(இந்த விமர்சனம் கடந்தகாலத்தில் எழுத தொடங்கி தற்காலத்தில் முடிவடைகிறது. அகில கேலக்சியிலும் ப்ளாஷ் பேக் லேங்குவேஜ் கொண்ட முதல் விமர்சனம் இதுவே)

7 ஆம் அறிவு

surya_7m_arivuதமிழன் பண்டிகைக் காலமென்றால் செய்த, செய்கிற, செய்யவேண்டிய தலையாய, உடலாய, வாலாய செயல் எதுவென்றால் சற்றும் சிந்திக்காமல் நாமொரு முடிவுக்கு வந்துவிடமுடியும்; அது சினிமா தியேட்டரை நோக்கிச்செல்வது தான். எது எதுவானாலும் ஒரு பண்டிகை தினத்தை விழி விரிய இமைக்காமல் படம் பார்க்கிறது தான் அவனுக்குப் பிடித்தமான செயல். நல்ல கதை நல்லதொரு காமிக், மதுரசம் கொட்டுகிற கானாம்ருதம், அபிநயஸ்ரீக்களின் யௌவனம், புருஷர்களின் மேதா விலாசம், சகலகலா பாண்டித்யம் இவற்றுக்கெல்லாம் அடிநாதமாக ஒலிக்கிற கதையொன்று. இவ்வளவு இருந்தால் போதுமானது செட்டுக்களுக்குள்ளே போய்ப் படமெடுத்து வெளியில் விட்டால் அடர்கானக மழை போல் வசூல் இத்யாதிகள் கொட்டத்தான் செய்யும். கொட்டகைகள் ஜனக்கூட்டத்தால் நிரம்பி வழியாமல் இருக்க வழியேதும் உண்டா என்ன..?

ரெட்ஜயண்ட் கம்பெனியார் தயாரித்து பெரும் பணத்தை செலவழித்து எடுத்து வெளியே விட்டிருக்கிற படம் ஏழாம் அறிவு. அதாகப்பட்டது இந்தப் படத்தைப் பற்றி சொல்வதற்கு முன்னால் இது ஒரு வம்சாவளிப்படமென்று நம்மால் சொல்லி ஆனந்தித்துக் கொள்ள முடிகிறது. சென்னை ராஜதானியில் பல பதவிகளை வஹித்து இருக்கிற ஸ்ரீமான் ஸ்டாலின் உடைய புத்ரர் உதயநிதி, தன் நவரச பரிமளத்தால் நாற்திசைகளிலும் தம் புகழ்க்கொடியை நாட்டியவரான சிவக்குமாரரின் புத்ரர் சூர்யா இதன் மெயின்பார்ட்டாக அதுவும் பண்டிகைக்குள் பண்டிகை என்று சொல்வார்களே அதுபோல ரெட்டை வேஷம் கட்டி நடித்திருக்கிறார் என்றால், ஈரேழு பதினாலு லோஹத்திலிருக்கிற புருஷர்களும் பொறாமைகொள்ளும் பெரியதொரு சம்பத்தையும் ராஜதானிகளுடைய சம்பாவனைஹள், மெடல் இத்யாதிஹளையும் வென்று குவித்த மஹாநடிகருமாகிய சீமான் கமல்ஹாசன் உடைய புத்ரி குமாரி ஷ்ருதி அவர்கள் இச்சித்திரத்திலே பிரதான நாயகியாக வேஷம்கட்டி அபிநயங்களும் பண்ணி, அழவும் சிரிக்கவுமாய்த் தன் பண்பட்ட நடிப்பை வழங்கியிருக்கிறதும், வித்யாபதி கவிராஜ் ஸ்ரீமான் வைரமுத்துவின் குமாரர் கவியுவராஜ் ஸ்ரீமான் மதன் கார்க்கி அவர்கள் இப்படத்திலே சீனபாஷையிலொரு பாடலை இயற்றியுமிருக்கிறபடியால், இந்த மூவியை நம்மால் முன்பே குறிப்பிட்டாற்போல் ஒரு குமாரர்களுடைய கைங்கர்யம் என்று கருதவும் போஷிக்கவும் இயலுகிறது.

இந்தத் திரைச்சித்திரத்தை ஒளிகொண்டு பதிவாக்கி நம் மனங்களை கொள்ளை கொள்கிற ரவி கே சந்திரன் உடைய காரிய விசாலம் நம் விழிகளிரண்டை நிறைக்கிறது என்று சொன்னால் அது தான் மெய்யே. இப்படத்துக்கு சங்கீதத்தை ஏற்பாடு செய்திருக்கிறவர் சங்கீதமேதை ஹாரிஸ் ஜெயராஜ் தன் பார்ட்டியாருடன். தனக்கு வழங்கப்பட்டிருக்கிற காரியத்தை கிஞ்சித்தும் பிழையும் சறுக்கலும் இன்றி கையெடுத்து நிறைவேற்றியுமிருக்கிற இவ்விருவருக்கும் நாம் சொல்வதற்கு இரண்டு வார்த்தைகள் உண்டு. அவை சபாஷ், பலே.

