இந்தியா சுதந்திரம் பெற்று ஆகஸ்ட் 15 அன்று முதல் 70 ஆண்ஆகிறது. மன்னர் ஆட்சி முதல் ஜனநாயக ஆட்சி நடக்கும், இன்றைய நாள்வரை இந்து மதத்திலும், சமூகத்திலும், அரசியலிலும் பார்ப்பன, பனியாக்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதை வரலாறு நெடுகக் காணலாம். மக்கள் தொகையில் 3 சதவீதம் இருக்கும் பார்ப்பனர்கள் தமது ஆதிக்கத்துக்கு ஆபத்து வரும்போது அதை ஒட்டுமொத்த மாக, இந்து மதத்திலுள்ள அனைவருக்கும் ஆபத்து என்றும், மதத்திக்கும், சாஸ்திரங்களுக்கும் ஆபத்து என்றும் சொல்லி நம்மைத் திசை திருப்பி வெற்றிகண்டார்கள். சுதந்திரத்துக்கு முன்பும் பின்னரும் இந்த சூழ்ச்சியான அணுகுமுறையை வெற்றிகரமாக நடத்திவருகின்றனர். இந்தப் பார்ப்பன சூழ்ச்சியால், நாம்  வீழ்ந்தது எப்படி? பார்ப்பனர்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்து எப்படி என்பவை பற்றி விரிவாகக் காண்போம்.

அதற்கு முன்பு அடிப்படையாக, நாம் எப்போது இந்தியர்கள் ஆனோம்? எப்போது இந்துக்கள் ஆனோம்? என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். இந்தியா என்னும் நாடு யாரால்? எப்படி உருவானது என்பதைப் பார்ப்போம்.

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பெனி ராபர்ட்கிளைவ் மற்றும் ஆண்ட்ரே பஸ்தாமாண்டி ஆகிய படைத்தலைவர்களின் தலைமையிலான படைகள் 1757 ல் நடந்த பிளாசிப் போர் மற்றும் 1764 ல் நடந்த பக்சார் போர்களில் வெற்றி அடைந்தது. அதைத் தொடர்ந்து கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நகங்களைத் தலைநகரங்களாகக் கொண்ஆட்சி நடத்தினார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியா என்னும் பெயர் எப்படி வந்தது என்று எஸ்.வி.ராஜதுரையின் ‘இந்து - இந்தி - இந்தியா’ என்னும் நூலில் விவரிக்கிறார்

“சிந்துச் சமவெளியில் இருந்த ஒரு குறிப்பிட்நிலப்பரப்பை கிரேக்கர்கள் ‘இன்டஸ்’ என அழைத்தனர். அதன் திரிபாகவே பின்னர் அராபியர்களால் வழங்கப்பட்‘இந்தியா’ என்ற சொல் உருவாயிற்று. இங்குள்ள முஸ்லிம்கள் அல்லாத மக்களைக் குறிக்க ‘இந்து’ என்ற சொல்லையும் அம்மக்கள் வாழும் நிலப்பரப்பைக் குறிக்க ‘இந்தியா’ என்ற சொல்லையும் அவர்கள் பயன்படுத்தினர். டச்சு, போர்ச்சசுகீசிய, பிரெஞ்சு, பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளால் கைப்பற்றப்பட்பகுதிகள் டச்சு இந்தியா, பிரெஞ்சு இந்தியா என்று வழங்கப்படலாயிற்று. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் படிப்படியாகத் தமது ஆட்சியின் கீழ் கொண்வந்த பகுதிகள் அனைத்தையும் பிரிட்டிஷ் இந்தியா என்றழைத்தனர்.

அத்தகைய பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு காலத்தில் பர்மாவும் இலங்கையும் கூஇருந்தன பின்னர்தான் அவை பிரிந்து தனித்தனி காலனி நாடுகளாக அமைந்தன. பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் வராத ஆனால் அவர்களது மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்ஏறத்தாழ அறுநூறு சமஸ்தானங்கள் (Princely States) ‘இந்திய சமஸ்தானங்கள்’ என்றழைக்கப்பட்டன. அவை 1947 க்குப் பிறகே இந்திய ஒன்றியத்திற்குள் கொண்டுவரப்பட்டன.  இவ்வாறு கடந்த 150 ஆண்டுகாலத்தில் இந்தியா என்பது பல்வேறு வரையறைகளையும், பிரதேச எல்லைகளையும் கொண்ஒரு அரசமைப்பாகவே இருந்து வந்துள்ளது.”

