2017 ஆம் டிசம்பர் 24 ஆம் நாள் பாலின சமத்துவ நோக்கில் பல கோரிக்கைகளை முன்வைத்து சமையல் மறுப்புப் போராட்டத்தை அறிவித்து, நடத்தினோம். 2018 டிசம்பர் 24 இல் ‘சமையலறை உடைப்புப் போராட்டம்’ என அறிவிக்கிறோம். ஏன்? எதற்காக?

சமுதாய மாற்றங்களுக்காக உழைக்கும் தோழர்களில் ஏராளமானோர், ஜாதி, மத மறுப்புத் திருமணங்களுக்குத் தயாராக உள்ளனர். ஏராளமானோர் ஜாதி மறுப்பு மணங்களைச் செய்தும் வருகிறார்கள். ஆனால், அந்த ஜாதி, மத மறுப்பு இணையர்களின் வாழ்வில் பாலினசமத்துவம் இருக்கிறதா? என்றால், 99 சதவீத இணையர் களின் வாழ்வில் ‘இல்லை’ என்பதே உண்மை.

kitchen demolishஜாதி, மதம், ஜாதி, மத வன்கொடுமைகள், தமிழ்நாட்டு உரிமைப் பறிப்புகள், பாலியல் வன்கொடுமைகள், காதல் ஆசிட் வீச்சுக்கள், குடும்ப வன்முறைகள், பாலினப் பாகுபாடுகள் என அனைத்துக்கும் எதிராகக் களத்தில் கடுமையாகப் போராடும் தோழர்கள்கூட வீட்டில் தங்கள் குடும்பப் பெண்களை அடிமைகளாக நடத்துவது இயல்பாக - சாதாரணக் காரியங்களாக இருக்கிறது. போராடும் தோழர்களின் குடும்பங்களின் நிலையே இப்படி என்றால், சராசரி ஆண்களிடம் சிக்கித் தவிக்கும் பெண் இனத்தின் நிலையை எண்ணிப்பாருங்கள்.

எனவே, முதற்கட்டமாக எமக்குத் தொடர்புள்ள குடும்பங்களிலாவது பாலின சமத்துவம் குறித்த விரிவான விவாதங்கள் உருவாக வேண்டும் என்று திட்டமிட்டோம். காட்டாறுக்கு ஆதரவான தோழர்கள், தங்கள் குடும்பங்களிலும், தங்கள் துணையிடமும் நடத்தும் ஆதிக்கங்களுக்கு எதிராகத்தான் முதல் தாக்குதலைத் தொடுத்தோம். விளைவாக, ஆண் தோழர்களின் மனதில் ஒரு குற்ற உணர்வையும், ஒரு சுயவிமர்சனத்தையும் உண்டாக்கி உள்ளோம். பெண் தோழர்களிடம் விடுதலைச் சிந்தனைகளை வளர்த்துள்ளோம். இதை முதற்கட்ட வெற்றியாகக் கருதுகிறோம்.

காட்டாறு குழுவைத் தாண்டி, பரந்துபட்ட அளவில் பாலின சமத்துவ நோக்கிலான கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, ‘சமையலறை உடைப்பு’ என அறிவித்துள்ளோம். நாம் கோரிக்கை வைப்பது அரசுகளை நோக்கித்தான் என்றாலும், அவை அனைத்துமே சமுதாய மாற்றத்தினால் மட்டுமே சாதிக்கக் கூடியவை. அதைச் சாதிக்க மக்களிடம் ஒரு மனப்புரட்சி உருவாக வேண்டும். அதற்கான பரப்புரையை அனைத்து வழிகளிலும் மேற்கொள்ள இருக்கிறோம்.

எமது கோரிக்கைகள் வெகுமக்களைச் சேரவேண்டும், விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காக சிறிய அளவில் ஒரு கருத்துக்கணிப்பையும் நடத்தினோம். அதன் முடிவுகள் இந்த இதழில் வந்துள்ளன. பொது மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதோடு, நின்றுவிடாமல், மக்களுக்காக உழைக்கும் அமைப்புகளின் கருத்துக்களையும் கேட்டு வாங்கி வெளியிட்டுள்ளோம். அனைத்து அமைப்புகளிலும் களப் பணியில் உள்ள பெண்தோழர்களிடமும், சில ஆண் தோழர் களிடமும் கருத்துக்களைப் பெற்றோம். தொடர்ந்து அனைத்து அமைப்புகளையும், தலைவர்களையும் சந்திக்க உள்ளோம்.