இனி இந்த திரைச்சித்திரத்தின் கதையைப் பார்ப்போம்.

களப்பிரர் காலமென்று அறியப்பட்ட காலகட்டத்தில் பல்லவ மன்னனின் வாரிசொருவர் போதிதர்மன் தன் குருமாதாவின் கட்டளைக்கிணங்க பல்லவத்தில் இருந்து கிளம்பி சீனம் செல்கிறார். முதலில் அவரை ஏற்க மறுக்கிற அவர் சென்றிறங்கிய கிராம மக்கள் மெல்ல அவரை ஏற்கின்றனர். கொள்ளை நோய்க்கு வைத்தியம் செய்கிற பாண்டித்யமும், மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படுகிற பாதுகாப்புக் கலை இத்யாதிகளில் அவர் கொண்ட தேர்ச்சியும் கண்டு அனைவருமே அவருக்கு மாணவர்களாகி அக்கலைகளை கற்றுக்கொள்கின்றனர்.

தாயகம் திரும்ப எண்ணுகிற போதிதர்மனுக்கு விஷங்கலந்த உணவைத் தர, அது தெரிந்தும் அம்மக்களின் விருப்புக்காக அம்மண்ணிலேயே உயிர்விடும் போதிதர்மனை குழியில் இட்டு அவர் கற்றுத்தந்த கலைகளை வளர்த்து, அவரை தாமோ என்ற பெயரில் புத்தருக்கு அடுத்தாற்போன்ற இடத்தில் வைத்து வணங்குகின்றனர்.

அதே சீனத்தில் இன்றைய 2011 காலத்தில் அந்த நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வைரசைக் கொண்டு வந்து பரப்பி இந்தியாவை நோய்மயமாக்கி இந்தியாவை அடிமைப்படுத்தவும், போதி தர்மனின் மரபணு சோதனை குறித்து ஆராய்ச்சி செய்யும் யுவதி ஷ்ருதியை கொன்றழிக்கவும் ஆகிய இரண்டு காரியங்களுக்கும் ஒரே கரம்பிய மண்டை சீனனை அனுப்பி வைக்கின்றனர்.

(SORRY FOR THE INTTERRUPTION...HERE AFTER THIS REVIEW WILL BE ONLY AVAILABLE IN PRESENT TAMIL. THANK YOU)

கொய்யால அந்த சீனாக்காரன் தான் அந்த ரெண்டு வேலைக்குமே ஏன் வர்றான்....? அதெல்லாம் கேட்டீங்கன்னா உங்களுக்கு ஆறாம் அறிவுதான். ஜாக்ரதை. அப்பிடி அந்த சீனாக்காரன் அப்டி என்ன கெட்டிக்காரன் என்றால்... அவனுக்கு நோக்குவர்மம் எனும் மனோவசியம் தெரியும். ஒருவரை கண் கொண்டு நோக்கிய உடன் எதிராளியை வசியப்படுத்தி தான் நினைத்த காரியத்தை செய்யவைக்கிறவன்... ஏக தமாஷான அறிவியல் இது... குழந்தை அறிவியல் என்று பேர் சூட்டினால் குழந்தைகள் சண்டைக்கு வருவர்.

அந்த நோக்குவர்மம் போதிதர்மர் இங்கே இருந்து அங்கே போய் அவிங்கியளுக்கு கத்துக்கொடுத்தது.

அந்த சீனன் இந்தியா வர்றான். அதே நேரம் போதி தர்மரோட வம்சாவளியான அரவிந்த் என்னும் இன்னொரு சூர்யாவை வைத்து மரபணு சோதனை நடத்தி அவருக்குள்ளே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற போதிதர்மரோட டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களை தட்டியெழுப்பி.. அவர் மூலமா வில்லனை கொல்றாரு இயக்குநர்.

சூர்யா கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.. ஸ்ருதி நல்லதொரு அறிமுகம். தகப்பனை விஞ்சும். ஆனால் ஒரே ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.. தங்கள் பின் குரல்... (சொந்தக்குரலா அல்லது சிட்டிசன் நக்மாவுக்கு குரல் கொடுத்த அனுராதாவா தெரியவில்லை) தமிழுக்காக இன்னும் கொஞ்சம் கடுமையா உழைக்கணும்.... அதான் தமிழுக்கும் தாங்களுக்கும் நல்லது. (கண்ணை மூடி கேக்குறப்பல்லாம் பேசுறது ஒய்.விஜயாவோன்னு டவுட்டா வருது..) ஒளிப்பதிவு, நடனம் எல்லாம் நல்லா தான் இருக்கு...படம் அதையும் தாண்டி புனிதமானது...                  

இதுக்கு இடையில் எக்கக்ச்சக்க லூசுத்தனங்கள் நிரம்பிய இப்படத்தில் எனக்கு மிகவும் கவர்ந்தது எல்லோருமே செமை காமெடியான விஷயங்களை எல்லாம் சீரியசா லாஜிக்கே இல்லாம செய்துக்கிட்டே சொல்லிக்கிட்டே இருக்கிறது தான்.

