சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வந்துள்ள புதிய விதிகளை திரும்ப பெற வேண்டுமென கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து அறப்போரில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Chennai High Courtசலுகைகளை எதிர்பார்த்து பழகிப்போன சமூகத்தில் எந்த போராட்டத்தையும் ஏளனப்படுத்தி புறக்கணிக்கும் மனநிலையும், சமூக பொறுப்பற்று கடந்து போகும் பொதுப்புத்தியும் மேலோங்கி இருப்பதினால் வழக்கறிஞர்களின் போராட்டமும் பேசு பொருளாக மாறவில்லை. வழக்கறிஞர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாதா? நீதிமன்ற வளாகம் முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குட்பட்டதா? என்ற அபவாதமும் மிகுந்த சிரத்தையுடன் பொது வெளியில் விதைக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்காக வழக்கு நடத்திடும் வழக்கறிஞர்கள் ஏன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திடாமல் போராடி வருகின்றார்கள்? நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? என்றும் விவாதிக்கப்படுகின்றது. சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்க கூடிய ஜனநாயக நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் ஒவ்வொருவருக்கும் சமவாய்ப்பும், சம உரிமையும், பாகுபாடற்ற சட்ட பாதுகாப்பும் ஏன் கிடைக்கவில்லை என்பதை பற்றி யாரும் சிந்திப்பதற்கு தயாராக இல்லை.

யதார்த்தத்தில் எங்கெல்லாம் உரிமை பாதிக்கப்படுகிறதோ எங்கெல்லாம் சட்டம் தன் கடமையை சரியாக செய்யவில்லையோ அங்கெல்லாம் போராட்டம் பல வடிவங்களில் வெளிப்படுகின்றது. எல்லா பிரச்சனைகளுக்கும் நீதிமன்றங்களில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை நம் மக்களிடம் முழுமையாக ஏற்படாததற்கு யார் காரணம் என்பதை விவாதிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

உண்மையில் குற்றமிழைக்கும் வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்திடவோ, கைது செய்திடவோ, மேல்நடவடிக்கை எடுத்திடவோ காவல்துறையினருக்கு தடை இல்லை. ஆனால் வழக்கறிஞர் தொழில் செய்யும் உரிமத்தை முடக்கி வைக்க வேண்டுமென்றால் சில நடைமுறைகள் உள்ளன. வழக்கறிஞர் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கு என்;று மத்திய அரசால் 1961-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள ‘வழக்கறிஞர்கள் சட்டம்’ உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் அகில இந்திய பார் கவுன்சிலும், மாநில கவுன்சில்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

வழக்கறிஞரால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படக்கூடியவர் மாநில பார் கவுன்சிலுக்கு புகார் அனுப்பலாம். ஷ புகாரின் பேரில் விசாரணை நடத்தி அவரது தொழில் செய்யும் உரிமத்தை பார் கவுன்சில் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ நிறுத்தி வைக்கலாம். இந்த முடிவின் மீது பாதிக்கப்பட்டவர் அப்பீல் செய்திடலாம் அதன்பிறகு நீதிமன்றத்திலும் முறையிடலாம். ஆக வழக்கறிஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகள் நடைமுறையில் உள்ளது.

மாநில பார் கவுன்சில் அந்த மாநில வழக்கறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்ற அமைப்புதானே, அவர்கள் எப்படி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்கிற கேள்வி அர்த்தமற்றது. நடைமுறையில் அந்தந்த துறைகளுடைய உள் விசாரணைகள், ஒழுங்கு நடவடிக்கைகள் அந்தந்த துறை உயர்அதிகாரிகளாலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முறையாக தீர்வு இல்லை எனும் போது நீதிமன்றங்களை அணுகிட தடையில்லை. காவல்துறை முறையாக செயல்படவில்லை என்பதற்காக அந்த பொறுப்பை வேறு யாருக்காவது வழங்கிட முடியுமா? பொது ஊழியராக இருப்பவர் அவர் பணியின் நிமித்தம் செய்யும் செயல்களில் சட்ட மீறல் இருந்தால் நடவடிக்கை எடுத்திட முன் அனுமதி வாங்கிட வேண்டும் என்று குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் பிரிவு 197 வலியுறுத்துகிற போது எந்தவிதமான பணிபாதுகாப்பும் இன்றி தனது கடைசி காலம் வரை சுய தொழிலில் வாழ வேண்டிய வழக்கறிஞர் தனது தொழில் செய்யும் உரிமைக்கு சட்ட பாதுகாப்பு வேண்டுமென கோருவது நியாயமா? நியாயமில்லையா?

உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற வாக்கெடுப்பு நடவடிக்கை மூலம் மட்டுமே சாத்தியம். நீதிபதிகள் அரசுக்கும் அதன் அங்கத்தினருக்கும் அஞ்சிடாமல் நீதிபரிபாலனம் செய்திட இந்த சட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் நீதித்துறையின் முதுகெலும்பு என்று சொல்லப்படுகின்ற மாவட்ட அளவிலான நீதிமன்றங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீதிபதிகள் பணிபுரிகின்றார்கள். இவர்களுக்கு என்று தனிப்பட்ட நடத்தை விதிகள் எதுவும் இல்லை. தமிழ்நாடு அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை (ம) மேல்முறையீட்டு விதிகள் தான் மாவட்ட அளவிலான நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான பதிலில் சொல்லியுள்ளது. மாவட்ட அளவிலான நீதிமன்ற நீதிபதிகள் மீது உரிய முன் அனுமதியின்றி போலீசார் வழக்கு பதிவு செய்திட முடியாது. வழக்கறிஞர்களோ, வழக்கின் தரப்பினரோ, பொது மக்களோ கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மீது புகார் மனுக்களை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பினால் அவை கண்காணிப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டு பதில் பெறப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு தான் மேல்நடவடிக்கை எடுத்திட முடியும். ஒரு தரப்பினருக்கு அனுகூலமாக செயல்பட்டு தீர்ப்பை அளித்த நீதிபதி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வழிவகை இல்லை. கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் தண்டிக்கப்பட்டதாக யாரும் கேள்விப் பட்டிருக்க முடியாது. பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி துறை நடவடிக்கை வேண்டுமானால் எடுக்கப்படும். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக சொல்லப்படுகின்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் முறைகளில் இன்னும் பல விமர்சனங்கள் உள்ளன.

தற்போது வழக்கறிஞர் சட்டத்தின் பிரிவு 34-ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சென்னை உயர்நீpமன்றம் புதிய விதிகளை வெளியிட்டு அவை 25-05-2016 அன்று அரசிதழிலும் பிரசுரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்து விட்டன. மேலெழுந்த வாரியாக பார்த்தால் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற ஒருசில வழக்கறிஞர்களை அல்லது குழுக்களை அடக்கி, ஒடுக்கிட இவை அவசியம் என்று தோன்றும். ஆனால் நாளடைவில் பாதிக்கப்பட போவது அனைத்து வழக்கறிஞர்களும் அதன் நீட்சியாக பொதுமக்களும் தான்.

விதி 14-D : விசாரணை நிலுவையில் இருக்கும் போது கீழமை நீதிமன்றங்களைப் பொறுத்த அளவில் அந்த அந்த மாவட்ட நீதிபதி புகாருக்கு உட்படுத்தப்பட்டுள்ள வழக்கறிஞரை தொழில் செய்வதற்கு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தடை விதிக்கலாம் என்று கூறுகின்றது. இந்த தடை உத்தரவின் மீது மேல்முறையீடு யாரிடம் செய்யப்பட வேண்டும், மாவட்ட நீதிபதி என்ன மாதிரியான விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது கூறப்படவில்லை.