இது மிகப் பெரிய, மிக நீண்ட பயணம். எல்லா அமைப்புகளுக்கும் ஏராளமான பணிச்சுமைகள் இருக்கும். கூடுதலாக காட்டாறு குழுவின் கோரிக்கைகளுக்கும் கொஞ்சம் இடம் ஒதுக்குங்கள். பாலின சமத்துவ அடிப்படையிலான எமது நகர்வுகளுக்கு ஆதரவைத் தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துக்கணிப்பு முடிவுகள்

சமையலறை உடைப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பானது சமுதாயம் குறித்த ஒரு நல்ல புரிதலை எங்களுக்குக் கொடுத்தது.

பெண்விடுதலைக்காகத்தான் இந்தப் போராட்டமும், கோரிக்கைகளும் என்றாலும், பல கோரிக்கைகளைப் பெண்களே ஏற்கவில்லை. குறிப்பாக, காதுகுத்து விழாஒழிப்பு, பூப்புனித நீராட்டுவிழா ஒழிப்பு, பட்டு, நகை அலங்காரத்தடை, கட்டாயத்தனிக் குடித்தனம், இருபால் பொதுவிடுதிமுறை போன்ற முழக்கங்களுக்கு பெண்களிடம் கடும் எதிர்ப்பைக் காண முடிந்தது.

திருமணத்திற்குப் பெண்ணின் சம்மதம் முக்கியம், திருமணமே வேண்டாம் என்ற நிலை எடுக்கும் பெண்களுக்குத் தனிவிடுதிகள் அமைக்க வேண்டும், இல்லப்பராமரிப்பிலும், சமையலிலும் ஆண்கள் சமபங்கு உழைப்புக் கொடுக்க வேண்டும், கணவன் என்ற உரிமையில் நடக்கும் பாலியல்வன்முறையைக் குற்றமாக்கவேண்டும், பெண்களுக்குச் சொத்துரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது.

பள்ளியிலிருந்தே பாலியல் கல்வி, சிவப்பழகுக் க்ரீம்களுக்குத் தடை, திருமணங்களில் பெண்ணின் சம்மதம் முக்கியம் என்ற முழக்கங்களுக்கு ஆண் – பெண் இருபாலருமே ஆதரவு கொடுத்துள்ளனர்.

காதுகுத்து விழாத்தடை, பூப்புனிதநீராட்டுவிழாத்தடை இவற்றை 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ஆதரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி,

பிள்ளைபெறும் தொல்லையைத் தவிர்த்தல், தனிக்குடித்தனம், காதுகுத்து, பூப்புனித நீராட்டுத்தடை போன்றவற்றை ஆண் – பெண் இருபாலருமே கடுமையாக எதிர்க்கின்றனர்.

இந்த ஆய்வை வயது, பாலினம், வாழும் இடம், கல்விநிலை, தொழில்நிலை, ஜாதி, மதம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து மிக விரிவாகத் திட்டமிட்டிருந்தோம். அனுபவம் இன்மை மற்றம் நேரப்பற்றாக்குறை காரணமாகப் பல தோழர்கள் விரிவான ஆய்வை மேற்கொள்ளவில்லை. சிலர் சரியாகச் செய்திருந்தனர். மார்ச் மாத இறுதிக்குள் இதழ் வெளியாக வேண்டும் என்பதால், வயது, பாலினத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 5 பிரிவாக மட்டும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் சுமார் 300 பேருக்குக் குறையாமல் மொத்தம் 1280 பேரைச் சந்தித்தோம். பெயர், வயது குறிப்பிடாமல் 210 பேர் கருத்துக்களைத் தெரிவித்தனர். ஆன்லைன் கருத்துக்கணிப்பில் 140 பேர் கருத்துக்களைத் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதங்களாகவே இப்பணி நடைபெற்றது. எமது சக்திக்கு இந்த அளவுக்குத் தான் செய்ய முடிந்தது. இந்தத் தளத்தில் பணியாற்ற விரும்பும் தோழர்கள் இன்னும் கூடுதலான, விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முன் முயற்சி தான் இந்த ஆய்வு.

“பெண் விடுதலை என்றால் ஆண்களைப் பணியவைப்பது” என்ற அளவில் தான் ஆண்களும், பெண்களும் புரிந்து வைத்துள்ளனர். அதுதான் சமுதாயத்தின் பொதுப்புத்தியாக உறைந்துள்ளது. பெண்விடுதலைக்கு எதிராகவும், ஆணாதிக்கத் திற்கு அடிப்படையாகவும் உள்ள மதங்கள், அவை உருவாக்கியுள்ள பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், வாழ்வுமுறைகள், குடும்பஅமைப்பு போன்றவை குறித்துப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் நாம் எந்தப் புரிதலையும் உருவாக்கவில்லை. அதன் எதிரொலியைத்தான் இந்த ஆய்வில் கண்டோம். இச்சமுதாய நோய்க்கு மருந்தாகச் சென்ற நூற்றாண்டில் தோழர் பெரியார் கூறியவை, இந்த நூற்றாண்டுக்கும் தேவை என்பதைப் புரிந்து எதிர்காலப் பணிகளைத் திட்டமிட இந்த ஆய்வு பயன்பட்டது. ( ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் சதவீத % எண்கள் ஆகும்)