இந்து என்னும் சொல்லை ஆங்கிலேயர்தான் நமக்குக் கொடுத்தார்கள் என்பதைப் பற்றி காஞ்சிபுரம் சங்கரமடத் தலைவர் சந்திரசேகரேந்திரர் கூறுவதைப் பாருங்கள்.

“அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்கவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருகபக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்தனித்தனி மதமாக நினைத்துக்கொண்டிருப்போம். சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் ஒரே சாமி அல்ல. சிவன்தான் சாமி. விஷ்ணுவை சிவனுக்குப் பக்தன் என்று சொல்கிறார்கள் இவர்கள் இரண்பேரையும் எப்படி ஒரு மதம் என்று செல்வது? வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம் அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது” (தெய்வத்தின் குரல் - பாகம் 1 பக்கம் 266 -2 267)

சந்திரசேகரேந்திரரின்  நண்பர் அக்னி ஹோத்தம் ராமானுஜதாத்தாச்சாரியார் சந்திரசேகரேந்திரர் ஏற்பாசெய்த திருப்பாவை, திருவெம்பாவை மாநாடுகளில் உரையாற்றியவர்.  அவர் தனது ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்று நூலில், ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் டாக்குமெண்ட்களில் முதன் முதலில் ஷ்ஐசூனுடீடீ என்று பதிவு செய்து உள்ளனர். அதன் பின்னர் Hindu பெயரிட்டனர் என்று குறிப்பிடுகிறார்.

சிந்து நதிக்கரைக்காரன் என்ற அடிப்படையிலேதான் நம்மை ZINDOO என எழுதினான் வெள்ளைக்காரன். இது உமக்கு எப்படித்தெரியும் என்று நீர் கேட்கலாம். நான் அந்த பிரிட்டிஷ் டாக்குமெண்ட்பைார்த்திருக்கிறேன். படித்திருக்கிறேன்.

கும்பகோணத்தில் காவிரிக்கரையோரத்தில் எல்லாம் விளையும். அங்கே காவிரியின் மடியில் அறிவு விளையும், ஞானம் விளையும் ஓர் இடம் இருந்தது. அதுதான் என் ஆசான் ரகுநாதராவ் என்பவருக்குச் சொந்தமான நூலகம்.

ரகுநாதராவ், என்னைவிவயதில் மூத்தவர். அந்தக்காலத்தில் பரோடா சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். அவர் பதவிக்காலத்தில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர். அந்த ரகுநாதராவ் திவான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் கும்பகோணத்தில் காவிரிக்கரையோரத்தில் ஒரு லைப்ரரியை ஆரம்பித்தார். அங்கேதான் பிரிட்டிஷாரின் டாக்குமெண்ட்டுகளையும்  பார்த்தேன்.

முதலில் நம்மைப்பற்றி ZINDOO என்று எழுதி வைத்திருந்தவன், காலப்போக்கில் இந்த உச்சரிப்பை மாற்றி Hindu என்று உச்சரித்தால், அவன் உச்சரித்ததையெல்லாம் படிப்படியாக அவனது டாக்குமெண்ட்களில் பதிவும் செய்து வைத்தான்.

இப்போது ZINDOO என்பது Hindu ஆகிவிட்டது. ஆக இப்போது நாம் நம்மை அழைத்துக்கொள்ளும் நமது மதத்தின் பெயரான ‘ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக்கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர் அதைத்தான் நாம் இன்று சூடிக்கொண்டிருக்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால இது Christian சூட்டிய பெயர். நம்மையெல்லாம் என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் வெள்ளைக்கார Christian கண்டுபிடித்த - கண்டுகூபிடிக்கவில்லை. தன் வாய்க்கு வசதியாக வந்ததை உச்சரித்ததைத்தான் நாம் இன்று நமக்கான அடையாளமாகச் சுமந்து கொண்டிருக்கிறோம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதம், மநு ஸ்மிருதி, சாஸ்திரம், புராணம், சுண்டைக்காய்? எல்லாவற்றையும் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்நாம் அவற்றிலிருந்த ஒரு பொதுப்பெயரை எடுத்து சூட்டிக்கொள்ளவில்லை. சூட்டிக் கொள்ள  முடியாது”

