mskk documentகடந்த 2011 ஏப்ரலில் நமது கட்சியின் கொள்கை திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது மே 5, 2011இல் நடந்த முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அவ்வறிக்கையில் வரலாறு மற்றும் திருத்தங்கள் இறுதி வரைவு அறிக்கையில் கொண்டு வரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அமைப்பு சிக்கல் மற்றும் இரண்டு கைதுகள் காரணமாக இறுதி வரைவு அறிக்கை தயாரிப்பு தாமதமானது.

கடந்த 28.4.2014இல் நடந்த நிலைக்குழுக் கூட்டத்தில் தோழர்கள் துரைசிங்கவேல், பழனி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவு அறிக்கை விவாதிக்கப்பட்டது. இவ்வறிக்கை மையக் குழுவில் முன்வைத்து சுற்றுக்கு கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

இவ்வறிக்கை இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி தமிழ்நாடு வரலாறாகும். நமது கட்சி தமிழக வரலாற்றைப் பற்றி மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டிருப்பதால் இக்கொள்கை அறிக்கையிலேயே வரலாற்றை இணைப்பது என்று முடிவு செய்தோம்.

இவ்வறிக்கை மீதான விமர்சனங்களை, ஆலோசனைகளை முன்வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்த இறுதி வரைவு அறிக்கை மாநாட்டிலோ அல்லது பேராயத்திலோ இறுதி செய்யப்படும்.

தோழமையுடன்,

நிலைக் குழு

மக்கள் சனநாயக குடியரசு கட்சி

கொள்கை அறிக்கையினைப் படிக்க இங்கே அழுத்தவும்.

 

 

Comments

2 comments

2
Dharmaraja
வணக்கம். கொள்கை அறிக்கையில் தொடர்புக்கும் நமது கருத்துக்களை அனுப்புவதற்கும் மின்னஞ்சல் எதுவும் தரப்படவில்லை. உங்கள் மின்னஞ்சல் தந்தால் கொள்கை அறிக்கை பற்றிய எமது கருத்துக்களை அனுப்ப ஏதுவாக இருக்கும். நன்றி
deva. durai

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.