திருச்சியிலிருந்து சென்னை செல்லும் நான்குவழிச்சாலையில் உள்ள இராமநத்தத்தில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் உள்ளது திட்டக்குடி எனும் ஊர். அந்த ஊரைத் தாண்டி 2 கி.மீ தொலைவில் இருக்கிறது தருமக்குடிக்காடு. இது திட்டக்குடித் தொகுதியைச் சேர்ந்தது.

அந்த ஊரில், திட்டக்குடி வைத்திநாதசாமி கோயிலுக்குட்பட்கோழியூர் வேணுகோபாலசாமி கோயிலுக்குச் சொந்தமாக 10 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் உள்ளன. அவற்றில் பல தலைமுறைகளாக பிள்ளைமார் ஜாதியைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரின் குடும்பம் பயிரிட்வருகிறது. பல தலை முறைகளாக அக்குடும்பத்தின் முன்னோர்கள் வசம் இக்கோவில் நிலங்கள் அனுபவத்தில் உள்ளன.

பூமிநாதனின் தாத்தாவான வரதராஜபெருமாள் காலத்தில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த இந்தக் கோவில் நிலத்தில்  பணியாற்றியவர் பொன்னன். பொன்னன் அருந்ததிய ஜாதியைச் சேர்ந்தவர். அவர், வரதராஜப்பெருமாளின் பண்ணையில் கொடுத்த உழைப்புக்குக்கூலியாகக் கிடைத்தது 64 செண்ட் நிலம். பொதுவாக அந்தக் காலங்களில் எதையும் பத்திரப்பதிவாகச் செய்வது கிடையாது. எனவே, அவரிடம் பணியாற்றிய பொன்னனுக்குக் கொடுத்த 64 செண்ட் நிலம் எழுத்தில் பதிவுசெய்யப்படவில்லை. அந்நிலத்தின் சர்வே எண்: 194 /2. நில அளவு:0.25.0 ஏர்ஸ் ஆகும். பொன்னனின் மறைவுக்குப் பிறகு அடுத்த தலைமுறையைக் கடந்து பொன்னனின் பேரன் சிவக்குமாருக்கு அந்த நிலம் வந்துள்ளது.

இதே பகுதியில் வசிக்கும் அலெக்சாண்டர், முத்துராஜ் ஆகியோர் இந்நிலத்தைக் கைப்பற்ற முயற்சி செய்துள்ளனர். இவர்கள் பறையர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இவர்கள், திட்டக்குடி இந்து அறநிலையத்துறையில் பணியாற்றிய ஆய்வாளர் சிவஞானம் என்பவர் மூலம் சிவக்குமாரின் பயன்பாட்டில் இருந்த 194/2 சர்வே எண்ணுள்ள நிலத்துக்கு போலியாக ஒரு வாடகை ரசீதைப் போட்டுக்கொண்டனர்.  2015 ஆம் ஆண்மார்ச் 9 ஆம் தேதி இந்தப் போலி ரசீது போடப்பட்டுள்ளது.

அந்தப் போலிவாடகை ரசீதை வைத்துக்கொண்டு, பல தலைமுறைகளாக அந்த நிலத்தில் வாழ்ந்துவந்த சிவக்குமார், மற்றும் சில அருந்ததியக் குடும்பங்களை அந்த நிலத்தை விட்வெளியேறு மாறு எச்சரித்து வந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, ஒருநாள் இரவோஇரவாக, சிவக்குமாரின் நிலத்தில், அலெக்சாண்டரும் அவரது சகோதரரும், இருபத்தைந்து டிராக்டர்களில் குளத்து மண்ணைக் கொண்டுவந்து கொட்டியுள்ளார்கள். பள்ளமாக இருக்கும் அந்த இடத்தை மேபடுத்தியுள்ளார்கள். அதனைத் தடுத்து நிறுத்த வந்த சிவக்குமார் தரப்புக்கும் அலெக்ஸாண்டர் தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

27.07.2017 ம் நாள் அந்த நிலத்தருகே நடந்த வாக்குவாதத்தில் அலெக்ஸாண்டரின் சகோதரர் முத்துராஜ் சிவக்குமாரைக் கிழே தள்ளிவிட்டுள்ளார். அலெக்சாண்டரும் அப்போது உடன் இருந்துள்ளார். கீழே விழுந்த சிவக்குமாருக்குத் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை அங்கிருந்து மீட்மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் மருத்துவமனை, பிறகு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பிரிவு எனத் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் - நான்கு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவக்குமாருக்கு இரண்மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தத் தாக்குதல் திட்டக்குடி காவல்நிலையத்தில் குற்றஎண் 168 / 17 ல், ஐ.பி.சி 304- ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாக்குதல் நடந்த உடன் அங்கு விரைந்த ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் தோழர் நாகராசன், கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் பக்கிரி, திருப்பூர் பொறுப்பாளர் சோழன் ஆகியோர் உட்ப எண்ணற்ற ஆதித்தமிழர் பேரவையின் பொறுப்பாளர்களின் தொடர் முயற்சிக்குப் பிறகு, இந்த வழக்கு 302- பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

