமிரா வைத்து அரும்பணியாற்றி வருவதால் தங்களுக்கு கக்கூசில் கலர்ப்படம் எடுத்த கண்ணியவாளப் புண்ணியவான் என்ற பட்டத்தை கொண்டித்தோப்பு ரசிகசபா ஷார்பாஹ தருகிறோம். வெச்சுக்கோங்க தலைவா.

3.கணவன் ஒரு மிருகமாக இருந்தாலும், மன நிலை பிறழ்ந்தாலும், அவனோடு உடன் கட்டை ஏற்றி அழகுபார்க்குமளவுக்கு சீழ்பிடித்து இருக்கிறது உங்களது முற்போக்கு, பெண்ணிய சிந்தனை. வாழ்த்துக்கள்.

4.தமிழக இளைஞர்கள் எல்லோரும் கடற்கரையில் இரவுகளில் அமர்ந்து கொண்டு ஜீனியஸ் என்று ஒரு அபத்தமானவனை அழைத்துக்கொண்டு பீர் அடித்துக்கொண்டு சரக்கடித்துக்கொண்டு சிகரட் புகைத்துக்கொண்டு அமர்ந்தபடி தான் நேரத்தை கழிக்கிறார்களா..? இதன் மூலமாய் என்ன சொல்ல வருகிறீர்கள் செல்வராகவ டைரடக்கர் அவர்களே..? அது இருக்கிற நிலைமை என்றால் ஆங்காங்கே என்பதனை நிறுவ வேண்டுமல்லவா..? கதாநாயக மிருகத்தை ஏன் அப்படிப் படைக்க வேண்டும்..?தங்கள் பணியா இல்லை பிணியா படமெடுப்பது..?

5.முண்டக்கலப்பை போன்ற சொற்களை குடும்பங்கள் உச்சரிக்க வேண்டுமா..?அருஞ்சொற்பொருள் வேலையெல்லாம் உமக்கெதற்கு...? ஏற்கனவே சோழர் பற்றி எல்லாம் வாந்தி எடுத்துவிட்டு வாங்கிக்கட்டிக்கொண்ட அனுபவம் தந்த தைரியமா..?

6.தன் மகனுக்கும் அவன் நண்பனுக்கும் இடையிலான சர்வதேசப் பிரச்சினையை தீர்த்துவைக்க இருவரிடமும் பேசுவதைக் கேட்காமல் மதுக்கிண்ணத்தை மாறி மாறி நீட்டுகிற வெண்தகப்பர் ஒருவரை காண்பிக்கிறீர்.... அட்டகாசமய்யா...? ஏற்கனவே அரசாங்கம் மதுவிற்கிறது. அரசியல்வாதிகள் மது உற்பத்தி செய்கிறார்கள். கிட்டத்தட்ட 30 சதவீத காட்சிகள் உமது படத்தில் மது பற்றியதாகவே இருக்கிறதே....வாழ்க உம் தொண்டு. வயிறு எரிகிறது இயக்குனரே..... உங்கள் வசதியை சமூகத்தின் மீது வாந்தி எடுக்காதீர்கள். சமூகம் திருப்பி உமிழும் என்பதை மறந்துவிடாதீர்க‌ள்.

dhanush_3607.நீங்கள் நிறுவுகிற காதல் மடத்தனமானது. படைக்கிற பாத்திரங்கள் மனம்பிறழ்ந்தவர்கள். பேசுகிற வார்த்தைகள் ஆபாசமானவை. இவற்றையெல்லாம் உங்களுக்கு வேறு யாருமே சுட்டிக்காட்டுவதில்லையா..? உங்கள் படங்களில் பங்குபெறுகிற மற்றெல்லாரும் மிகச்சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை. மற்ற எல்லாரையும் சிறப்பானவர்களாகத் தேர்வு செய்கிற தாங்கள்.... மற்ற எல்லாரின் பங்களிப்பை அங்ங‌னமே உறுதி செய்துகொள்கிற தாங்கள்.... நீங்களே இயக்குநர் என்பதால் உங்களை மன்னித்து விடுகிறீர்கள் போலும். காலம் மன்னிக்காது செல்வராகவன்!!

8. உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். உயரங்களை ஏறி அடைதல் சிரமம். வீழ்ச்சி சுலபமானது; வேகமானதும் கூட.

9.க‌ண‌வன் எவ்வ‌ள‌வு மோச‌மான‌வ‌னாக‌ இருந்தாலும், 'க‌ல்லானாலும் க‌ண‌வ‌ன், புல்லானாலும் புருஷ‌ன்' என்று வாழவேண்டிய‌துதான் இந்து சமூகத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்டதாக இருந்தது. பெரியார், அம்பேத்க‌ர் போன்ற‌ த‌லைவ‌ர்கள் சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெற்றுத்தந்த உரிமைகளினாலும்தான் இந்தத்‌ த‌லைமுறை பெண்க‌ள், பிடிக்காத‌ க‌ண‌வ‌னை நிராக‌ரிக்கும் திற‌னுடைய‌வ‌ர்களாக‌ இருக்கிறார்க‌ள். நன்கு ப‌டித்து, வேலைக்குச் செல்கிற‌, பொருளாதார‌ ரீதியாக தற்‌சார்பு உடைய‌ பெண்க‌ள் ம‌ட்டுமே, விவாக‌ர‌த்து என்ற‌ தைரிய‌மான‌ முடிவை எடுக்கிறார்க‌ள். ஆணாதிக்க‌ வக்கிர‌ம் பிடித்த‌வ‌ர்க‌ளுக்கு அது ச‌கிக்க முடிய‌வில்லை. அவர்களில் ஒருவரான செல்வராகவன், 'எவ்வ‌ள‌வு ச‌ம்பாதித்தாலும் நீ க‌ண‌வ‌னுக்கு அடிமையாக‌ இருக்க‌ வேண்டும்' என்ப‌தை ஒரு முழுநீள‌ சினிமாவாக எடுத்து இருக்கிறார்.

இத‌ற்காக‌வே 'மயக்கம் என்ன' படத்தை முழுவதும் நிராகரிக்கிறேன், அதில் ஒளிப்ப‌திவாள‌ர் ராம்ஜி, இசைய‌மைப்பாள‌ர் ஜீ.வி.பிரகாஷின் சிற‌ப்பான‌ பங்க‌ளிப்பு இருந்த‌போதும்...

நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக மலத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

Comments

27 comments

27
sujaitha raheem
குறைகளை நீக்கி விட்டு பார்த்தால் மயக்கம் என்ன நல்ல படமே.தன் கணவனுக்கு தாயாகவும் இருக்கும் மனைவி அந்த முடிவைத்தான் எடுப்பாள்.மனைவி விவாகரத்து செய்யலாம்,ஆனால் தாய்?
Ranjith
"கணவனே பெண் காணும், பெண் காண வேண்டிய ஒற்றைத் தெய்வம்".. // அவர் அபடி சொல்ல வரலங. அது அவன் மேல இருக்க காதலுஙக.
raguram
நீங்கள் செல்வா ராகவன் தமிழில் நல்ல படம் எடுக்க வில்லை என்பதால்
ஏன் அவன் தாய் மொழி தெலுங்கை பழைக்கிரீர்
உண்மையான தமிழன் மற்ற மொழியே திட்டமாடான்
நீர் உண்மையான தமிழனா
Roaming Raman
மிகச்சரியான விமர்சனம்.. எனக்கிப்போது படங்கள் பார்க்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது.. எதோ நம்பிக்கையில் இந்தப் படத்தைப் பார்த்து - இடைவேளையின் போதே ஒரு பீர் குடித்த மயக்க நிலைக்குப் போய் விட்டேன்.. தொடர்ந்து சரக்கு ஊற்றி சாகடித்துவிட்டார் டைரக்டர்...