(இந்து மதம் எங்கே போகிறது பக்கம்-331,332)  

இந்துமதம், இந்தியா என பெயர் இட்ஆங்கிலேயர்கள் ஆவர்களின் ஆவணங்களில் இந்து என்று கூறிப்பிட்டதைப் பார்ப்பனர்களே ஒப்புக்கொண்டதைப் பார்த்தோம். பார்ப்பனர் மதத்தில், பார்ப்பனரல்லாத திராவிடர்களின் உரிமையை மீட்டெடுத்த தலைவர்களான தோழர் பெரியார் அம்பேத்கர் இருவரும் இக்கருத்துக்களை வலுவாக உறுதிசெய்கின்றனர்.

“நம்முடைய தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆகட்டும் அல்லது சங்க காலப் பழைய ஆதாரங் களில் ஆகட்டும் அல்லது ஆரிய பாஷை ஆரிய நாகரீகப் பழக்க வழக்கங்களைக் கொண்வேதம், சாஸ்திரம், புராணம் சரித்திரம், முதலிய எவைகளிலாவது இந்து அல்லது இந்து மதம் என்கிற வார்த்தை இருக்கிறதா? சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று சொல்லப்பட்டவர்களாவது, இம்மாதிரி வார்த்தையை உச்சரித்தாகவே காணக்கிடைக்கிறதா? - தோழர் பெரியார் குடிஅரசு  27.08.1927

இந்துச் சமூகம் என்பதே ஒரு கட்டுக்கதை என்பதைத்தான், ‘இந்து’ என்கிற பெயரே ஓர் அந்நியப் பெயர்தான். உள்ளூர் மக்களிடம் இருந்து தம்மை இனம் பிரித்துக் காட்முகமதியரால் அளிக்கப்பட்பெயரே இந்துக்கள் என்பது. முகமதியாரின் படையெடுப்பிக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலினும், ‘இந்து’ என்கிற சொல்லே காணப்படவில்லை. இந்துக்களுக்குத் தாங்கள் பொதுவானதொரு சமூகம் என்ற சிந்தனையே இல்லாது இருந்த காரணத்தால், தங்களுக்குப் பொதுவானதொரு பெயர் தேவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. உண்மையில் இந்துச் சமூகம் என்ற ஒன்று இல்லை. இருப்பதெல்லாம் பல ஜாதிகளின் தொகுப்பே. - தோழர்.அம்பேத்கர் ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ நூல்.

இந்திய அரசியல் சட்டத்திலேயே ‘இந்து’ என்பதற்கு இலக்கணம் நிர்ணயிக்க முடியாமல் எதிர் மறையான இலக்கணமே பதிவாகியுள்ளது. “யாரெல்லாம் யூத, பாரசீக, கிறிஸ்துவ, இசுலாமிய மதத்தவர் இல்லையோ, அவர்களெல்லாம் இந்துக்கள்” என்கிறது சட்டம். சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், நாத்திகர்கள் போன்ற அனைவரையும் இந்துக்கள் என்று தான் கூட்டுச் சேர்த்துக் கொள்கிறது.

பார்ப்பனர்கள், ஆங்கிலேய அரசாங்கத்தில், சட்டமன்ற - நாடாளுமன்றப் பதவிகள், கல்வி, வேலைவாய்ப்புகள், தொழில்வாய்ப்புகள் போன்றவற்றைப் பெறுவதற்காகவும் - இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை விட அதிகமான எண்ணிக்கையில் இடம் பிடிப்பதற்காகவும், ‘இந்து’ என்று சொல்லப்படும் மதத்தை ஏற்றுக் கொள்ளதவர் களைக் கூட ‘இந்து’ அடையாளத்திற்குள் இழுத்தனர்.