முதலில் ஒரு வழக்கறிஞர் தொழில் செய்யும் உரிமத்தை தடை செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உள்ளதா என பார்க்க வேண்டியுள்ளது. மாண்பு உச்சநீதிமன்றம் வழங்குகின்ற தீர்ப்புகள் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 141-ன் படிக்கு இந்த நாடு முழுவதையும் கட்டுப்படுத்தும் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் -எதிர்- மத்திய அரசு என்ற வழக்கில் (AIR-1998-SC-1895) 17-4-1998 அன்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு குற்றமிழைக்கும் வழக்கறிஞரின் தொழில் புரியும் உரிமத்தை தடை செய்யும் அதிகாரம் பார் கவுன்சிலுக்கு தான் உண்டு என்று கூறி விட்ட பிறகு அந்த அதிகாரம் தனக்குள்ளதாக கருதி மாண்பு சென்னை உயர்நீதிமன்றம் அமுல்படுத்தியுள்ள தற்போதைய புதிய சட்டவிதி சட்ட முரணானது என்பதுடன் அதிகாரமற்றதும் ஆகும். ignorantia juris non-excusat என்ற லத்தீன் சொற்றொடர் சட்ட உலகில் பிரபலமானது. அதாவது சட்ட அறியாமை என்பதை ஒருவர் தனக்கு சாதமான நிலைபாட்டிற்காக கையாளக் கூடாது.

ஆக வழக்கறிஞர் சட்டம் 1961-ன் கீழ் உயர்நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விதிகளை வகுப்பதற்கு அதிகாரம் உள்ளது. அதேசமயம் வழக்கறிஞர் தொழில் உரிமத்தை ரத்து செய்யும் நோக்கத்தோடு விதிகளை வகுப்பதற்கு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் மூலம் அல்லாது அதிகாரம் இல்லை என்பதினால் தான் தற்போது வழக்கறிஞர்கள் போராட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நீதிமன்றம் விதிகளை வகுத்து விட்ட பிறகு அவர்களிடம் முறையீடு செய்ய வழியில்லை என்பதினால் தான் ஜனநாயகப் பூர்வமான முறையில் மக்கள் மன்றத்தில் முறையிட உந்தப்பட்டுள்ளார்கள். மேலும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையோ அல்லது வழக்கறிஞரின் தொழில் உரிமத்தை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ரத்து செய்வதை வழக்கறிஞர்கள் எந்த சூழ்நிலையிலும் ஆட்சேபணை செய்திடவும் முடியாது.

மேலும் புதிய சட்ட விதிகளின் மற்ற பகுதிகளையும் ஆராய்வோம்.

விதி 14-A(X) : அடிப்படையற்ற புகார்களை ஒரு நீதிபதிக்கு எதிராக பரப்பினாலோ அல்லது உயர்அதிகாரிகளுக்கு அனுப்பினாலோ அதற்காக வழக்கறிஞர் னுநடியச செய்யப்படலாம் என்கிறது. ஆக கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகார்கள் ஆதாரத்தையும், சாட்சியத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். அதாவது புகார் அனுப்புவதற்கு முன்பு ஆதாரங்களை நீங்கள் திரட்டிட வேண்டும். உங்கள் புலனறிவில், ஆவணங்களின் முதல்நிலை தோற்றத்தில் தோன்றுவது புகார் ஆகாது. கண்கண்ட சாட்சியாக இருந்தால் போதாது ஆதாரத்தையும் சேகரித்திட வேண்டும். நீதிமன்ற அறைக்கு வெளியே நீதிபதிகள் விசயத்தில் நடந்தேறும் அத்துணை நிகழ்வுகளையும் நீதிபதியின் நடத்தையையும் புகார் அளிப்பவர் கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா? ஒரு தரப்பினருக்கு அனுகூலமாக தீர்ப்பு வழங்கினாலும் மேல்முறையீடு தான் செய்து கொள்ள வேண்டும். இது புகார் கொடுக்க முன் வருவோரை தடுக்கும் நோக்கத்துடன் நீதிபதிகள் விருப்பு வெறுப்புடனும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை பாதுகாக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளதாக கருதிட வேண்டியுள்ளது. இதனால் பாதிக்கப்படப் போவது வழக்கின் தரப்பினர்களான பொதுமக்களே.

