rajnath singh with cow

கோவை மாவட்ட மாட்டுக்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் நிம்மதி இஸ்மாயில் - முனிரா இணையரின் நேர்காணல். 2016 செப்டம்பர் இதழின் தொடர்ச்சி...

கோசாலைகள் தொடங்கப்பட்டால் யாருக்கு லாபம் விவசாயிகளுக்காஅல்லது அரசியல் தொழில் அதிபருக்கா?

கோசாலை நிறுவனங்களை அரசே உருவாக்க வேண்டும். ஆனால் அதை அரசு உருவாக்க வில்லை. தனிநபர்கள்தான் அதை எடுத்து நடத்துகிறார்கள். இப்பொழுது இந்தியாவின் முதுகெலும்பு விவசாயின்னு சொல்கிறார்கள். ஆனால் விவசாயிகள் பொருளாதாரம் சீர்குலைந்து பெரும்பாலான விவசாயிகள் தற்கொலைதான் செய்து கொள்கிறார்கள்.

விவசாயி ஒரு மாட்டை வளர்த்து பால் கறந்து விற்கப்படுகிறது. இனி இந்த மாடு பால் தராது என்று தெரிந்த பின் அதைச் சந்தையில் விற்பனை செய்து அந்த விற்பனை செய்த பணத்தில் கொஞ்சம் முதலீடு போட்டால்தான், வேறு ஒரு மாட்டை வாங்கமுடியும். அப்படி இருக்கும்போது இந்த மாதிரிச் சட்டம் கொண்டு வந்தால் விவசாயிகளுக்குத்தான் பாதிப்பு ஆகும்.

இதனால் பொருளாதாரம் நசிவடைகிறது. இதுவே விவசாயிகளை மேலும், மேலும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிறது. வெளிநாடுகளைப் பொறுத்த வரையில் விவசாயிகளுக்கு எல்லாச் சலுகைகளும் இருக்கிறது. ஆனால் நம் நாடுகளில் விவசாயத்திற்கு உண்டான சலுகைகள் மிகவும் குறைவு. இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வும் இல்லாமல் பசுவதைத் தடைச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள். விவசாயிகளுக்கு எந்த ஒரு நிவாரணமும், சலுகைகளும் இல்லை. எந்த ஒரு முடிவும் இல்லாமல் சட்டம் கொண்டுவருகிறார்கள். கோசாலைகளும், டிரஸ்ட்டுகள் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்தால் அதனை நாங்களே வரவேற்கிறோம்.

கோசாலைகளுக்கு பி.ஜே.பி அரசு பண்டு ஒதுக்குகிறார்கள் என்கிறார்கள் அது உண்மையா?

உண்மைதான் டிரஸ்ட் ஆரம்பிக்கிறார்கள் சூ.சு.ஐ.பண்டு இருக்கிறது. டிரஸ்ட் மூலமாக வசூல் செய்யப்படுகிறது.

மாடு வியாபாரம் சம்பந்தமான சட்ட ரீதியான சிக்கல்கள் பற்றி சொல்லுங்கள்

நாம் வண்டியில் மாடுகளை ஏற்றிக் கொண்டு போகும்போது வண்டியை பிடிப்பது சு.கூ.டீ. அதிகாரிகள், காவல்துறை இவர்கள்தான் வண்டியை பிடிக்கவேண்டும். ஆனால் கோசாலை நிறுவனங்களை ஆரம்பித்தால் அதில் இருப்பவர்கள் வண்டியை தடுக்கிறார்கள். வண்டி ஓட்டுனரை அடிக்கிறார்கள். வண்டிசாவி, கைப்பேசி எல்லாவற்றையும் எடுத்துவைத்து கொள்கிறார்கள். அவர்கள் சட்டத்தைக் கையில் எடுக்கிறார்கள். அதன் பிறகுதான் காவல்துறை அதிகாரிகள் வருகிறார்கள்.

பின்பு அவர்களிடம் வண்டி ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் காவல்துறை மாடுகளைப் பராமரிக்க முடியாமல் கோசாலைகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். பின்பு வழக்குத் தொடரப்படுகிறது. வழக்குத் தொடர்ந்தாலும் நாங்கள் தான் வெற்றியடைகிறோம். மாட்டின் உரிமையாளர் நாங்கள்தான் அதனால் மாட்டை எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கிறது.

ஆனால் கோசாலை நிறுவனங்கள் மாடுகளை ஒப்படைப்பது கிடையாது. நீதிமன்ற ஆணையை மதிப்பது கிடையாது. அதனை அவமதிப்பு செய்கிறார்கள். நாங்கள் போய் மாடுகளைக் கேட்டால் கோசாலையின் உரிமையாளர் இல்லை என்பதும், மேனேஜர் இல்லை என்றும் கூறி எங்களை திருப்பி அனுப்பி வைத்துவிடுகிறார்கள். அதற்கு இடையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி இல்லாமல் மேல் நீதிமன்றத்துக்குப் போய் இடைக்கால உத்தரவு பிறப்பித்து விடுகிறார்கள்.

