இதே போன்ற ஒரு ஜூலை 24ம் தேதி தான் கீற்று இணையதளம் தொடங்கப்பட்டது. இன்றோடு 15 ஆண்டுகள் முடிந்து, 16 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது கீற்று.
கீற்றின் பலம் அதில் குவிந்திருக்கும் கட்டுரைகள். தமிழ்நாடு சார்ந்து எந்த ஒரு செய்தியையும் தேடினால், அது தொடர்பாக குறைந்தது 10 கட்டுரைகளாவது கீற்றில் கிடைக்கும். நாள்தோறும் 5 முதல் 10 கட்டுரைகள் வரை வலையேற்றுவது என்பதைக் கடந்த 15 ஆண்டுகளாக கடைபிடித்து வந்ததால்தான் இவ்வளவு கட்டுரைகளை சேகரிக்க முடிந்தது.
10 படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, பிழை திருத்தி, வடிவமைத்து வெளியிடுவது எவ்வளவு நேரம் பிடிக்கும் செயல் என்பது பத்திரிக்கை / இணையதளங்களை நடத்தி இருப்பவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் இதைச் செய்ய வேண்டும் என்றால், அதற்கு எவ்வளவு கடின உழைப்பும், கடப்பாடும் இருக்க வேண்டும். ஆனால், இதைக் கடந்த 15 ஆண்டுகளாக விடாமல் செய்து வந்திருக்கிறோம் என்பதில்தான் கீற்றின் வெற்றியும், அதில் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளின் தொகுப்பும் அடங்கியிருக்கிறது.
'நாம், நாம்' என்று பன்மையில் கூறுவதால் கீற்றிற்கு மிகப் பெரிய ஆள்பலம் இருக்கிறது என்று நினைத்துவிட வேண்டாம். தொடக்க கால கட்டத்தில் பாஸ்கர், எனது தம்பி சுரேஷ், நான் என இருந்தது, பின்னர் நான் மற்றும் எனது இணையர் ஹேமா என மாறியதுதான் கீற்றின் ஆள்பலம். இடையில் கொஞ்ச நாட்கள் ஒரு முழு நேர ஊழியரை வைத்திருந்தோம். பின்பு, பண நெருக்கடியில் அதையும் நிறுத்தி விட்டோம்.
தற்போது butitis.com என்ற ஆங்கில இணையதளத்தையும் தொடங்கி உள்ளதால், வேலைப்பளு அதிகமாகி உள்ளது. ஆங்கிலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய வேலை மலையளவு இருக்கிறது. கீற்று வேலையை முடித்து, அதன்பின்பு ஆங்கில இணையதளத்திற்கான வேலைகளை முடிப்பதற்கு ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.
வருமானத்திற்காக நான் ஒரு IT நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். கொரோனா பேரிடர் காரணமாக தற்சமயம் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதால், இந்த வேலைப்பளுவை கடும் சிரமத்திற்கிடையே சமாளிக்க முடிகிறது.
ஒரு முழு நேர ஊழியர் இருந்தால்தான் இரண்டு இணையதளங்களையும் தொடர்ந்து நடத்திட முடியும் என்பது நன்றாகத் தெரிகிறது.
கீற்று செலவுகளுக்காக இரண்டு முறை நிதி திரட்டியிருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக கீற்று செலவுகளை எனது IT வருமானத்திலிருந்துதான் செலவு செய்து வந்திருக்கிறேன். ஆனால், முழு நேர ஊழியருக்கும், மாணவ மொழிபெயர்ப்பாளர்களுக்கும் கொடுக்க தற்போது அதிக பணம் தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்புக்கு ரூபாய் 30,000, முழுநேர ஊழியருக்கு ரூபாய் 10 ஆயிரம் என மாதம் 40 ஆயிரம் செலவு பிடிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதனால் தோழர்கள் கை கொடுக்க வேண்டுகிறேன்.
கீற்று, butitiis இணையதளங்களின் சேவையை உணரும் தோழர்கள், நிதி உதவி அளிக்க வேண்டிய வங்கிக் கணக்கு எண்:
A/C NO - 139301503394
A/C Holder's Name - J Hemalatha
Branch - ICICI Bank, West Tambaram
IFSC Code - ICIC0001393
Account Type - Savings Account
UPI ID: jhprathi@okicici
UPI code:
கீற்று, butitis இரண்டையும் வளர்த்தெடுக்க தங்களது ஆலோசனைகளையும், நிதியையும் தாருங்கள்... நிதியுதவி அளிக்கும் தோழர்கள் அது குறித்த தகவல்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்தவும்.
ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க அதிக தன்னார்வலர்களையும், மாணவர்களையும் எதிர்பார்க்கிறோம். ஆர்வம் உள்ளவர்கள் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.
கீற்றின் இந்த 15 ஆண்டுப் பயணத்தில் உடனிருந்த தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள்... உங்கள் உதவியினாலேயே இப்பயணம் சாத்தியமாகி இருக்கிறது.
தொடர்ந்து பயணிப்போம்...!!!
என்றும் அன்புடன்
கீற்று நந்தன்