தாழ்த்தப்பட்டோர் மீத நடக்கும் தாக்குதல்கள் அன்றாடச் செய்திகளாகி விடும் ஆபத்தான சமுதாயச் சூழலில் வாழ்கிறோம். வரலாறு முழுவதும் நீண்ட நெடுங்காலமாக நடந்துவரும் இந்துத்துவத் தாக்குதல்தான் இது. ஒவ்வொரு முறையும், கொல்லப்படும் நபரின் பெயரும், கொன்ற கூட்டத்தின் பெயர்களும் மட்டும் அவ்வப்போது மாறுகிறது. ஆனால் காரணங்கள் ஒன்றே தான். நான் யாருக்கும் அடிமை இல்லை, ஆனால் எனக்கு ஒரு அடிமை இருக்கிறான் என்ற ஜாதியச் சிந்தனையும் அதை வளர்த்துவிடும் இந்து மதமும் தான் மிக முக்கியக் காரணங்கள்.

thamilarasan 450திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகில் உள்ள கிராமம் புளியரம்பாக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்விடங்களுக்குள் புகுந்து, பெண்களின் முன்னிலையில் அவர்களின் சகோதரர்களைக் கடத்திச் சென்று படுகொலை செய்து வீதியில் வீசிச்சென்றுள்ளனர் வன்னியர்கள்.

கடந்த 23.07.2017 அன்று இரவு ஏறத்தாழ 7.00 மணியளவில் இக்கிராமத்தில் உள்ள தாழ்த்தப் பட்டோர் வசிக்கும் பகுதிக்கு 50 க்கும் மேற்பட்ட வன்னியர்கள் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு சென்று அங்கிருந்த மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொருட்களை அடித்துச் நொறுக்கியுள்ளனர். வெங்கடேசன், ஆதிகேசவன் என்கிற இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்று கடுமையாகத் தாக்கி, கத்தியால் குத்தி 10 கி.மீ தொலைவில் உள்ள செல்லபெரும்புலிமேடு - மாங்கல் கூட்டுச்சாலை அருகே வீசி எறிந்துள்ளனர். இதில் வெங்கடேசன் இறந்து போனார். ஆதிகேசவன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்த காட்டாறு குழு தோழர்கள் புளியரம்பாக்கம் பகுதிக்கு நேரடியாகச் சென்றனர். மக்களிடம் தாக்குதல் பற்றி முழுமையாகக் கேட்டறிந்தனர். இந்த ஜாதியத் தாக்குதல் தொடர்பாக, காஞ்சி மக்கள் மன்றம் தெளிவான ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையை அப்படியே வெளியிடுகிறோம்.

காஞ்சி மக்கள் மன்றத்தின் அறிக்கை

புளியரம்பாக்கம் கிராமம் செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். இந்தக்கிராமம்  சேரி  ஊர் என்று இரு பிரிவுகளாக உள்ளது. பெரும்பான்மை பறையர் சமூக மக்கள் வாழும் கிராமம் (மொத்த மக்கள் தொகை 2500, அவர்களில் 2000 பேர் பறையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

23.07.2017 காலை நேரத்தில் தலித் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்இருந்தனர். அப்போது அங்கு வந்த வன்னிய இளைஞர்கள் தமிழரசன் மற்றும் மணிகண்டனை மட்டும் தாக்கினர். தமிழரசன் மற்றும் ஒரு வன்னியர் இளைஞர் இருவரும் செல்லப்பெரும்புலிமேபகுதியைச் சார்ந்த வன்னியர்  பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்ததால் தாக்குதல் தமிழரசன் மீது திட்டமிட்டு நடத்தபட்டது. ஆனால், அந்தப் பெண் இருவருக்கும் செவிமடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய அந்த வன்னிய இளைஞர், “எவ்வளவு துணிச்சல் இருந்தா எங்க பொண்ண லவ் பண்ணுவீங்க? நாய்ங்களா... உங்களக் கொன்னு போட்ருவோம்” என்று மிரட்டல் விடுக்கிறார். சண்டை முடிந்து தலித் இளைஞர்கள் வீடுதிரும்புகின்றனர். மாலை 5 மணி அளவில் இராஜேஷ் மற்றும் சரவணன் ஆகிய இரு வன்னிய இளைஞர்கள்  சேரிக்குள் அதிவேகமாக பைக்குகளை ஓட்டி மக்களை அச்சுறுத்துகின்றனர். இருவரும் காலையில் நடந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரையும் மடக்கி பிடித்த மக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க முயன்றனர். அப்போது சரவணன் தப்பி ஓடிவிட்டார்.  அதனால் இராஜேஷை மட்டும் செய்யாறு காவல் நிலையத்தில் SSI ஜோதி மற்றும் SI ரவி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். காவலர்கள் முன்னிலையிலும் இராஜேஷ் மக்களுக்கு மிரட்டல் விடுத்தார். காவல்துறை அதிகாரிகள் FIR  எதுவும் பதிவு செய்யாமலேயே அவரை வெளியே விடுகின்றனர்.

மாலை 7 மணியளவில் சேரிக்கு இராஜேஷ் தன்னுடன் 60 வன்னிய இளைஞர்களுடன் வருகிறார். அவர்களில் பலர் தொழில் முறை ரவுடிகள் ஆவார்கள். இவர்கள் கையில் இரும்புக் கம்பி, கத்தி மற்றும் கட்டையுடன் வருகின்றனர். ஐந்து வீதிகளைக் கொண்புளியரம்பாக்கம் கிராமத்தை இந்தக் கொலை காரக் கும்பல் சூறையாடியது. கண்ணில்பட்ட எல்லோரையும் தாக்கினர்.