“பலதரப்பட்டவரையும் ஒன்றிணைத்த ஒரு பெரிய ‘இந்து’ சமுதாயத்தைக் கட்டுவதற்கான தேவை 19 - ம் நூற்றாண்டில் இருந்தது. அதிகாரத்தில் பங்கு கேட்பதற்கு அவரவருடைய சமூகத்தின்  (Community) எண்ணிக்கை பலம் முக்கியமானதாக இருந்தது. அதிகாரப்பகிர்வு என்பது பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையாக இருந்தது. அரசாங்கப்பதவிகளுக்கான போட்டி கடுமையாக இருந்ததால்  அவரவருடைய சமூகத்தின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழலாயிற்று.

“முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் விஎங்களுக்கு எண்ணிக்கை பலம் அதிகம், எனவே எங்களுக்குத்தான் அரசாங்கப் பணிகளிலும் அதிகார மையங்களிலும் அதிக இடம் வேண்டும்” என்று கூறிய இந்துக்கள் (பார்ப்பனரும் பிற உயர் சாதியினரும்) தமது எண்ணிக்கையைப் பெருக்கிக்காட்டும் பொருட்பெளத்த, சமண, சீக்கிய நெறிகளைச் சேர்ந்தவர்களையும், பஞ்சமர், பழங்குடியினர் ஆகியோரையும் தமது சமூகத்தைச் சேர்ந்தவர்களாக்கினர். ஆரிய சமாஜத்தினர் மதம் மாறிச் சென்றவர் களை ‘சுத்தி’ செய்து இந்துக்களாக்கினர். இவ்வாறு பலதரப்பட்டவர்கள் ‘இந்து’ என்ற திணைக்குள் கொண்வரப்பட்டதால், ‘இவர்தான் இந்து’ என்ற திட்டவட்டமான வரையறையை யாராலும் வழங்க முடியவில்லை.  - ‘இந்து - இந்தி- இந்தியா’ நூல்

நாம் இந்தியர்கள் ஆனதையும், இந்துக்கள் ஆனதையும் பார்த்தோம். இனி இந்த இந்திய சுதந்திரப் போராட்டம் எதற்காகத் தொடங்கப்பட்டது? யாரால் தொடங்கப்பட்டது என்பதைப் பார்ப்போம். தோழர் பெரியார் அதை விளக்குகிறார்.

ஜாதிக்கிளர்ச்சிதான் சிப்பாய்க்கலகம் - தோழர் பெரியார்

“இந்துமதத்தைக் காப்பாத்துகிறோம்ன்னா, இந்து மத, ஆதார சாஸ்திர சம்பிரதாயங்களைக் காப்புத்துவதாகத்தான் அர்த்தம். அதைத்தானே சொல்லுகிறான். மதத்திலே உயர்ந்திருக்கிறவன் பாப்பான். அதை மாட்டேன்னு சொல்ல முடியாதே? எந்த ஆட்சியும் இந்தப் பாப்பான் செல்லுகிறபடி வச்சாதான் இந்த ஆட்சி நிலைக்கும்படி செய்தான்களே தவிர, இல்லாட்டா ஆட்சியைக் கவிழ்த்திடறான்.

1857 லிலே வெள்ளைக்காரன் ஆட்சியிலே சிப்பாய்க் கலகம் - அது என்னாச்சி? ஜனங்கள்  ஏதோ ஒரு சுதந்திரக் கிளர்ச்சின்னு நம்பிகிட்டே இருக்கிறான். அது என்ன கிளர்ச்சி? ஜாதியைக் காப்பாத்தற கிளர்ச்சி. இதை நாங்கள் தான்  சொல்லுகிறோம் அது ‘ஜாதிக்கிளர்ச்சி’-ன்னு மத்தவனெல்லாம் அதைச் சுதந்திரக் கிளர்ச்சிங்கிறான். 1857-யை வச்சி நேற்று 1957-க்கு நூற்றாவது ஆண்டுவிழா கொண்டாடியிருக்கிறாங்க- அதைவச்சி நிறையப் புரட்டு, அது சாதிக்காக நடந்தது. அது எப்படி ஒழிஞ்சதுங்கிறதை ஒரு வார்த்தை சொல்றேன் கேட்டுக்கங்க. 1857-ல் விக்டோரியா ராணியம்மா பதவிக்கு வந்தாங்க. அந்தப்பதவிக்கு வந்த உடனே இந்த (சாதிக்) கலவரத்தை அடக்கிறதுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறாங்க. என்னா அந்த வாக்குறுதி கொடுத்திருங்காங்கன்னா!

