கடவுளுக்குப் பயப்படும் தாயாக இருப்பதுதான் பிள்ளை வளர்ப்புக்கு நல்லது என்று நம்பிய காலங்கள் போய்விட்டன என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வுகள் காட்டுகின்றன. இதுபற்றி, “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சில்” ஒரு கட்டுரை வந்திருந்தது. How Secular Family Values Stack up என்ற தலைப்பில், ஃபில் ஜுகர்மேன் (Phil Zuckerman) என்பவர் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். இவர் சமூக இயல் துறையில் பேராசிரியராக அமெரிக்கா வின் ஞவைணநச கல்லூரியில் பணியாற்றுகிறார். பல நூல்களையும் எழுதியுள்ளார்.

child with religious symbols2010இல் டியூக் பல்கலைக்கழகம் ஆய்வொன்றை மேற்கொண்டது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் இனவெறிக்கு ஆளாவதில்லை. சக மாணவர்களின் தீய பழக்கங்களால் கெட்டுப் போவதில்லை. மனதில் வஞ்சம் வைப்பதில்லை. தேசிய வெறிக்கு ஆட்படுவதில்லை. போர் வெறியர்களாக இருக்கமாட்டார்கள். அதிகாரத்துவப் போக்கு அவர்களிடம் வராது. சகிப்புத் தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. கடவுள் நம்பிக்கையோடு வளர்க்கப்படும் குழந்தைகளைக் காட்டிலும் நம்பிக்கையில்லாதவர்களாக வளர்க்கப்படும் குழந்தைகள் பல அம்சங்களிலும் சிறந்தவர்கள் ஆகிறார்கள் என்ற ஆய்வு முடிவுகள் பழைய நம்பிக்கைகளைத் தகர்ப்பனவாக உள்ளன.

தற்போது அமெரிக்காவில் மதமற்றவர் களின் எண்ணிக்கை 23 விழுக்காடாக உயர்ந் திருக்கிறது. 1950களில் அமெரிக்காவில் மதமில்லாதவர்களின் எண்ணிக்கை வெறும் 4 விழுக்காடு மட்டுமே. கடவுள் இல்லை என்ற போக்கு அதிகரித்து வருவதால், மதமில்லாத வகையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எப்படி வளர்க்கப் படுகிறார்கள் என்பது பற்றி ஆய்வாளர்கள் கூடுதல் கவனம் செலுத்து கின்றனர்.

ஜுகர்மேன் சொல்வதைக் கேளுங்கள் : மதம் அளிக்கின்ற பாதுகாப்பும் தர்ம சிந்தனையும் இல்லை யென்றால் செயலற்றவர்களாக, நம்பிக்கையிழந்தவர்களாக, நோக்கமற்றுத் திரிபவர்களாக ஆகிப் போவார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால் அது அப்படி இல்லை. மதமற்ற குடும்பங்கள் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த அடித்தளத்தை உருவாக்கித் தருகிறார்கள். இதனைப் பேராசிரியர் வார்ன் பெங்ஸ்டன் உறுதி செய்கிறார். வார்ன் பெங்ஸ்டன் பல தலை முறைகளின் மாற்றம் பற்றிய நீண்டகால ஆய்வினை மேற்பார்வை செய்பவராவார். இந்த ஆய்வுதான் அமெரிக்கத் தலைமுறைகள் பற்றிய மிகப் பெரிய ஆய்வாகும். மத நம்பிக்கையற்ற குடும்பங்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்து வருவதைக் கண்ட பெங்ஸ்டன், 2013இல் மதச்சார்பற்ற குடும்பங்கள் என்ற அம்சத்தையும் ஆய்வில் இணைத்தார்.