நாங்கள் மாடுகளை இத்தனை நாட்கள் கோசாலை நிறுவனத்தில் வைத்து பராமரித்தோம். அதற்கு எங்களுக்கு பராமரிப்புச் செலவு வேண்டும் என்று கூறிவிடுகிறார்கள். இதன் காரணமாக நாட்கள் இழுத்தடிக்கப்படுகிறது. பின்பு நீதிமன்றமும் பராமரிப்புச் செலவைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்படும்போது ஒரு மாட்டின் விலையைவிடக் கூடுதலாக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறோம்.

இதனால் நாங்கள் நினைப்பது என்னவென்றால் ஒரு மாட்டை விலை கொடுத்து வாங்க வழக்குத் தொடர்ந்து, நீதிமன்றம் சென்று காவல்துறையிடம் சென்று அலைவதைவிட மாடுகளைப் பிடித்தாலே இந்த தொழிலே ஆகாது என்று செல்லி அப்படியே விட்டு, விட்டு போய்விடுகிறார்கள். இதனால் நிறைய குடும்பங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. வியாபாரிகள் கடன்வாங்கி இந்தத் தொழிலை நடத்தலாம் என்று நினைப்பார்கள். ஆனால் நிறையப் பிரச்சனைகள் இருப்பதால் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

மாடு வியாபாரம் சம்பந்தமாக இருக்கும் அரசியல் சிக்கல்களை பற்றி சொல்லுங்கள்

கோவை மாவட்டத்தில் வெள்ளிங்கிரி கோசாலை நடத்தப்பட்டு இருந்தது. அதனுடைய உரிமையாளர் $தேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவகணேசன். அவர்தான் கோயம்புத்தூரில் பிரச்சனை ஏற்படக் காரணமாக இருந்தார். அவர் கோயம்புத்தூரில் ‘கேட்டில்கேர்’ என்ற அமைப்பை உருவாக்கினார். 40 இலட்சம் ரூபாய் குடுத்து உருவாக்கினார். அதனால் நிறையப் பிரச்சனைகள் ஏற்பட்டது.

அப்பொழுது அரசு அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு இதை இப்படியே விட்டுவிட்டால் மதக்கலவரம் ஆகிவிடும் என்று நினைத்து அதிகமான முயற்சிகளை மேற்கொண்டு இனிமேல் நீங்கள் எந்த கோசாலைகளையும் தன்னிச்சையாக செயல்படுத்தக்கூடாது. எதுவாக இருந்தாலும் நீங்கள் அரசு அதிகாரிகளிடம்தான் சொல்ல வேண்டுமே தவிர சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கக்கூடாது என்று அறிக்கை விட்டது.

இனிமேல் நீங்கள் செய்தால் உங்கள் மேல் நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவிட்டார்கள். நாங்கள் எங்களுடைய வாழ்வாதாரத்திற்காகப் போராட வேண்டியிருக்கிறது. ஏனென்றால் எங்களுடைய மூதாதையர் காலத்திலிருந்து இந்த தொழிலைச் செய்து வருகிறோம். அதனால் நாங்கள் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

நாங்கள் எந்த ஒரு கோசாலையும் ரோட்டில் வந்து மாடுகளை பிடிக்கக்கூடாது என்று சொல்லி அரசு அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்றோம். அதிகமான போராட்டங்களை நடத்தினோம். இதற்குக் கொள்கை ரீதியாக நிறைய அமைப்புகள் எங்களுக்கு உதவி செய்தன. அதில் குறிப்பாக பெரியார் திராவிடர் கழகம் இராமகிருஷ்ணன் அவர்கள், த.மு.மு.க, தலித் இயக்கம், விடுதலை சிறுத்தைகள்கட்சி, செங்கோட்டையன், ஆதித்தமிழர் பேரவை என 17 இயக்கங்கள் உதவியாக வந்தன. எங்களுடைய உயிருக்குக் கூட நிறைய அச்சுறுத்தலகள் ஏற்பட்டது. இந்த இயக்கங்கள் எல்லாம் ஒன்று திரண்டதால் எங்களுடைய உயிருக்குப் பாதுகாப்பு ஏற்பட்டது. எங்களால் வெற்றியடைய முடிந்தது.

மாட்டுக்கறி கடைகளுக்கு வங்கிகள் மூலமாக கடனுதவி அளிக்கப்படுகிறதா?