-ரோமிங் ராமன்
thamizhchudar
செல்வராகவனை செருப்பால் அடிக்காத குரை .சொந்த,னொந்த வாழ்வின் வக்கிரம் படமாஉருவாகியிருக்கிரது.பென்கல் அமைப்புகல் விழிப்படையட்டும்.செல்வராகவன் பொன்ரொர் கானாமல் பொவர்.
தமிழ்சுடர்
anbuselvan
தமில் திரைப் பட உலகில் தாலி சென்டிமென்ட் எப்பம் தான் விலகும்?
Vijayaraj
The people above said about that are just compromise thoughts. i think, they have taken Selva Raghavan as best director in Indian cinema. I accept that he has technical knowledge and how to manipulate technicians in a effective manner. But the stories are completely worthless. he thinks that he is wise-acre in the way of making stories and dialogues.
kannan.m
Beautiful Mind ஆங்கில படத்தின் காபி தன் இந்த மயக்கம் என்ன. அந்த படத்தில் ஹீரோ விஞ்சானி. ஆஸ்கார் வாங்கிவிட்டது
ஹீரோ லூசு போல இர்ருபான். பிறகு நோபல் பரிசு வாங்குவான்

http://en.wikipedia.org/wiki/A_Beautiful_Mind_%28film%29
suratha
எல்லா படத்தையும் சரியில்லை என்று சொல்லும் பாகவதரே! உங்களுக்கு தமிழில் எந்தப் படம்தான் பிடிக்கும் (அப்படி ஏதாச்சும் இருந்தால்) என்று சொல்லுங்கள்.
nantha
சரியான விமர்சனம் ......

ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அண்ணனும் தம்பியும் பேட்டி (புதிய தலை) கொடுகும் பொது சொல்கிறார்கள், இது அடுத்த தலைமுறை கான படமாம் .இதை அனைவரும் எற்க வேண்டுமாம், இல்லை என்றால் அவர்களை சமுதாயம் புறக்கணிக்கும் என்கிற விதமாக அந்த பெட்டி அமைகிறது.
மேலும் அவர்களின் படைப்புகளை மக்களின் மேல் வலு கட்டாயமாக திணிக்கும் போக்கும் , தான் செய்தது தான் சரியென்று வாதிடும் போக்கு அந்த படம் முழுவதும் காணப்டுகிறது அந்த பேட்டியிலும் அதே தொனி தான் உள்ளது.
இது போன்ற படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மயக்கம் என்ன - தமிழக இளைய தலைமுறைக்கு கொடுக்கபட்ட போதை மாத்திரை
நன்றி
நந்தா
கார்க்கி ஜான்ஸன்
நன்கு அலங்கரிக்கப்பட்ட மலமா? எவ்வளவு சுலபமாக கூறிவிட்டீர்கள்! நீங்கள் இந்த படத்தைபார்க்க செல்லும்
போதே படத்தில் எதையும் ரசித்துவிடக்கூடாது.
எந்த காட்சிகளை, வசனங்களை குறைகூறலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என
எண்ணிக்கொண்டு சென்றிருப்பீர்கள் என்பது
தெளிவாகத் தெரிகிறது.
ஒரே சந்தேகம் தான் இந்த எண்ணத்தோடு பார்ப்பது இந்த படத்தை மட்டும் தானா என்பது தான் அது.
ஏதோ சொன்னீர்களே ம்ம்ம்ம்..........
நன்கு அலங்கரிக்கப்பட்ட மலமா,
அப்படி என்றால் இந்த விமர்சனம் அதையும் விட கேவலமான ஒன்று.
maakkaan
super விமர்சனம்.
raj vency
செல்வராகவன்,போன்றோர் தமிழ் சினிமாவின் சாபக்கேடு
manushi
நல்ல விமர்சனம். இதுபோன்ற விமர்சனங்கள் நல்ல தமிழ் சினிமா உருவாக வழிவகுக்கும். (ஆனால் இது போன்ற குப்பைப்படங்களை விமர்சனம் செய்து அவர்களைப் பெரிய ஆளாக மாற்ற வேண்டுமா என்பதும் என் கேள்வி.) இந்தப் படத்தை ஏன் பார்த்தேன் என் வாழ்நாளில் என்று வருத்தப்படாத நாளே கிடையாது. தமிழில் நல்ல சினிமா என்பது வெறும் கானல் நீராகவே போய்விடுமோ??????
kamaraj
செல்வராகவன் எடுக்கும் அத்துனை திரைப்படக்களும் ஒரு வக்கிர மனோபாவத்துடன் எடுக்கப்பட்டதை வைத்து பார்க்கும் போது அவரின் மனோபாவமும் மனப்பிழர்வால் பாதைக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
Dinesh
இந்த படம் பற்றி விமர்சனம் செய்யும் அளவிற்கு உமக்கு என்ன அறிவு மயிர் இருப்பதாக நீர் நினைக்கிறீர்கள்..... முதலில் ஒரு விளம்பரப்படமாவது எடுத்து விட்டு வந்து பிறகு மற்றவர் படத்தை விமர்சியுங்கள் உண்மையான மன நோயாளி எனகென்னவோ நீர் தான் என தெரிகிறது...... உண்மையான விமர்சகன் என்பவன் படத்தின் நிறை, குறை அனைத்தையும் சொல்ல வேண்டும் உமக்கெங்கே அது தெரிய போகிறது.....? சீரழிக்கும் சினிமாக்களிள் அவிழ்த்து போட்டு வந்தால் கூட " ஆஹா..... ஓஹோ....?" என்பீர்கள் இது போன்ற படங்களை கண்டால் அதை ஆபாசம் என்பீர்கள்..... உன் கேடுகெட்ட விமர்சன மயிர்க்கு ரசிகர்கள் வேறு... படம் பிடிக்கவில்லை என்றால் உன் வாயையும் அதையும் பொத்திக்கொண்டு இரும்..... இல்லாவிடில் ஒரு " நல்ல படம்" எடுத்துவிட்டு வந்து பிறகு விமர்சியும்....
rajvency
அய்யா,தினேஷ்,அவர்களே,ஏது விட்டால் மயக்கமென்ன திரைப்படத்தை தமிழ் சினமாவின் சிறந்த படமென்று அறிவித்து அதற்க்கு தேசிய விருதும் தரச்சொல்வீர்கள் போலிருக்கிரதே? விமர்சனம் செய்ய்யும் உரிமை திரப்படம் எடுத்தவர்களுக்கு மட்டும்தான் உள்ளதா?தன்னுடைய பணத்தினையும் நேரத்தையிம் செலவழித்து திரப்படத்தினைப்பார்க்கும் பொதுமக்களுக்கு இல்லையென்பதுதான் இறுதி முடிவா?
Guest
இது போன்ற படங்கள் சமுதாயத்தின் புரையோடிய பக்கஙகளை காட்டுவதாக கூறி காட்சி ஊடகத்தை தவறாக பயன் படுத்தி வருகின்றன. இதில் காட்டப்படும் எதுவும் தவறல்ல என்ற முடிவுக்கு இளையோர் வர நேரிட்டால் சமுதாயம் மேலும் சீரழியும். எனவே காட்சி ஊடகத்தை பயன் படுத்தி வரும் புதிய இயக்குனர்கள் அதனை சரியான வழியில் பயன் படுத்திட வேண்டும்.

நேசராஜ் செல்வம் ஹைதராபாத்
kalyana kannan
படம் பார்க்க தெரியலைனா விமரசனம் பன்னாத..!!