1. ஒரு பாஸ்போர்ட்டும் விசாவும் வெச்சுக்கினு, வைரஸ் கிருமிகளை ஏதோ இங்கே இருக்கிற ரிலேசன்சுக்கெல்லாம் சாக்லேட் வாங்கியாரது கணக்கா கொண்டாந்து நடு ரோட்டில ஒரு நாய்க்கு ஊசி போடுறான் வில்லன் மொட்டை.... இது தமாஷ் சீரியஸ் அல்வா நம்பர் ஒண்ணு.

2. மாடர்னா இங்கிலீசெல்லாம் பேசிக்கினு அந்த அரவிந்த் பய்யன் சர்க்கஸ்ல வேலை பாக்குறான்.... அங்கே சைண்டிஸ்ட் ஸ்ருதி அவராண்டே அறிமுகமாகி அவரை ஏமாத்துது. லவ்வெல்லாம் இல்லை...வவ்..வவ்...நு...

3. அந்த கர்மாந்திரம் பிடிச்ச சோக சிச்சுவேஷனுக்கு அதே எஸ்.பீ.பீயை கூப்டு (உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே பாட்டு இல்லீங்க சத்தியமா வேற சாங்கு..) ஒரு சோலோ பேத்தாஸ் சாங்கு வேற....

4. 300கோடி ரூபா வயர் ட்ரான்ச்ஃபர் செஞ்சு விலைக்கு வாங்குன விஞ்ஞானி மாமாவையும் நோக்குவர்மத்தால ஏதோ பஸ் ஸ்டாப்புல இறக்கிவிடுற மினி பஸ் கண்டக்டர் போல கொன்னுர்றான் வில்ல மொட்டை... பபபபயம்மா இருந்தது.... படம் பாக்கிறவங்களை எதுவும்... நல்லவேளை பண்ணலை...

5. எதுக்கு கஸ்டப்பட்டுகினு வைரசெல்லாம் கொண்டாந்து அத்த நாய்க்கு ஏத்தி... அது ஊரெல்லாம் சுத்தி.... அந்த நோய் பரவி... அந்த நோயால நெறைய்ய பேரு செத்து... அதுக்கப்பால நம்ம நாடு கெஞ்சி கையேந்தி அந்த சிச்சுவேசன்ல இந்தியாவை தங்கிட்டே சரண்டர் ஆக்கணும்னு வர்றான் வில்லன்... அவன் தான் அட்டகாசமான நோக்குவர்மனாச்சே.... இந்த படத்துல முக்காவ்வாசி சீன்ல அவன் கண் பார்வையாலயே கலவரங்களை உண்டுபண்றான்... மக்கள் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்கிறாங்க... நூத்துக்கணக்குல சாவுறாங்க... அது தானே எய்ம்... பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன்... ஏர்போர்ட் இங்கெல்லாம் நோக்குவர்மனை நிக்க வெச்சு நோக்கு நோக்குன்னு நோக்கினே இருந்தா போதுமே...

6. அப்பிடி அவன் நோக்கிகினே போனாலும் கூட சூர்யாவை மட்டும் அவனால நோக்க முடியாது... ஏன்னா சூர்யா நோக்குவர்மாவுக்கெல்லாம் நோக்குனோக்குவர்மா.. அதாவது போதிதர்மா. எங்களுக்கெல்லாம் ரத்தம் வர்மா... தூக்கம் வர்மா... அழுகை வர்மா... எதைப்பத்தியாச்சும் டைரக்டருக்கு கவலைவர்மா..? வராதூ..... ஏன்னா ஏழாம் அறிவு இருக்கிற யார்க்கும் இதெதும் வராது.

7. 12 நாள் ஏதோ விரதம் மாதிரி ஒரு குட்டி ஆராய்ச்சி.. அதுல இம்போர்ட் செஞ்ச அத்திப்பழமாட்டம் சூர்யாவை ஜாடி ஜீரால போட்டு ஊற எல்லாம் வெச்சு... ஒரு குழந்தைத்தனமான லேப்ல அதும் அரசாங்கத்தோட லேப்ல என்னென்னவோ ஏத்தி எறக்கி சூர்யாவை ரெடி பண்ணினே இருக்கறதுக்குள்ளே...

8. நம்மளை எல்லாம் காப்பாத்துறதுக்காக தன் இன்னுயிரை ஈந்த வர்றான் நம்ம செல்ல வில்லன் டோங்க்லீ... அவனைக் கொன்னதும் தமிழ்... தமிழறிஞர்கள்.. தமிழன் வரலாறு... புவியியல்... தமிழைப் பெருமைப்படுத்திட்டோம்... வாழ்க வாழ்கன்னு அவங்களே கையெல்லாம் தட்டிகினே படம் முடிஞ்சுதுன்னு லைட்ட போட்டு வெரட்டும் போது தான்... நமக்கு ஆறாவது அறிவே லைட்டா வொர்க் பண்ணுது.