மாட்டுக்கறிக் கடைகளுக்கு சூயடிெயசன Bயமே டிக ஐனேயை, இதன் தலைமை அலுவலகம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இதன் மூலமாக கடனுதவி அளிக்கப்படுகிறது. இதில் ஒரு குழு அமைத்தூள்ளார்கள். அதில் 3 ஆண்கள், 2 பெண்கள். இவர்கள் ஏரியா வாரியாக ஒவ்வொரு கடைகளுக்குப் போகிறார்கள். கடைகளில் கடையின் சதுர அடியைப் பொறுத்துக் கடனுதவி செய்கிறார்கள் 7. 5 சதம் மாதாமாதம் செலுத்துவது கடனும் வட்டியுமாக 36 மாதங்களில் கடனைக் கட்டாயமாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற விதத்தில் கடன் அளிக்கப்படுகிறது.

எப்படியெனில் கடைக்குத் தேவையான அனைத்தையும் அவர்களே நமக்குக் கொடுத்து விடுவார்கள். நாங்கள் முதலில் அயன்ராடு வைத்து இருந்தோம். ஒரு வேளை அது துருப்பிடித்துப் போனால் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என்று மெட்டல் ராடு குடுத்து இருந்தார்கள். அந்த மெட்டல் ராடுகளில் தான் வளையங்களை பயன்படுத்த வேண்டும். அந்த ராடு கூட துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த ராடுக்கும் நாம் நிற்கும் இட்த்திற்கும் குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும்.

கடையில் டைல்ஸ் கற்கள்தான் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இதை வந்து அந்த ஏரியா மேனேஜர் பார்வையிடுவார். அதன் பிறகு 1 மாதத்தில் படிப்படியாகக் கடன் தொகை அளிக்கப்படும். அந்த கடன் தொகை முடிந்து 3 மாதத்தில் இன்னொரு தொகை அளிக்கப்படும். 36 மாதத்தில் கடனை எந்த ஒரு நிலுவைத் தொகையும் இல்லாமல் திரும்பச் செலுத்த வேண்டும். இது வங்கியின் நிபந்தனை. இந்த வங்கியின் கிளை அலுவலகம் கோவையில் உள்ள தேர்முட்டி வீதியில் உள்ளது.

மாடுகளைப் பிடிப்பது போன்ற சூழ்நிலை இப்பொழுதும் இருக்கிறதா?

இப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கருமத்தம்பட்டியில் கூட வண்டியை பிடித்து இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு அதன்படி நடந்து கொண்டுதான் இருக்கிறோம். ‘கியூரல் ஆக்ட்’ என்று சொல்லுகிறார்கள். அது மாடுகளுக்கு மட்டும்தானா? எல்லா உயிரினத்திற்கும் இருக்கிறது. ஒரு வண்டியில் நிறைய கோழிகள் ஏற்றப்படுகிறது. ஆடுகள் ஏற்றப் படுகிறது. மனிதர்களையே நிறைய ஏற்றிக்கொண்டு போகிறார்கள்.

60 பேர் போகும் ஒரு பேருந்தில் 100 பேர் போகிறார்கள். இதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்வதில்லை. மாட்டை வைத்து மட்டும் தான் அரசியல் நட்த்துகிறார்கள். மாடுகள் போனால் மட்டும்தான் கோசாலைக்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள். அதனுடைய மதிப்பு 10 லட்சம். அனால் கோர்ட் கேஸ்னு யார் அலைவதுன்னு என்று சொல்லி அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

கோர்ட், கேஸ்னு அலையும் போது வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மாடுகளை பிடிக்கின்ற கோசாலைகளுக்குப் பெருங்கொண்ட இலாபம் ஏற்பட்டு விடுகிறது. இப்பவும் வெள்ளியங்கிரி கோசாலையில் எங்களுடைய மாடுகள் இருக்கிறது. இப்பொழுதுதான் வெள்ளியங்கிரி கோசாலை உரிமையாளர் மீது நிறைய பிரச்சனைகள் வருகிறது என்று சொல்லி இனிமேல் மாடுகளை நாங்கள் பிடிக்க மாட்டோம் என்று சொல்லி ஒதுங்கி இருக்கிறார்கள்.

ஒரு யானையின் எடை 2000 கிலோ இருக்கிறது. அந்த யானையை வண்டியில் ஏற்றிக்கொண்டு போகிறார்கள். ஆனால் மாடுகளை ஏற்றும் போது மட்டும் வண்டிகளைப் பிடிக்கிறார்கள். ஒரு மாட்டின் எடை 40 கிலோ முதல் 50 கிலோ வரைதான் இருக்கும். குறைந்தது ஒரு வண்டியில் 10 முதல் 12 மாடுகளை மட்டும்தான் ஏற்றிச் செல்கிறோம். இந்த 12 மாடுகளின் மொத்த எடையே 600 முதல் 800கிலோ வரை தான் இருக்கும். அதனை அதிகாரிகள் பிடிக்கிறார்கள். யானை ஏற்றிக்கொண்டு போவதற்கு அரசே ஏற்பாடு செய்து தருகின்றது. இது எந்த விதத்தில் சரியானதாக இருக்க முடியும்?

Pin It