விதி 14-A (Vii) : நீதிபதியின் பெயரை சொல்லி அல்லது நீதிபதியை சரிகட்டுவதாக சொல்லி பணம் பெற்றிட கூடாது என்கின்றது. ஒரு வழக்கில் தோற்றுப் போன தரப்பினர் தன் வழக்கறிஞரை பழிவாங்கிட வேண்டும் என்பதற்காக அவர் நீதிபதி பெயரை சொல்லி பணம் வாங்கினார் என்று புகார் கொடுத்தால் அந்த புகாரை பொய்யென பின்னால் நிரூபிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் தனது தொழில் செய்யும் உரிமையை இழக்க நேரிடுகிறது.

விதி 14-A(viii) : ஒரு வழக்கறிஞர் நீதிமன்ற ஆவணங்களையோ உத்தரவையோ மாற்றி, திருத்தி விட்டார் என கண்டுபிடிக்கப்படும் போது னுநடியச செய்யப்படலாம் என்கிறது. உண்மையில் இதுபோன்ற நிகழ்வுகள் அரிதாக நடக்கும் பட்சத்தில் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 195-ன் கீழ் புகார் கொடுத்திடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இருக்கின்ற போது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அந்த வழக்கு முடியும் வரை அவர் தொழில் செய்ய இயலாமல் போய்விடும். ஒருவேளை குற்றவியல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டால் தொழில் புரிய முடியாமல் கடந்து விட்ட காலங்களுக்கு யார் இழப்பீடு வழங்குவது.

விதி 14-A(IX) : ஒரு வழக்கறிஞர் நீதிபதியை அவமரியாதை செய்யும் விதத்தில் நடந்து கொண்டால் குற்றம். இதை போன்ற பிரிவு ஏற்கனவே இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 228 ஆக உள்ளது. ஒரு ஆவணத்தின் ஒளிப்பட நகலை இரண்டாம் நிலை சாட்சியமாக குறியீடு செய்யும் போதோ, ஒரு போட்டோ சம்பந்தமாக கேள்வி எழுப்பும் போதோ, நீதிபதிகளுக்கும், வழக்கறிஞருக்கும் சர்ச்சையாகி விட்டாலோ அல்லது ஆணித்தரமாக ஒரு வழக்கறிஞர் வாதத்தை சத்தமாக முன் வைத்தாலோ, கையை நீட்டி பேசி விட்டாலோ அது அவமரியாதை என்று தொழில் செய்யும் உரிமையை இழந்து விட நேரிடும். எப்படித்தான் வழக்குகளை நடத்துவது என்று வழிகாட்டுதல்கள் இல்லாத போது ஷ விதி தவறாக பயன்படுத்தப்படவே வழிவகுக்கின்றது. இதற்கு பதில் நீதிமன்ற நடவடிக்கைகள் முழுவதுமே ஏனைநழ சநஉழசனiபெ செய்யப்பட்டால் இந்த புதிய விதி தேவையில்லை. நீதித்துறையின் வெளிப்படைதன்மையும், பொறுப்புடை தன்மையும் அதிகரித்திடும்.

விதி 14-A(X) : எந்த வழக்கறிஞரும் காலையிலேயே மது அருந்தி விட்டு வழக்கு நடத்திட நீதிமன்றம் செல்வதில்லை. தற்போது ஒரு சில ஊடகங்கள் மது அருந்திவிட்டு கோர்ட்டுக்கு செல்ல வழக்கறிஞர்கள் அனுமதி கோரி போராடி வருகின்றார்கள் என்பது போன்ற சித்திரத்தை ஏற்படுத்துகிறார்கள். தொழில்புரியும் இடம் கோவில் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேசமயம் கோவிலுக்கு வருகின்ற எல்லோரும் நியாயவான்கள் என்பதும் இல்லை. ஆனால் மற்ற புதிய விதிகளுக்கு அங்கீகாரம் வேண்டும் என்றால் மது அருந்தி விட்டு ஆஜராகிடகூடாது என்கிற விதி 14-A(X) இருந்தால் விவாதிக்கவும் வழக்கறிஞர் மீது தவறான அபிப்பிராயம் ஏற்படுத்திட வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த விதி சேர்க்கப்பட்டதாக கருதிட வேண்டியுள்ளது.