மகாசாசனம்

“இந்துக்களாகிய உங்களுக்கு - உங்கள் ஜாதி - மத - சாஸ்திர - புராண - இதிகாசங்களிலே,  நாங்கள் பிரவேசிப்பதில்லை. அவைகளைக் காப்பாத்திக் கொடுக்கிறோம்”. அப்படீன்னு வாக்குறுதி கொடுத்தாங்க. அதுக்குப்பேருதான் ‘மகாசாசனம்’ என்கிறது.

எனக்கு தெரியும். சீனிவாசச்சாரியார், சிவசாமி அய்யர் இவுங்க எல்லாம் எங்கள் சுயமரியாதை இயக்கம் ஏற்பட்பிறகு ஜாதிகளைப் பத்தி பேச்சு வந்த காலத்திலே, இதே சீனிவாசாச்சரியார் எழுதிக்கொடுத்திருக்கிறாங்க.  கவர்மெண்டுக்கு. 1857 லே நீ கொடுத்தது வாக்குறுதின்னா? இப்போ எப்படி நடக்கிறே, சட்டசபையிலே சமுதாய சம்மந்தமாய்க் கேள்வி வந்தால் ராணி அம்மா கொடுத்த வாக்குறுதி என்னாச்சி? இப்படியே ஜாதியைச் காப்பாற்றுகிற அரசாங்கத்தை ஆதரிக்கிறது. ஜாதிகளை ஒழிச்சி மக்களை சமத்துவமாக்கனும்னா அந்த அரசாங்கத்தை ஒழிக்கிறது. இதுதான் பார்ப்பனர்களுடைய தொழில். 03.11.1957 ஜாதி ஒழிப்பு மாநாட்பெரியார் உரை பெரியார் சித்தனைத் திரட்டு-1 பக்கம் - 56, 57)

இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்கள் நுழைந்த காலத்திலிருந்தே போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. ஆனால் 1857 சிப்பாய்க் கலகத்தைத் தான் சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கமாக வரலாறு பதிவுசெய்கிறது. சிப்பாய்க் கலகத்தைத் தொடங்கியவர்கள பார்ப்பனர்கள். ஆனால் அதற்கு முன்பே போராடியவர்கள் முகமதியர்கள், தமிழர்கள், பார்ப்பனர் அல்லாதவர்கள். பார்ப்பனர்களால் தொடங்கப்பட்போராட்டமே முதல் சுதந்திரப் போராட்டமாகப் பதிவாகி உள்ளது.  இதுவே முதல் பார்ப்பனப் பித்தலாட்டம்.  

பார்ப்பனர்கள் ஏன் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் தொடங்கினார்கள்?

1829 ல் வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டை ஏறுதலைத் தடைசெய்தார். நரபலியைத் தடைசெய்தார்.

1834 ல் டல்ஹெளசி பிரபு காலத்தில்,மெக்காலேவால் இந்தியாவில் முதன்முறையாக சமஸ்கிருதக் கல்விமுறைக்கு எதிராக அறிவியல், ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை, மும்பை, கல்கத்தா, ரூர்கி ஆகிய நகரங்களில் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. 1854 ல் விதவை மறுமணம், குழந்தைத் திருமணத்தடைச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

திருமலை நாயக்கன் ஆட்சி காலத்திலும் மனுசாஸ்திரப்படியே தீர்ப்புகள் வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் காலம் வரை சாதர் திவானி அதாலத், சாதர் நிஜாமத் அதாலத் போன்ற நீதிமன்றங் களிலும் மனுசாஸ்திரமே நீதி வழங்கும் நூலாக இருந்தது. 1851 ல் மனுதர்மத்துக்கு எதிராக நீதிவழங்க கிரிமினல் சட்டம் உருவாக்கப்பட்டது.