சிவக்குமாரின் இறுதிநிகழ்வு மற்றும் வீரவணக்கப் பேரணியில் ஏராளமான ஆதித்தமிழர் பேரவைத் தோழர்கள் பங்கேற்றனர். காட்டாறுகுழு தோழர் தி.தாமரைக்கண்ணன், திட்டக்குடி த.நா.மா.லெ.க தோழர் குறள்நம்பி ஆகியோரும் பங்கேற்றனர்.

தாக்குதல் நடந்த நாளில் (27.07.2017) இருந்து இறுதி நிகழ்வுகள் (05.08.2017) வரை, தமிழ்நாட்டில் ஜாதி – தீண்டாமைகளுக்கு எதிராகக் களமிறங்கிக் கொண்டிருக்கும் பல அமைப்புகள் இந்தத் தாக்குதல் பற்றி எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. கண்டுகொள்ளவே இல்லை என்பது, அப்பகுதி அருந்ததிய மக்களுக்குப் பெரும் அச்சத்தைக் கொடுத்திருக்கிறது.

இந்தக் கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக  வழங்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் வன்னியர்கள் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அப்படி வன்னியர்களால் வைப்பற்றப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்கப் போராட வேண்டிய தோழர்கள், சமுதாயத்தில்  தங்களுக்குக் கீழே ஒடுக்கப்பட்டுள்ள அருந்ததிய மக்களின் சிறு சிறு வாழ்வாதாரங் களைப் பறிக்கத் துடிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் தோழர் நாகராசன் அவர்கள் காட்டாறு குழுவுடன் பகிர்ந்து கொண்செய்திகள்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு அருகில் உள்ள தருமக்குடிகாபகுதியில் சுமார் 45 அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வேணுகோபால்சாமி கோவிலுக்குச் சொந்தமான, அறங்காவல்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 64 செண்ட் நிலத்தை 70 ஆண்டுகளாக பராமரித்து வந்ததால் திரு.சிவக்குமார் அவர்களுடைய குடும்பத்தினருக்குத் தானமாக வழங்கியுள்ளனர். அதை அவர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தி வந்தனர்.

மூன்று தலைமுறைகளாக பயன்படுத்திய நிலத்தைச் சமீபத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த தொகுதிப் பொறுப்பாளர் அலெக்சாண்டர் என்பவரும் அவரது சகோதரரும் இணைந்து ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்துடனும், அதிகாரிகளின் துணையுடனும் தவறான பத்திரத்தைத் தயாரித்துள்ளனர். அந்தப் பத்திரம் தவறு என்பதைத் தொடர்ச்சியாக ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் அணுகி உறுதி செய்தோம்.

அந்தப் பத்திரம் போலியாக பெறப்பட்டது என்று சான்றும் அளித்தனர். இந்தச் சூழலில் கடந்த மாதம் 27 ந் தேதியன்று இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தோ25 வண்டிகளில் மணலைக் கொண்டுவந்து அந்த இடத்தில் கொட்டும் போது அதை சிவக்குமார் அவர்கள் தடுக்க முயன்றபோது அலெக்சாண்டரும் அவரது தம்பியும் திட்டமிட்சிவக்குமாரை கொலை செய்யும் நோக்கத்தோதாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதில் பலத்த காயம் ஏற்பட்சிவக்குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்காக பெரம்பலூருக்கும், பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு நான்கு நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கடந்த 2ம் தேதி சிவக்குமார் உயிரிழந்தார். இது தொடர்பாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் அவர் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.  

சிவக்குமார் அவர்களின் குடும்பத்தைப் பாதுகாக்க அவரது மூன்று குழந்தைகளுக்கும், இரு பெண் குழந்தைகள் (10,  9 ம் வகுப்புகள்) 7ம் வகுப்பு படிக்கும் ஒரு ஆண் குழந்தை உட்பஅவர்களது கல்வி உதவியை உறுதி செய்கிறோம்.

கூடுதலாக இந்தக் குடும்பத்தின் பாதுகாப்புக்கான நிதியைத் திரட்டித் தருவதற்கான சில யுக்திகளை வகுத்துள்ளோம். இந்த ஊர் மக்களின் துணையுடன் அதையும் செய்து முடிப்போம். குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை, ஜனநாயகப் போராட்டத்தை தலைவர் அதியமான் தலைமையில் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டத்திற்கு திருமாவளவன் அவர்களுக்கும் அழைப்பு விடுப்போம்.

Pin It