வழக்கறிஞர் சுதந்திரமாக தொழில்புரியும் உரிமை வழக்கறிஞர் சட்டம் 1961-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும். ஒருவேளை ஷ சட்டத்தின் கீழ் இயங்கி வருகின்ற பார் கவுன்சில் தேர்தல்கள் முறையாக நடத்தப்படுவதில்லை, பார் கவுன்சில் சீராக நிர்வாகிக்கப்படவில்லை என்றால் அதனை திறம்பட நடத்திட, நிர்வகித்திட, சட்ட கல்வியை மேம்படுத்திட புதிய சட்டங்களை, சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் தவறில்லை. மாண்பு உச்சநீதிமன்றமும் 5-7-2016-ம் தேதியிட்ட Njjpapl;l Mahipal Singh –Vs- State of U.P வழக்கின் தீர்ப்பில் வழக்கறிஞர் சட்டத்தில் சீhத்திருத்தம் செய்திட மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்திட வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே ஒரு மத்திய சட்டத்தின் கீழான அமைப்பிற்குள்ள அதிகாரத்தை வேறொரு அமைப்புக்கு, குறிப்பாக கீழமை நீதிமன்ற மாவட்ட நீதிபதிகளுக்கு வழங்கிட விழைவது ஏற்புடையதல்ல.

மனுநீதிச் சோழனிலிருந்து ஆரம்பிக்கின்ற தமிழர்களின் நீதி வழங்கும் முறையில் இன்று மாற்றங்கள் பல ஏற்பட்டிருக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றம் என்ற பெயர் மாற்றம் வந்தாலும் தாய் மொழியில் வழக்கை நடத்தும் முழு உரிமை இன்னும் வந்து சேரவில்லை. சுதந்திர காலம் தொட்டு இன்று வரை இந்த சமூகத்திற்கு வழக்கறிஞர்கள் ஆற்றி வரும் சேவை மறக்கப்படுகிறது, மழுங்கடிக்கப்படுகின்றன. நாம் சந்திக்கிற அல்லது கேள்வியுறுகிற ஒரு சில வழக்கறிஞர்களின் நடத்தையை மட்டும் வைத்து ஒட்டு மொத்த வழக்கறிஞர் சமுதாயத்தையும் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றோம். சட்டத்தின் ஆட்சியில் சட்ட வல்லுனர்கள் எந்த விதமான சிறப்பு தகுதியும் கோரவில்லை.

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்திற்கு பயந்து நீதிமன்றத்தின், நீதிபதியின் செயல்பாடுகளை விமர்சிக்க அனைவரும் தயங்குகின்ற போது தமிழ்நாட்டில் வழக்கறிஞர் சமூகம் நீதித்துறையை சுட்டிக்காட்டி கேள்வி கேட்க துணிந்து விட்டதினால் அவர்களை கட்டுப்படுத்திட இந்த புதிய விதிகள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாக கருதிட வேண்டியுள்ளது. இதனால் பாதிக்கப்பட போவது பொதுமக்கள் தான்.

எனவே சமூக நீதிக்கான போராட்டமாகவும், நீதித்துறையின் மாண்பை பாதுகாப்பதற்கான போராட்டமாகவும், வாழ்வாதாரத்திற்கான போராட்டமாகவும் பொதுமக்களுக்கான போராட்டமாகவும், ஆற்றல்மிக்க திறமையினால் தற்போது வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்ற போராட்டத்தின் வெற்றியை காலம் தீர்மானிக்கும்.

- சுப்பு & ஜஸ்டின், All India Lawyers Union, வழக்கறிஞர்கள், தூத்துக்குடி

Pin It