“மத நம்பிக்கையுள்ள பெற்றோர்களைக் காட்டிலும் மத நம்பிக்கையில்லாத பெற்றோர்கள் தங்களின் நேர்மை-தர்மம் பற்றிய கொள்கையில் இழை பிசகாதவர்களாக இருக்கிறார்கள்” என்று பென்ஸ்டன், ஜுகர்மேனிடம் தெரிவித்தார். “மதச்சார்பற்ற குடும்பங்களின் பெரும் பகுதியினர் ஒரு நோக்கத்துடன் கூடிய வாழ்க்கையை நடத்து கின்றனர். அவர்களின் இலக்குகள் தெளிவாக இருக்கின்றன. அவர்கள் நன்னெறி உணர்வுள்ள வர்களாகவும் இருக்கிறார்கள்” என்றும் அவர் சொன்னார்.

மத நம்பிக்கையற்றவர்களுக்கு நன்னெறி என்பது மிகவும் எளிய கோட்பாடு. மற்றவர்களைப் புரிந்துகொண்டு அதற்கு இணங்க செயல்படு என்பதுதான் அந்தக் கோட்பாடு. மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதனையே நீ அவர்களுக்குச் செய் என்பது எல்லாக் காலத்துக்குமான கோட்பாடாகும். அதற்கு அதீதச் சக்தி ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை தேவையானதாக இல்லை.

அப்புறம் மற்றொரு ஆச்சரியமான செய்தியைக் கேளுங்கள். “அமெரிக்கச் சிறைகளில் உள்ளவர்களில் நாத்திகர்கள் அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். 1990களுக்குப் பின்னர் சிறைப்பட்ட நாத்திகர்கள் அநேகமாக இல்லை” என்று அமெரிக்க மத்திய அரசின் சிறைத்துறை தெரிவிக்கிறது.

இதே விஷயத்தைத்தான், கடந்த ஒரு நூற்றாண்டுக் குற்றவியல் ஆவணங்களும் காட்டுகின்றன என்று, ஜுகர்மேன் சொல்கிறார். “எந்த மதத்தையும் சாராதவர்கள் அல்லது மதத்தொடர்பு இல்லாதவர்கள் குற்றம் செய்தவர்களின் பட்டியலில் மிகக் குறைவாகத்தான் காணப்படுகிறார்கள்” என்றார் அவர்.

கூடுதல் செய்தியொன்று! மத நம்பிக்கையற்ற குழந்தைகள், மத நம்பிக்கையுள்ள குழந்தைகளைக் காட்டிலும் சிறப்பாகக் கற்பனையையும் புனைகதை களையும் யதார்த்தத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் என்று, கடந்தஆண்டு பி.பி.சி. வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஆய்வின் இணைப்பையும் அளித்துள்ளது. ஆய்வை நடத்தியது போஸ்டன் பல்கலைக்கழகம் ஆகும்.

ஆய்வின்போது கற்பனைக் கதைகளை அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தனர். பின்னர், விசாரித்தபோது மதநம்பிக்கை யுள்ளவர்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகள் அந்தக் கற்பனைகள் அனைத்தும் உண்மை என்று நம்பினர். ஆனால், மதம் சாராதவர்கள் வளர்த்த குழந்தைகள் இவையெல்லாம் கற்பனை என்று தெளிவாகச் சொன்னார்கள்.

மதச்சார்புள்ளவர்களின் குழந்தைகள் ஏன் கற்பனைக் கதைகளை யதார்த்தம் என்று குழப்பிக் கொள்கிறார்கள். ஏனென்றால், குழந்தைகளின் ஆய்வு உணர்வை மதம் குழப்பிவிடுவதால் அவர்களால் கற்பனையையும் யதார்த்தத்தையும் பிரித்தறிய முடியவில்லை. குழந்தைகளை சுயமாக சிந்திக்க விடுங்கள்.

ஆதாரம் : Religion and Public Life PEW Research of Centre

பரமண்டலத்துப் பிதா தண்டிப்பாரா?

ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் கொடுமை உண்மைதான் என போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைக் களைந்திட உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார். மதங்களின் மடாலயங்களும், கன்னி மாடங்களும் ‘கலவிக் கூடங்கள்' ஆகிவிட்டன! மதவெறி தகர்த்து மனித நேயம் காப்போம்!

Pin It