9. திறமை இண்டூ ரிசர்வேஷன்... களப்பிரர் இண்டூ தமிழர்.... பல்லவம் இண்டூ சீனம்.. இந்தியர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போறது.. நாட்டைக் காட்டிக்கொடுக்கிறது.. டி.என்.ஏ. ஆராய்ச்சி, தீசிஸ் பேப்பர் அம்ச்ச ஒரே காரணத்துக்காக ஒரு இளம் பெண் இந்திய விஞ்ஞானியை கொல்ல ஆள் அனுப்பும் சீனா... அதையும் அனுப்பும் போதே... "தம்பி போய்ட்டு வர்றப்ப ரெண்டு ஆம்லேட் வாங்கிவந்துரு" என்ற கணக்காக அந்த சீனனையே வைரஸ் பரப்ப அனுப்புதல்... நோயால் பாதிக்கப்பட்ட அதும் இந்தியா முழுக்க பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களைப் பற்றி கவலைப்படாமல் நம்மையெல்லாம் வெளியே துரத்திவிடுவதிலேயே குறியாய் இருக்கிற இயக்குநர்... அகண்ட ஆரம்பம்.... சுண்டி சிறுத்த முடிவு...

10. இந்தப் படத்தில் மௌண்ட் ரோடில் யானை மேல் சூர்யாவும் ஸ்ருதியும் சவாரி செய்வது போல் ஒரு காட்சி வருகிறது. நல்ல கற்பனை. அழகியல் ததும்பும் காட்சி. பேசாமல் அந்த சீனை ஆரம்ப சீனாகக் கொண்டு தொடங்கி நல்லதொரு காதல் கதையை எடுத்திருக்கலாம்.. அதற்கும் ஆறாம் அறிவுகூட தேவையில்லை.

10.ஏ. மூட நம்பிக்கைகளையும், நம்பமுடியாத பயங்கர கற்பனைகளையும், வரலாற்றைத் திரித்தலையும், அறிவியலை இஷ்டத்துக்கு வளைத்தலையும் எத்தனை அழகான படமெடுத்து முயன்றாலும் ஏற்றுக்கொள்ள இயலாது...

11. ஏழாம் அறிவு = ரசிக தர்ப்பணம்

Comments

31 comments

31
kannan
படம் சுப்பர் சுப்பர்
vijachandar
NALLA VIMARSANM...
Balaji
ஹ ஹ ஹ நல்ல விமர்சனம் நன்பா!
K S RAMESH
ஏழாம் அறிவு சில தமிழர்களின் ஆறாம் அறிவை பட்டை தீட்டியிருக்கிறது. எம் நிஜமான வரலாற்றின் சில துளிகளைத் தெளித்திருக்கிறார். அடிமை மோகத்தில் அடையாளங்களைத் தொலைக்கும் எம்மில் பலருக்கு இத்திரைப்படம் சிறிதேனும் சுரணையூட்டினால் அதுவே முருகதாசின் வெற்றி. இணையற்ற வீரத்தையும் அபூர்வ அறிவியல் ஆற்றல்களையும் அருங்ககாட்சியகத்திற்குள் ஆவணப்படுத்திவிட்டு மொக்கைகளுக்கும் சொத்தைகளுக்கும் பாலுற்றி பாழாகிப்போகிறோம். இந்த விடயங்களை கூற முயன்றமைக்காக இப்படத்தின் சில குறைபாடுகளை மன்னிக்கலாம்.
Guest
விவரிக்க வர்த்தை போதது by vijay
p.william Antony
Please Gentlemen, do not critisize to show your brilliance and vocabulary. It is very easy to comment a creation. But do you really take the pain and stress one would have experienced in completing such a big project. Well let me ask you suppose the film is a box office hit , where you will keep your face?
indiaprem
தியாக ராஜ பாகவதரே ! நீங்கள் பார்த்தது தமிழ் சினிமா ...
amoeba
சூப்பர் தலிவா.. சூப்பர் விமர்சனம்
velayutham
super mokka
senthil
*** சார்,
எதுக்கு சார் உங்க காசை கொண்டு படத்துக்கு போரீங்க. பேசாம வீட்டிலேயே பெரியார் படத்தை பார்த்துக்கிட்டு இருக்க வேன்டியது தானே. உங்கள மாதிரி கருத்து சொல்ல யாரும் படம் எடுக்கல. கருத்து சொல்லறவங்கள இன்றைய மக்கள் ஏத்துக்கவும் மாட்டாங்க. உங்கள மாதிரி நாலு பேர் சேந்துகிட்டு, கருத்து நல்ல படம் கெட்ட படம் நு சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியது தான். படம் ஓடலேன்னா. நீங்க என்ன பணம் திருப்பி தரப்போரீங்களா. உங்கள யாரு சார் படம் பார்க்க சொன்னது. படம் சரியில்லன்னா படம் பிளாப். அவ்ளோதான் நல்லா இருக்கிற படத்தை நீங்க வந்து ஓட வைக்க வேண்டியது தானே... ஏன் அது நேசனல்
அவார்டுக்கு மட்டும்போகுது.உங்களுக்கு போனா 50ரூபாய் தயாரிப்பாளருக்கு 5 கோடி . அதனால சும்மா கருத்து சொல்லறத நிப்பாட்டுங்க./
senthil
அன்புள்ள தியாகராஜ பாகவதரே,