இரண்டாவது வீதியில் முதல் வீட்டில் இருந்த கடையை அடித்து நொறுக்கினர். இரண்டாவது வீட்டில் கணபதி தலையில் பலத்த அடியுடன் தப்பித்தார். அவருக்குச் சொந்தமான மினி டோர் நொறுக்கபட்டது. மூன்றாவது வீதியில் இருந்த வெங்கடேசனைக் கும்பல் கத்தியால் குத்தியது. அவர் வெளியே இருந்த இரு சக்கர வாகனத்தை உள்ளே நகர்த்த முயற்சிக்கும் போது மாட்டிக்கொண்டார். அவரது தம்பி ஆதிகேசவனும் தாக்குதலுக்கு ஆளானார். கிராமம் முழுதும் தாக்குதல் தொடர்ந்தது. யுவராஜின் குழந்தை கழுத்தில் கத்தியை  வைத்து மிரட்டினர். 2 டாடா ஏ சி வானங்களும்,10 பைக்குகளும்  , 1 கடையும், 10 வீடுகளும் முற்றிலும் அழிக்கப்பட்டன..

தாக்குதலின் முடிவில் கொலைகாரக் கும்பல் வெங்கடேசனையும் அவரது தம்பி ஆதிகேசவனையும் பைக்கில் ஏற்றிச் சென்றது. ஆதிகேசவன் காயங்களுடனும் வெங்கடேசன் பிணமாகவும் மங்கால் கூட்ரோட்டில் வீசப்பட்டனர். வெங்கடேசன் 33 இடங்களில்  கத்தியால் குத்தப்பட்கொலைசெய்யப்பட்டார். ஆதிகேசவன், விஜி மற்றும் தயாளன் ஆகியோர் செய்யாறு மருத்துவமனையிலும் கணபதி சென்னையிலும் சேர்க்கப்பட்டனர்

24.07.2017 காலையில் காஞ்சி மக்கள் மன்றம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரி பொன்னி மற்றும் இதர அதிகாரிகள் FIR நகலினை  மக்களுக்குக் காட்டினர்.

The police led by Tmt. Ponni, Superintendent of Police Tiruvannamalai along with four DSP’s, severainspectors and sub-inspectors reached the spot. They informed the villagers that FIR (No. 583/2017 dt, 24.07.2017) has been filed and 9 attackers Remanded. We were given a copy of the FIR after we made repeated demands for it. The FIR has Named  32 persons. The sections under which the attackers were charged are: Section 294(b), 147, 148, 323, 324, 363, 307, 302, 506(ii) of IPC, Section 3(1) of  TN Public Property (Prevention of Damage and Loss) Act 1992, Section 3(1) (c), 3(1)(r), 3(1)(t) of Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act 2015.

தாக்கியவர்கள் மஞ்சள் நிற டி சர்ட்டை அணிந்திருந்தனர். அதில் வன்னியர் சாதி சின்னத்துடன் வன்னியர் பஎைன்றும் எழுதப்பட்இருந்தது. கும்பலை வழிநடத்திய பாண்டி முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். நன்றி: கீதா சாருசிவம்

இந்த வன்கொடுமை தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தோழர் தொல்.திருமாவளவன் விடுத்த அறிக்கையிலிருந்து:

தமிழக அரசு வழக்கம் போல இந்த கொடூரத்தை வேடிக்கை பார்க்காமல் சாதிவெறியர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மெத்தனமாகச் செயல்பட்ட காவல்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்கள் அனைவரையும் கைது செய்து குண்டர்தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்.

உயிர்ப்பலியான வெங்கடேசன் குடும்பத்திற்கு ரூபாய் ஐம்பது இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த ஆறேழு மாதங்களில் தமிழகத்தில் நடந்த சுமார் 40 படுகொலை சம்பவங்களில் சுமார் 30 பேர் தலித் சமூகத்தை சார்ந்தவர்கள் என்று புள்ளிவிவரம் சொல்லுகிறது. கடந்த ஓரு மாதகாலத்தில் மதுரை வடபழஞ்சி முத்தமிழன், மண்ணைச்சநல்லூர் கதிரேசன், புளியரம்பாக்கம் வெங்கடேசன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு தமிழகத்தில் நடைபெறும் சாதிய வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். - தொல். திருமாவளவன்.

புளியரம்பாக்கத்திற்குப் பல்வேறு அமைப்புகள் நேரடியாக விரைந்தன. செய்யாறு நகரில் கடந்த 04.08.2017 ல் விடுதலைச்சிறுத்தைகளின் நிறுவனர் தோழர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. சி.பி.எம் உள்ளிட்ட பல இயக்கங்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. எவிடன்ஸ் அமைப்பு களஆய்வை நடத்தி, கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

இவை போன்ற எதிர்வினைகள் அனைத்தும் மிக மிக அவசியமானவை. அதேசமயம், இவை போன்ற ஜாதியத்தாக்குதல்களுக்கு அடிப்படையான இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்ற பெரும் ஆயுதத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். அது பற்றி விவாதிக்கத் தொடங்கவேண்டும். குறைந்த பட்சம், இந்த இந்து மதம் நமக்கு எதிரானது. அது தான் நமது இழிவுக்குக் காரணமாக உள்ளது என்ற பரப்புரை முழுவீச்சில் தொடங்கப்படவேண்டும்.

 

Pin It