இவற்றால் அதுவரை கல்வி, அரசுப்பணிகள் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்திவந்த பார்ப்பனர்கள் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த 1885 ல் உருவாக்கப்பட்டதே காங்கிரஸ். ஆங்கிலேய ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்பவரால், பார்ப்பனர் களுக்கு ஒரு வேலைவாய்ப்பு மய்யம் போல உருவாக்கப் பட்டதே காங்கிரஸ். தொடக்கக் காலங்களில் ஆங்கிலேயே அரசை ஆதரித்து, நன்றி செலுத்தியே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆனால் ஆங்கிலேய அரசு தொடர்ச்சியாக இந்த நாட்டுப் பூர்வீகக்குடிகளுக்கு உரிய பிரதிநிதித் துவங்களைக் கொடுத்து வந்தது. பார்ப்பனர்களின் பங்கு குறைந்தது. சாஸ்திர சம்பிரதாயங்களின் முக்கியத்துவம் குறைந்தது. அதனால் எழுந்தது தான் இந்திய விடுதலைப் போராட்டம்.

சிப்பாய்க் கலகமாக 1857 ல் பார்ப்பனர்களுக்கான விடுதலைப் போராட்டம்தான் தொடங்கப் பட்டது. தொடங்கியவர்களும் நானா சாகேப் பேஷ்வா, மங்கள் பாண்டே என்ற பார்ப்பனர்கள்தான். நானா சாகேப், மங்கள் பாண்டேயிடம் கூறுகிறான்,

“நமக்குத் தேவை நம் இனத்தின் - பார்ப்பனர்களின் விடுதலை தான். ஆனால்,இதை வெளிப்படை யாகக்கூறினால், நமக்கு பெரும் பான்மை மக்கள் பலம் கிடைக்காது. எனவே ‘இந்திய விடுதலை’ என்று கூறினால் பெரும்பான்மை மக்கள் பலம் கிடைக்கும். எனவேஇதை இந்திய விடுதலைப் போராட்டம் என்றே தொடங்கலாம்” எனப் பேசுகிறார்.  (‘வால்கா முதல் கங்கா வரை’ நூல், முதல் பதிப்பு. பிற பதிப்புகளில் அந்த உரையாடல் நீக்கப்பட்டு விட்டது.)

முக்கியமாக, காங்கிரஸின் முதற்கட்டத் தலைவரான பாலகங்காதர திலகர் பற்றியும் அறிய வேண்டும். அவர் ஒரு மராட்டியப் பார்ப்பனர். சுயராஜ்யம் நமது பிறப்புரிமை என்றவர். 1895 ல் விநாயகர் சதுர்த்தியைத் தொடங்கியவர். 1896 ல் சிவாஜி விழாவைத் தொடங்கியவர். அவரது கேசரி எட்டில் எழுதியதைப் பாருங்கள்.

“நாம் கேட்கும் சுயராஜ்யம் என்பது, வெள்ளையர்களை நாட்டைவிட்வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. எங்கள் நாட்டின் வேத, சாஸ்திரங்கள்தான் எங்களை ஆளவேண்டும். சுயராஜ்யம் வந்தால் மனுநீதியை அரசமைப்புச் சட்டமாகவே ஆக்கவேண்டும். ஆக்குவோம்” என 1917 லேயே பார்ப்பன வெறியோபேசியவர் பாலகங்காதர திலகர்.  சான்று: 11.01.1917 கேசரி ஏடு.

பார்ப்பனர்கள் அவர்களது இந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்களைக் காப்பாற்றவும், ஆங்கிலேய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில், அரசு நிர்வாகங்களில் தங்களது ஆதிக்கத்தைத் தொடருவதற் காகவும் தொடங்கப்பட்டது தான் இந்திய சுதந்திரப் போராட்டம்.

பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தக்க வைப்பதற்காக நடந்த அந்தப் போராட்டத்தில் இந்து மதத் தத்துவங்களின்படி பார்ப்பன அடிமைகளான பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் மிகத் தீவிரமாகப் பங்கேற்றனர். உலகிலேயே தம் இனத்தை ஆதிக்கம் செய்யும் இனத்துக்குத் தங்களை முழுமையான, நிரந்தரமான அடிமைகளாக்க - அடிமைகளே போராடிய வரலாறு என்பதுதான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு.  

நமக்கு எதிராகப் பார்ப்பனர்கள் தொடங்கிய இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதை ஆதாரங்களுடன் அடுத்த இதழில் காண்போம்.

- தொடரும்

Pin It