தயவு செய்து இந்த மாதிரி விமர்சனம் எழுதுவதை நிருத்துங்கள். ஒரு படம் ஓடக்கூடாது என்று யாரும் படம் எடுப்பதில்லை. படம் ஓட வேண்டும் என்று தான் தயாரிப்பாளரும் டைரகடரும் படம் எடுக்கிறார்கள். ஆகவே அந்த முயற்சியை வரவேற்கலாம். குறைகள் இன்றி மனிதனே இல்லை என்ற போது, சினிமாவும் விதிவிலக்கல்ல. இன்று முருகதாஸ் என்பவரை திட்டி தீர்க்கிற நீங்களும் சரி, படம் சரியில்லை என்று சொல்பவர்களும் சரி. கஜினி, ரமணா படம் ஹிட் ஆகும் போது எங்கு சென்றீர்கள். அதில் குறைபாடுகள்
இல்லையா? குறையில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் யாராலும் செய்ய முடியாது. இது இது பெரிய தலைவர்களுக்கும் பொருந்தும், தலைவர்கள் மக்களுக்காக எடுத்த கருத்துக்கள், காரியங்கள்
யாவும் எப்போதும் சரியாக இருந்ததில்லை. ஆனபோதும் இது சினிமா. குறைகள் இருக்கத்தான் செய்யும், அதை நாகரிகமாக
சுட்டுதல் மேல்.
Durgaa
இப்பிடி விமர்சிக்கும் திரு பாகவதரே.... முடிந்தால் ஒரு படம் எடுத்து ஜெயிக்க வைத்து காட்டும்....உட்காந்து விமர்சிப்பது சுலபம்...ஒரு படதுக்காக உழைப்பது எவ்வலவு கஷ்டம் என்ரு உம்மை பொன்ரொருக்கு புரியாது.........விமர்சனமெ வராத அலவுக்கு படம் எடுது ஓட வைக்கும் வரை தாம் விமர்சிப்பதை நிருத்துக.......................
Guest
போய் வேற வேலை இருந்தால் பாரும்
தமிழன்
தியாகராச பாகவதர; 7 ஆம் அறிவுக்கு மிகச் சிறந்த மதிப்பீடு செய்துள்ளார; செந்தில் மற்றும் துர;கா ஆகிய இருவரும் தகுதியற்ற முறையில் மதிப்பீடு செய்தவரை மதிப்புக்குறைவாக எழுதுகின்றீர;கள் அதிலும் செந்தில் என்பவருக்கு 8 ஆம் அறிவும்; வேலை செய்கிறது பெரியார; படத்தை பார;த்துக்கொண்டு வீட்டில் இருக்க சொல்கிறீர;கள் தற்போது எதற்கெடுத்தாலும் பெரியாரை குறை சொல்லும் நோய் மன நோயாளிகள் தமிழகத்தி;ல் பெருகிவிட்டாh;கள் என்று தெரிகிறது. 7 ஆம் அறிவிலிருந்து எனக்கு கிடைத்த ஒர; அறிவு போதிதர;மனையும் புத்தனையும் ஏறகாமல் தமிழன் இந்துத்துவத்தையும் பார;ப்பனீயத்தையும் ஏற்றதன் விளைவு தமிழன் தாழ்ந்த நிலையில் இருப்பதற்கு காரணம். சீனன் புத்தம் ஏற்றதால் ஏற்றம் பெற்றுள்ளான் (தமிழன்) போதிதர;மனையும் மதித்து வளம் (மன வளம்.உடல் வளம்) பெற்றுள்ளான்.
Michael Selvam
நன்பர்களே ... முருகதாஸ் சொந்தப்பெயரில் படெமெடுத்திருக்கிரார்... சூர்யா சொந்தப்பெயரில் நடித்த்திருக்கிரார் ... விமர்சனம் அயோக்கியதனமாக புனைப்பெயரில் வருகிரது.

