அமினோ ஆசிட் என்கிற வைட்டமின் குறைபாடு காரணமாக புருவ முடி நரைப்பது உண்டு. தாய் தந்தையின் வம்சவழி காரணமாகவும் புருவ முடி நரைக்கலாம். கடுமையான காய்ச்சலில் பாதிக்கப்படுவோருக்கும் இப்படி நரை வருவதுண்டு. இது ஒன்றும் கவலைப்பட வேண்டிய விஷயமில்லை. தோல் மருத்துவரை அணுகி தக்க சிகிச்சை பெற்றால், ஆறு மாதத்திலேயே இந்த புருவ நரைக்கு குட்பை சொல்லிவிடலாம்.
கேள்வி : எனக்கு 23 வயது ஆகிறது. கீழ் பல் வரிசையில் இந்தப் பக்கம் நான்கு, அந்தப்பக்கம் நான்கு பற்கள் சொத்தையாகிவிட்டன. வலி எதுவும் இல்லை. பல்லைப் பிடுங்கினால் கன்னம் ஒட்டிப் போய்விடும் என்கிறார்கள் வீட்டுப் பெரியவர்கள். பல்லைப் பிடுங்கி விட்டுப் பல்செட் வைத்துக் கொள்ளலாமா? வேறு பல் வைத்துக்கட்டினால் கடித்து சாப்பிட முடியுமா?
எல்லா சொத்தைப் பற்களையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை. எடுக்காமலேயே வேர் சிகிச்சை செய்ய முடியும். அப்படியே எடுக்க வேண்டுமென்றாலும் புதிய மருத்துவ முறைகளில் செயற்கைப் பல் கட்டுவது எளிது. அவற்றை வைத்து உணவை நன்றாக மென்று சாப்பிட முடியும். உங்கள் வயதில் பல்லை எடுத்தால் முகத்தில் பெரிய மாற்றம் தெரியாது. கன்னம் ஒடிசலாகாமல் கட்ட முடியும். பயப்படாமல் உடனடியாகப் மருத்துவரை நேரடியாக அணுகுங்கள்.
(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
புருவமுடி நரைப்பது ஏன்?
- விவரங்கள்
- நள ன்
- பிரிவு: தலை