பள்ளி - கல்லூரிகளில் ஆண் - பெண் இருபாலரும் கலந்து அமரும் முறையை அகர வரிசைப்படி ( Alphabetical order) நடைமுறைப்படுத்து!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள் : ஆதரவு 59.40 எதிர்ப்பு 40.59

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 81.91 எதிர்ப்பு 18.08

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 63.49 எதிர்ப்பு 36.50

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 63.21 எதிர்ப்பு 36.78

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 60.18 எதிர்ப்பு 39.81

JNU, AIIMS போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள இருபால் பொதுவிடுதிமுறையை (Co - Hostels or Unisex Hostels) பள்ளி - கல்லூரிகள் அனைத்திலும் நடைமுறைப்படுத்து!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 31.02 எதிர்ப்பு 68.97              

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 57.44 எதிர்ப்பு 42.55

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 20.63 எதிர்ப்பு 79.36

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 48.27 எதிர்ப்பு 51.72

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 19.44 எதிர்ப்பு 80.55

பள்ளி - கல்லூரி வளாகங்களில் ஆண் - பெண் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதையும், பழகுவதையும் தண்டிக்கும் காட்டுமிராண்டிகள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளை இழுத்துமூடு. அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 81.18 எதிர்ப்பு 18.81

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 82.97 எதிர்ப்பு 17.02

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 80.95 எதிர்ப்பு 19.04

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 75.55 எதிர்ப்பு 24.44

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 80.55 எதிர்ப்பு 19.44

பள்ளிக்கல்வியிலிருந்தே பாலியலையும் ஒரு பாடமாகக் கற்பி!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 77.22 எதிர்ப்பு 22.77

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 84.04 எதிர்ப்பு 15.95

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 73.01 எதிர்ப்பு 26.98

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 75.86 எதிர்ப்பு 24.13

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 66.66 எதிர்ப்பு 33.33

பெண்களை அலங்காரப் பொம்மைகளாக உருவாக்கும் காது குத்து விழாக்களைத் தடைசெய்!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 34.32 எதிர்ப்பு 65.67

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 39.36 எதிர்ப்பு 60.63

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 36.50 எதிர்ப்பு 63.49

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 63.21 எதிர்ப்பு 36.78

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 12.03 எதிர்ப்பு 87.96

பெண்களை இழிவுபடுத்தும் பூப்புனித நீராட்டு விழாக்களைத் தடைசெய்!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 45.54 எதிர்ப்பு 54.45

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 46.80 எதிர்ப்பு 53.19

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 46.03 எதிர்ப்பு 53.96

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 63.21 எதிர்ப்பு 36.78

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 20.37 எதிர்ப்பு 79.62

திருமணங்களில் பெண்களின் சம்மதத்தையும், பெண்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கு! இவற்றை உறுதிப்படுத்திச் சான்று வழங்க, காவல்துறை - வழக்கறிஞர்கள் கொண்ட தனி ஆணையத்தை உருவாக்கு!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 89.76 எதிர்ப்பு 10.23

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 90.21 எதிர்ப்பு 9.78

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 79.36 எதிர்ப்பு 20.63

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 79.31 எதிர்ப்பு 20.68

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 88.88 எதிர்ப்பு 11.11

பெண்ணின் திருமணத்திற்குப் பிறகு, கடவுளையே மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் குலதெய்வ வழிபாடுகளைத் தடைசெய்!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 63.36 எதிர்ப்பு 36.63

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 60.63 எதிர்ப்பு 39.36

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 39.68 எதிர்ப்பு 60.31

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 41.37 எதிர்ப்பு 58.62

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 25.92 எதிர்ப்பு 74.07

சிவப்புத் தோலே முக்கியம் என்ற எண்ணத்தை உருவாக்கும் சிவப்பழகுக் க்ரீம் வணிகத்தைத் தடைசெய்!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 80.85 எதிர்ப்பு 19.14

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 84.04 எதிர்ப்பு 15.95

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 74.60 எதிர்ப்பு 25.39

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 88.50 எதிர்ப்பு 11.49

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 87.96 எதிர்ப்பு 12.03

அலங்காரப் பண்பாட்டைத் தூண்டும் நகை வணிகம், பட்டு வணிகம், மலர் வணிகங்களைத் தடைசெய்! பட்டு நூல் உற்பத்திக்கான மல்பெரி விவசாயம், மலர் விவசாயத்தைத் தடைசெய்!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 30.69 எதிர்ப்பு 69.30

