கல்வியாளர்கள் வே.வசந்திதேவி, ச.சீ.இராசகோபாலன் மற்றும் பலருடைய கருத்துப் பகிர்வுகள் மூலம் இவ்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 21 ஆம் நாள் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.
இவ்வறிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொடுத்துள்ளோம். இவ்வறிக்கையில் உள்ள கல்விக் கோரிக்கைகளை நிறைவேற்ற தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்தோம்.
பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையிலும், நாம் தமிழர் கட்சி ஆட்சி செயல்பாட்டு அறிக்கையிலும் மக்கள் கல்விப் பறைசாற்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இன்னும் ஒரு சில கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வராமல் உள்ளன. நமது கல்விக் கோரிக்கைகள் மீதான உறுதிமொழிகள் இனிமேல் வெளியிடப்பட இருக்கின்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வறிக்கையை ஆசிரியர்கள், மாணவர்கள் , சமூக செயல்பாட்டாளர்களிடம் கொண்டு செல்லவும் விளக்கக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.
தங்களின் மேலான பார்வைக்கும் இவ்வறிக்கையை அனுப்புவதில் பெருமையடைகிறோம். நமது கல்விக் கோரிக்கைகள் நிறைவேறவும் கல்வியில் மக்களாட்சி நெறியுடைய வளர்ச்சி ஏற்படவும் உங்களது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வேண்டுகிறோம்.
அறிக்கையினைப் படிக்க இங்கே அழுத்தவும்.
- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு - தமிழ்நாடு