மைகெல் செல்வம் -
திருவாளர் மைக்கேல் செல்வத்துக்கு..
புனைப்பெயரோ பூனைப்பெயரோ...அதில் என்ன அயோக்கியத்தனம்...என் பெயர் த்யாகராஜ பாகவதர் என்றால் அது உமக்கென்ன...?யார் என்றே பார்த்து முதுகினை மோந்துபார்த்து திரிந்து எந்த பயனுமில்லை.உமது பேர் மைக்கேல் செல்வமா...?வைத்துக்கொள்ளும்.எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை.அதே போல் என் பேர் பற்றி எரிகிறது உமக்கு.அதில் கொஞ்சம் நீரூற்றி அணையும்.நானென்ன ஐடி ப்ரூஃப் அட்ரெஸ் ப்ரூஃப் எல்லாம் கேட்கவா செய்கிறேன்..?நீரும் கேட்கவேண்டாம்.கிடைக்காது..
அனானிமஸ் அவர்களுக்கு
வேறுவேலை இருக்கிறது.இல்லை அது முக்கியமில்லை.சினிமா வருகிறது.விமர்சிக்கிறேன்.உம்ம வேலை...?நீரென்ன படமெடுத்து ஆடுகிறீர்...?ஒருவேளை படக்கம்பெனி ஆளா..?சுண்டல் கிடைக்கிற கோயில் எதுவும் திறக்கவில்லையா...?கீற்றுக்குள் அனானிமஸ்சாவது .நான் ஆக்டோபஸ்...ஜாக்கிரதை....
செந்தில்...நான் பொதுத்தளத்தில் வைக்கிற விமர்சனத்துக்கு ஏதோ நீங்களு,ம் நானும் உரையாடிய செல்பேசி அழைப்பைப் போல குழந்தைத்தனமாக பதில் சொல்லி இருக்கிறீர்கள்.நல்லது..வீட்டில் பெரியார் படத்தை அல்ல,மனதில் பெரியார் கருத்தை ஏற்றியதால் தான் இது போன்ற போதைதர்மர்களை என்னால் ஏற்கமுடியவில்லை.என்னை திட்டுவதாக நினைத்து பெரியார் விருதை எனக்கு அளித்திருக்கிறீர்கள்.வாழ்க நீ எம்மான்.எவ்வளவு கோடி செலவு எவ்வளவு வரவு என்று பார்க்க நான் வருமான வரித்துறை சம்மந்தப்பட்டவன் அல்ல.படம் விமர்சித்தால் ஓடாதா..?நல்ல படம் கெட்டபடம் என்பதெல்லாம் அவரவர் அறிவுக்கு உட்பட்டது.நான் வைக்கிறது கருத்து.நீங்கள் எடுத்திருப்பது வாந்தி.நாகரீகம் பற்றி நீங்கள் கற்க வேண்டியது நிறைய்ய இருக்கிறது..நீங்கள் தான் வீட்டிலேயே இருக்கவேண்டியவர்...எழுதிய கருத்துக்கு எதிர்கருத்து வைக்க வக்கின்றி எதையாவது உளரும் உங்களைப் போன்றவர்களைக் காப்பாற்ற பெரியாராலும் முடியாது.என்னாலும் முடியாது.இன்னும் பலமொட்டைகளுக்கு உங்கள் தலையைக் காட்டுங்கள்.
தமிழன்
நண்பரெ விமர;சனம் எந்தப்பெயரில் வந்தால் என்ன ? செய்திதான் முக்கியம் சொந்த பெயரில் படம் எடுத்தவரகள் உட்பட நாம் அணைவரும் நேரில் சென்று தடுத்து நிறுத்த வேண்டிய ஓர;செயல் கூடங்குளம் அணுமின் திட்டம் அதற்கு தமிழனின் தன்மானத்தை திரைப்படத்தில் தட்டி எழுப்பும் நம் சூர;யாவும் முருகதாசும் தியாகராச பாகவதரும் செந்திலும் துர;காவும் மைககல் செல்வமும் தமிழனும்;(நானும்) முன்வரவேண்டும். சொந்தப்பெயரில் படம் எடுத்தவரும் நடித்தவரும் நேரில் வர இயலாவிட்டாலும் அறிக்கையாவது வெளியிட மைக்கல் செல்வம்(சொநதப் பெயர;தானே) முயற்சி செய்ய வேண்டும்.
ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் துர்கா..?
அம்மாவோ அய்யாவோ...துர்கா... படத்தை விமர்சித்தால் "எங்கே நீ படம் எடு..?"ஓட்டலில் சாப்பிடுகையில் காப்பி நன்றாக இல்லை வடை ஊசிவிட்டது.....கருணையோடு காசு கொடுத்துவிட்டா வருவீர்கள்....துர்கா...?அதைக் குறை சொல்வது தானே நியாயம்..அங்கனம் குறை சொன்னால் எங்கே நீ வடை சுடு....தோசை சுடு...என்ன மயித்துக்கு நான் சுடவேண்டும்....?காசு கொடுத்து படம் பார்க்கிற ரசிகன் திருப்தி இல்லாத படத்தை குறை சொல்கையில் அவன் விமர்சகன்...இதே படம் அறிவுக்கு உட்பட்டு நன்றாக இருந்தால் அதைப் பாராட்டுகிறவனும் நானே...விமர்சனம் வைத்தால் நீ படம் எடு...என்றா சொல்வது...?சட்டை சரியில்லை என்று சொன்னால் எங்கே நீ தைத்துக்காமி என்றா சொல்வீர்கள்..?ஆமாம்....உங்களுக்கு இதுபோல பின்புறக் கமெண்ட் மட்டும் தான் எழுத வருமா..?முடிந்தால் கை நடுக்கமில்லாமல் ஒரு ரெண்டு பக்கம் இதே படத்தை பாராட்டி எழுதுங்களேன்....இதே கீற்று அதையும் அனுமதிக்கும்....செய்ய மாட்டீர்கள்....உங்களுக்கும் சேர்த்து தான் நான் எழுதுகிறேன்....அதில் வந்து குதியுங்கள்..
சோழ. நாகராஜன்
என் உழைப்பில் ஈட்டிய காசு. அதைக்கொள்ளையிட முயல்வதோடல்லாமல் என் மூளையையும் சலவைசெய்ய இவர்கள் யார்? போதிவர்மன் ஒரு தமிழனா இல்லையா என்பதே உறுதியில்லை. ஆனால் வரலாற்றை - அது எந்தவகையினதாயினும் - திருத்துவது அயோக்கியத்தனம். அதைத்தான் இந்திய மண்ணில் சங்க பரிவாரங்கள் செய்தன. ஆப்கனில் தாலிபான்கள் செய்தனர். சீன நாட்டை இந்தியாவுக்கு எதிரிபோல நிறுத்த முயல்வது ஆரோக்கியமான கற்பனையாக இருக்கமுடியாது. படமே ஒரு அபத்தக் களஞ்சியம்தான் என்பதை விமரிசகர் அருமையாகச் சொல்லிவிட்டார். ஐந்தாம் அறிவு என்பதற்குக்கூட லாயக்கிலாததுக்குப்போய் ஏழாம் அறிவு எனப் பெயரிட்டவர்களைப் பரிந்துபேசும் இவர்கள் செய்வது இன்னவென்று அறியாதவர்களின்றி வேறென்ன? பரிதாபம் தமிழா உன் ரசனை... அதனைக் குறிவைக்கும் கயமைகூட உனக்குத் தெரியாமலிருப்பது அதனினும் பரிதாபமே...
(பகுத்தறிவுப் பாரம்பரியக் குடும்பத்திலிருந்து இதுபோன்று இன்னும் எத்தனை 'அறிவார்ந்த' படைப்புகளை நீ எதிர்கொள்ளப்போகிறாயோ ..? )
- சோழ. நாகராஜன்
Sugumaran.G
விமர்சனம் செய்வது தவறில்லை. அதில் நிறை குறை இரண்டையும் சொல்ல்வேண்டும். காசு கொடுத்து படம் பார்க்கிறவன் என்ன் கேனையனா?. சுட்டி காட்டப்படும் தவறுகளால் இனி சிறப்பான படம் எடுக்கலாம். ஆனால்,

