Fat manவெயில் படாமல் அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறைதான் உடல் பருமனாவதற்கு ஒரு காரணம் என்று நாட்டிங்காம் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. உடம்பில் பழுப்பு கொழுப்பு என்றும் வெள்ளைக் கொழுப்பு என்றும் இரண்டு ரக கொழுப்புகள் உள்ளன. உடல் குண்டாவதற்குக் காரணம் வெள்ளைக் கொழுப்பு. பழுப்புக் கொழுப்பானது குளிர்காலத்தில் உடம்பை சூடாக வைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட பொருள். எடைக்கு எடை, சக்கரையைவிட அது 300 மடங்கு அதிக உடல் சூட்டைக் கொடுக்கக்கூடியது.

பிறந்த குழந்தையின் உடலிலும், குளிர்காலத்தில் நிலத்தடியில வளைக்குள் ஹைபர்னேஷன் செய்யும் முயல் போன்ற உயிரினங்களிலும் பழுப்புக் கொழுப்பு காணப்படுகிறது. இது நல்ல கொழுப்பு. உடலை குண்டாக்காது. உடலில் வெயில்பட்டால் பழுப்புக் கொழுப்பு உருவாகிறது. வெயில் இல்லாத குளிர்காலத்தில் இது வெப்பம் கொடுத்து உடம்பைக் காக்கிறது. மனிதர்கள் வெயில்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் சாப்பிடும் சாப்பாடு வெள்ளைக் கொழுப்பாக மாறி உடம்பை குண்டாக்கிறது.

கொஞ்சமாவது தினமும் வெயில் காயுங்களேன்!

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

 

Pin It