• தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!
  • அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!
  • வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!
  • பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ''போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்'' என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ''எடுத்தால் எங்கே வைப்பது'' என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!
  • பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் 'ஏழு தலைமுறைகள்'. அதில் 'இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!
  • மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!
  • ''ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?'' என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ''யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.''
  • ''பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை'' என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!
  • அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!
  • எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. 'தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!
  • ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!
  • 'இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!
  • போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், 'பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!
  • ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!
  • பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!
  • பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ''தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்'' என்பார்!
  • தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!
  • பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!
  • அநாதைக் குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!
  • 'உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!
  • பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!
  • பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!
  • தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ''நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!''
  • ''ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?'' என்றுஅடக்க மாகச் சொல்வார்!
  • 'தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!
(நன்றி: ஆனந்த விகடன்)
 
- திருமாவேலன்

Comments

19 comments

19
Gopinath
மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது அசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம் .அவருக்கு எதாவது ஆனால் உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார் .எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்

நன்றி :அனந்த விகடன்

கட்டுரையில் இடம்பெற்றிருந்த இந்த வரிகளை மறந்தது ஏனோ
Guest
அலெக்ஸ் ஹேவியின் 'ஏழு தலைமுறைகள்' - where can I get this book
IBU/PARIS
BIRABAKARANAAL PATHIKKA PATTA THAMIL THOLARGALI MARANTHU VITTU INTHA KATTURAIKKU JAALRA POADUVATHU EeLA THUROGAM!!!
thala
வ்ருவான் தகலைவன்
குரங்கு
அந்த பெட்ரோல் பார்ட்டிக்கு, மே மாதம் மட்டும் கோடை விடுமுறையா? சிங்களனிடம் சம்மட்டி அடிவாங்கி சாகவிட்டுவிட்டாரே பிரபாகரனை?
bernard
தலைவரை பற்றி வாசித்தென்.
திறம். ஆனால் தலைவர் இப்போ எங்கே?
எல்லாம் தெரிந்த தலைவருக்கு தனது மக்கள் அழியும் செய்தி தெரியவில்லைஜே? அவரின் ஆரம்ப கால கொள்கைகள் எல்லாம் திறம். ஆனால் கடைசி வரை அவர் அதெய் கடைபிடிக்கவில்லை.அதில் நாமும் பிலை விட்டு விட்டோம்[வெளிநாட்டில் உள்ளோர்]கேள்வி கேக்காமல் ஆதரவு வழளங்கியது தான். இனிமேலும் அந்த பிலை தமிழரை அழிப்பதற்கு இடமளிக்க கூடாது.புலிகள் என்ற அமைப்பு அழிக்கப்பட்டது என்னை பொருத்தமட்டில் சரி. இப்படியான அமைப்புகள் இனிமேலும் எமக்கு வேணாம். நன்றி..22.01.10
Milton
மக்களுக்காக தொடங்கினான், மக்களுக்காக வாழ்ந்தான், மக்களுக்காக மடிந்தான். எங்கும் தப்பி ஓடவில்லையே???இதில் என்ன பிழை கண்டீர்...
தமிழ் ஈழத்திற்கு எதிராக செயல்பட்ட எதிரிகளை விட துரோகிகளை களையறுப்பதையே முதல் பணி என்று கொண்டதில் என்ன தவறு?
அவனை கொச்சைபடுத்தினாலும், அவர்களின் நோக்கத்தை, போராட்டத்தை கொச்சைப்படுத்துவது பேடித்தனம்.
இந்திய ரேடார், இஸ்ரேல் போர் விமானங்கள், பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்க, இங்கிலாந்து மேலும் எட்டப்பன் கருணா உதவியுடன் அடைந்த தற்காலிக வெற்றி மட்டுமல்ல, அதை பற்றி இங்கே தம்பட்டம் அடிப்பதும் கோழைத்தனமே...
போர் முடிந்தாலும், போராளிகள் மடிந்தாலும் அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன.....
Agilan
@Milton
மக்களுக்காக தொடங்கினான், மக்களுக்காக வாழ்ந்தான், மக்களுக்காக மடிந்தான். எங்கும் தப்பி ஓடவில்லையே???இதில் என்ன பிழை கண்டீர்...even supporters of Kalaignar ask this qn abt Kalaignar... how can we accept such qns...pls tell me?
tamilan
He is a real hero...no one can say NO for it..one has to have guts to face this kind of life....He has neen a hero all tamilians..things might have changed now..personally I feel we can't comment him by enjoying a luxury life out side of srilanka...let us always remember him for his scarify...
darwin
அவர் தான் உன்மையான தமிழன்.
EBU/PARIS
MAKKALUKKAAGA"VAALNTHAAN" MAKKALUKKAGA"madinthaan" ITHAI YEAN OTTHUKOLLA MANAM VARAVILLAI? NARI THUNNA SEAVAL KOOVAATHU. HITLER KOODA THAN ETHIRIYAI KONNAAN. UNGAL THALAIVAN!? THAN MAKKALAI KONNAVAVAN. RAJE BAKSHAIKUM INTHA AALUKKUM ENNA VITHIYAASAM?
kumar
sir we should not comment anything regarding his highness he is not a commaon man. he is the only savior of tamils
தலைவன் இருக்கிறான்
களத்தில் இருந்த மாவீரரையும் மக்களையும் தவிர வேறு எவருக்கும் அந்த உன்னதமான தலைவரையும் போராட்டத்தையும் விமர்சிக்க உரிமை இல்லை தலைவன் உரையில் மட்டும் தான் உண்மை தெரியும் தலைவனின் வருகையை எண்ணி.........
Kumar
வீர் மரவன் பிரபாகரன் கால் பட்ட இடமெல்லாம்
விடுதலையின் வித்துக்கள் விதைக்கப்பட்டுத்தான்
உள்ளன
அவர் வீர்த்தை உள்வாங்க நந்தி கடலுக்கு ஏன்
விபரீத ஆசை
இயற்கை நிச்சயமாக அவரை உள்வாங்க
அச்சம கொள்ளூம்
அப்படியாயின் என் அண்ணன் வருவான்
தமிழ் ஈழத்திற்கு வழி வகுப்பான்
damodharan
tamizhanum, thannnalam illaadhavanum thambi aagiya annanai thootraar!
Vinayagam. R
unmai thalaivan varuvaan...
suresh
Vaanga engal thalaiva seekiram. Namm sinkalanai vella
nithyadevi
உன்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்
விசெய்ராசன்.மு
களத்தில் இருந்த மாவீரரையும் மக்களையும் தவிர வேறு எவருக்கும் அந்த உன்னதமான தலைவரையும் போராட்டத்தையும் விமர்சிக்க உரிமை இல்லை

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.