நாம் இப்படத்தின் மூலம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். யுவான்சுவாங், மெகஸ்தனிஸ் எல்லாம் இந்தியா வந்தார்கள் என்று படித்த நாம் இந்தியாவிலிருந்து அதுவும் தென்னிந்தியாவிலிருந்து போதி தருமர் என்பவர் சீனாவிற்கு சென்றார்
என்பதை ஏன் படிக்கவில்லை. மறைக்கப்பட்டதா அல்லது சரியாக ஆராயப்படவில்லையா? மறைக்கப்பட்டது என்றால் இந்துத்துவம் இந்தியாவை ஆள்கிறதா?
ஆறுமுகம்
முற்பாதி படம் சில புகழ்பெற்ற ஆங்கில படத்தின் தோற்றம் போல் முழவதும் தமிழில் வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ் தி ரைப்படத்துறை வளர ச்சி மற்றும் ரசனையின் வளர்ச்சியை காட்டுகிறது. திரைப்படம் கதையால்தான் நகருகிறது. அதை ஒரு பொழுது போக்காக மட்டுமே பார்க்க வேண்டும். இயக்குனர் அதில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். பிற்பகுதி சினிமா வழக்கமான தமிழ் சினிமாவாக உள்ளது. தமிழ் சினிமா உலகத்தரத்திற க்கு உருவாக இவர் போன்ற இயக்குனர்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. படத்தில் உள்ள சிறுசிறு குறைகள் (கதாநாயகி தேர்வு உட்பட) உள்ளதை தவிர்த்து பார்த்தால் இது ஒரு சிறந்த படைப்பே.
thamizhbhuvan
தவரான விமர்சனம்
kumar
7 ஆம் அறிவின் உங்கள் விமர்சனம் படித்தேன் , ௭ ஆம் அறிவு படத்தின் ஒட்டு மொத்த சாரம்சத்தில் பல தவறுகள் உள்ளன என்பது உண்மை தான்
என்பது என் கருத்து.
உதாரணமாக
படத்தில்
அனைத்து சண்டை கலைகளுக்கும் அடிப்படையான கலை களறி என்று ஒரு வசனம் வருகிறது –இது தவறு கேரளாவின் வர்ம கலை விட பல மடங்கு சக்தி வாய்ந்த கலைகள் இன்றும் தமிழகத்தில் மிகவும் ரகசியமா பயில படுகிறது .களறி வர்மம் தெரிந்த ஒருவர் தொடுக்கும் தாக்குதலை கூட சமாளிக்கும் வகைளும் திரும்பி தாக்கினால் மாபெரும் அழிவுகளை தரும் உக்திகள் இன்றும் நடைமுறை இல் உள்ளது .
கேரளாவின் களறி என்பதே தமிழர்களிடம் இருந்து சென்றதன் ஒரு சிறிய பிரிவுதான் அதில் விளையாட்டு (show) முறையே அதிகம் உள்ளது என்பது என் கருத்து . வர்மம் பற்றி இந்தியன் திரைப்படதில் சொல்லி விட்டதால் அதை விட அடுத்த படியான நோக்கு வர்மம் பற்றி தப்பும்தவறுமாக பல கருத்துகள் இதில் உள்ளன . நோக்கு வர்ம தால் அடுத்தவர்களின் மேல் தாக்குதல் நடத்தமுடியாது என்பது என் கருத்து ,வேண்டுமானாலும் நிலைகுலைய செய்யலாம் பின் அவரை தொடாமல் தாக்க வேறு சில முறைகளை தான் செய்ய வேண்டும்.
அதை பற்றி இதில் எதும் சொல்லப்பட வில்லை அட்டமா சித்தி பற்றி ஒரு காட்சி அதிலும் தவறு உள்ளது .என் எனில் அட்டமா சித்திக்கு முத்திரை மிகவும் முக்கியம் –சூர்யா நெருப்பை அனைக்கும் காட்சி எதோ பழைய சீனா படத்தை பார்த்து எடுத்து உள்ளது தெளிவா தெரிகிறது .
சமணமும்,பௌத்தமும் பஞ்ச பூத கொள்கையை அடிப்டையில் இயங்குபவை அதைபற்றி எந்த கருத்தும் இல்லை .

ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது சரியான புரிதல் இல்லாமல் இப்படம் எடுக்கப்பட்ட உள்ளது தெளிவாக தெரிகிறது .
புராதன படங்கள் எடுப்பவர்களுக்கு இப்படம் ஒரு சிறந்த உதாரணம்
தயவு செய்து உங்களுக்கு எல்லாம் மசாலா படம்தான் எடுக்க முடிந்தால் அதை சரியாக செயுங்கள் எதை செய்தலும் தெளிவாக செய்யுங்கள்
முருகதாசின் தமிழ் பற்று சுருதி உடைய உட்சரிப்பில் தெரிகிறது
சூர்யாவின் ஹேர் கலரிங் தெரிகிறது
என்றும் தமிழையும் , தமிழ் கலைகளும் வியாபாரத்துக்கு அப்பாற்பட்டு பாதுகாக்க இருக்கும் பலரில் ஒருவன்
நன்றி
Arun.K.S
விமர்சனம் நன்றாக உள்ளது. திறைப்படத்தின் நிறை குறைகளை வாசகர்கள் நன்றாக அலசுகின்றார்கள். தி.பா வின் பதிலும் காரசாரமாகவே உள்ளது.
Saro
தியாகா,

கலக்கிட்டிஙக... I really laughed out loud while reading the review...Most of us would have appreciated the few good things in the movie...but your review showed a different angle that too in a very lighter side... Appreciate your effort...Keep up the good work...

Guyz....Take it easy...Dont argue like a child...

Saro
pavan.
ippidi mokka vimarsanam panratha iruntha ini ungada page uke varathe waste agidum.
rajiv
intha mathiri mokka pottutu periya scene podatha adi chevalaya pethuruvan surya va iritate panna thankamatam
ilangovan
முட்டாளுடன் விவாதம் செய்வதில்
உள்ளா பிரச்சனை
தள்ளி நின்று பார்ப்பவர்களுக்கு

"யார் முட்டாள் என்று தெரியாமல் போகிறது"
sabari
ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது சரியான புரிதல் இல்லாமல் இப்படம் எடுக்கப்பட்ட உள்ளது தெளிவாக தெரிகிறது . புராதன படங்கள் எடுப்பவர்களுக்கு இப்படம் ஒரு சிறந்த உதாரணம் தயவு செய்து உங்களுக்கு எல்லாம் மசாலா படம்தான் எடுக்க முடிந்தால் அதை சரியாக செயுங்கள் எதை செய்தலும் தெளிவாக செய்யுங்கள் முருகதாசின் தமிழ் பற்று சுருதி உடைய உட்சரிப்பில் தெரிகிறது சூர்யாவின் ஹேர் கலரிங் தெரிகிறது என்றும் தமிழையும் , தமிழ் கலைகளும் வியாபாரத்துக்கு அப்பாற்பட்டு பாதுகாக்க இருக்கும் பலரில் ஒருவன் நன்றி

விமர்சனம் நன்றாக உள்ளது. திறைப்படத்தின் நிறை குறைகளை வாசகர்கள் நன்றாக அலசுகின்றார்கள். தி.பா வின் பதிலும் காரசாரமாகவே உள்ளது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.