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 55.31 எதிர்ப்பு 44.68

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 31.74 எதிர்ப்பு 68.25

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 52.87 எதிர்ப்பு 47.12

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 17.59 எதிர்ப்பு 82.40

திருமணம் தேவையில்லைஎன்றும், ‘குடும்ப அமைப்பே வேண்டாம்என்றும் முடிவெடுத்துத் தனித்து வாழத் துணிந்த பெண்களுக்கு, மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகளை உருவாக்கு!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 77.55 எதிர்ப்பு 22.44

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 78.72 எதிர்ப்பு 21.27

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 71.42 எதிர்ப்பு 28.57

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 72.41 எதிர்ப்பு 27.58

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 48.14 எதிர்ப்பு 51.85

திருமணங்கள் உறுதிசெய்யப்படும் போதே, அந்த மணமக்களுக்குத் தனிக் குடித்தனம்என்பதைக் கட்டாயமாக்கு!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 34.65 எதிர்ப்பு 65.34

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 48.93 எதிர்ப்பு 51.06

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 33.33 எதிர்ப்பு 66.66

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 47.12 எதிர்ப்பு 52.87

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 24.07 எதிர்ப்பு 75.92

திருமணத்திற்கு முன்பே கருத்தடைச் சிகிச்சை செய்பவர்களுக்கும் - பிள்ளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் அரசின், கல்வி - வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கு!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 45.54 எதிர்ப்பு 54.45

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 53.19 எதிர்ப்பு 46.80

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 39.68 எதிர்ப்பு 60.31

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 52.87 எதிர்ப்பு 47.12

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 32.40 எதிர்ப்பு 67.59

இல்லப்பராமரிப்பிலும், சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் சமஉழைப்புக் கொடுக்காத ஆண்களுக்குக் கடும் தண்டனைகள் வழங்கு!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 70.29 எதிர்ப்பு 29.70

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 58.51 எதிர்ப்பு 41.48

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 74.60 எதிர்ப்பு 25.39

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 73.56 எதிர்ப்பு 26.43

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 76.85 எதிர்ப்பு 23.14

திருமணத்தின் பெயரால் - கணவன் என்ற உரிமையால் நடக்கும் (Marital Rape) பாலியல் வன்முறைகளைக் கடும் குற்றமாக்கு!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 84.15 எதிர்ப்பு 15.84

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 79.78 எதிர்ப்பு 20.21

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 87.30 எதிர்ப்பு 12.69

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 83.90 எதிர்ப்பு 16.09

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 87.03 எதிர்ப்பு 12.96

அனைத்துக் குடும்பங்களிலும் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப் பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த அதிகாரம் படைத்த தனி ஆணையம் உருவாக்கு! சொத்துரிமை வழங்காத ஆண்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து பெண்களுக்குப் பகிர்ந்தளி!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 88.11 எதிர்ப்பு 11.88

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 79.78 எதிர்ப்பு 20.21

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 95.23 எதிர்ப்பு 4.76

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 89.65 எதிர்ப்பு 10.34

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 86.11 எதிர்ப்பு 13.88

திருமணக் காலத்தில் பெற்றோரிடம், பிள்ளைகள் நகை, பணம், பொருட்கள் கேட்பதைக் கடும் குற்றமாக்கு!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 79.86 எதிர்ப்பு 20.13

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 74.46 எதிர்ப்பு 25.53

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 87.30 எதிர்ப்பு 12.69

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 85.22 எதிர்ப்பு 14.77

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 76.85 எதிர்ப்பு 23.14

கல்லூரி - பல்கலைக்கழகங்களில் உள்ள Anti Sexual Harassment Cell களில் நிர்வாகம் தவிர, மனநல ஆலோசகர்கள் - காவல்துறை - மகளிர் அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கு!

30 வயதுக்குக் கீழே உள்ள பெண்கள்: ஆதரவு 93.72 எதிர்ப்பு 6.27

30 வயதுக்குக் கீழே உள்ள ஆண்கள்: ஆதரவு 71.27 எதிர்ப்பு 28.72

30 வயதுக்கு மேலே உள்ள பெண்கள்: ஆதரவு 92.06 எதிர்ப்பு 7.93

30 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள்: ஆதரவு 90.80 எதிர்ப்பு 9.195

பெயர்கூடக் குறிப்பிடவிரும்பாதவர்கள்: ஆதரவு 84.25 எதிர்ப்பு 15.74

Pin It