Moon2009ம் ஆண்டில் உண்டாக இருக்கும் பெளர்ணமி நாட்களில் ஜனவரி 10ஆம் தேதி தோன்றும் சந்திரன் மட்டுமே மிகவும் பிரகாசமாகவும், பெரியதாகவும் தோன்றும். சந்திரன் பூமிக்கு வெகு அருகில் வரும் நாள்தான் அந்த ஜனவரி 10ஆம் தேதி.

பூமியைச் சுற்றிவரும் சந்திரனின் பாதை முழுமையான வட்டம் இல்லை. அது ஒரு நீள்வட்டப்பாதை. 2009 ஜனவரி 10ல் மட்டும் சந்திரன் 50,000 கிலோமீட்டர் பூமியை நெருங்கிவிடுகிறது.

2009 ஜனவரி 10ஆம் தேதி சனிக்கிழமை அன்று பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 357,000 கிலோமீட்டர்களாக இருக்கும். வழக்கத்தைவிட சந்திரன் 14% பெரியதாகவும், 30% கூடுதல் பிரகாசத்துடனும் இருக்கும் என்பது வியப்பான செய்தி இல்லையா?

- மு.குருமூர்த்தி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.