if don't know to talk about the rights of a women, pls... quit talking about that
Dinesh
ராஜ்வென்சி, நான் சொல்ல வந்ததை தவறாக புரிந்துகொண்டீர்கள்.. பணத்தையும் நேரத்தையும் செலவழித்து படம் பார்க்கும் நமக்கு விமர்சனம் செய்யும் எல்லா உரிமையும் இருக்கிறது.. அதே சமயம் ஒரு நல்ல விமர்சகன் என்பவன் படத்தின் நிறை, குறை அனைத்தையும் சொல்ல வேண்டும் மேற்குரிப்பிட்ட விமர்சனத்தை பாருங்கள்.... படத்தில் அவர்க்கு நல்ல விஷயம் என்று ஒன்று கூடவா தென்படவில்லை......? அதை தான் நான் கண்டிகின்றேன்..... எவ்வளவோ குறை படத்தில் இருக்கிறது என்பதை நானௌம் அறிவேன்.... வெறும் குறைகளையே அவர் சுட்டிகாடியதால் தான் நானும் அவ்வாறே சொல்ல வேண்டியதாயிற்று..........
soudi siky
தன் மகனுக்கும் அவன் நண்பனுக்கும் இடையிலான சர்வதேசப் பிரச்சினையை தீர்த்துவைக்க இருவரிடமும் பேசுவதைக் கேட்காமல் மதுக்கிண்ணத்தை மாறி மாறி நீட்டுகிற வெண்தகப்பர் ஒருவரை காண்பிக்கிறீர்.... அட்டகாசமய்யா...?
kalaacharam kedumpothellam thiraipadam kaapatra vendum ...
aananal ithai pondra padangal athai melum seealikirathu...
Aruloli T.G.
இந்தப் படத்திற்கு இதெல்லாமே ‘டூமச்’சாகத் தெரிகிறது. தவிர்க்கவேண்டியவைகளும் தவிர்க்கவேண்டியவர்களும் ஏராளம் தமிழர்க்கு இந்நாளில்...!!!
paranthaman
உனக்கு தேவையா ,பிடிகலனா படம் பார்க்காம இருந்திருக்கனும் ,,,,,,,,,,,,எல்லா படமும் அப்படிதான்,,,,,,,,,,உன் பொன்டாடியை ஃப்ரிடம் அஹ வச்ஷ்க்க்ககோ,,,,,,,,,,,,,,,
7539
devarajan
படத்தில் நமது கலாச்சாரத்தைக் குழி தோண்டிப் புதைக்கிற ஒரு செய்தி இருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது. நாயகி என்ன செய்கிறாள், முதலில் நாயகனின் நண்பன் தன்னைக் காதலிப்பதாகச் சொன்னதும் அவள் ஒரு இடத்தில் கூட அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் மௌனமாக அவன் கூப்பிட்ட இடங்களுக்கு எல்லாம் போகிறாள். எதேச்சையாக நாயகனின் நண்பனைப் பார்த்ததும், அவனோடு இருப்பதில் அவளது ஹார்மோன்கள் அதிகப்படியான இன்ப அதிர்வுகளை அவளது உடம்பில் மீட்டி விடுவதால், அந்த ஒரு போதைக்காக விரட்டி விரட்டி அவனைக் காதலிக்கிறாள். நண்பனின் காதலி என்று ஆரம்பத்தில் நாயகன் மறுப்பது போல இருந்தாலும் அவளுடனான " ரசாயன போதை " அவனுக்கும் பிடித்து விடுவதால், தெருவில் இருவரும் முத்தமிட்டுக் கொண்டு காதலில் விழுகிறார்கள்.

நண்பனின் காதலியை காதலிக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியை படத்தில் செல்வராகவன் நாயகனுக்கு ஏற்படுத்தியதில் இருந்தே தெரியவில்லையா, அவர் நமது கலாச்சாரத்தை என்ன அழகாக "பொலி" போட்டிருக்கிறார் என்பது. இதை நீங்கள் விட்டு விட்டீர்களே.
suha
ennakku antha girl da kathaapaathiram pudichuruku
செந்தில்
ஏங்க பாகவதரே உங்களுக்கு வேற வேலை இல்லையா......

வாயிருக்குறதாலே என்ன வேணும் நாலும் எழுதுவீங்களா.....

அந்த பாகவதராவது பாட்டை பாடிக்கிட்டே இருந்தார்........

நீர் உம்ம வாயை எப்ப மூடுவீர்......................................

வாயை திறந்தாலே மலம் ஜலம் ந்னு..... ரைமிங்ல வந்தால் எதை வேண்டுமானாலும் சொல்லுவீங்கலா.......

அய்யய்யோ.......... இதுக்கு நல்ல விமர்சனம் ந்னு வேற நாலு அபத்தங்கள்...........

என்று தணியும் பாகவதரின் தாகம்.............................
surendhar
படத்துல சொல்லபோனா நல்ல கருத்துக்கள் இருக்கு
தனுஷ் அந்த இயற்கை காட்சீகள் எடுத்துட்டு போகும்போது அதை ஆய் என்றூ ஏமாத்துவது ok

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.