தனியார் பள்ளி ஆங்கில வழிக் கல்வி மோகமே எங்கும் தலைதூக்கி, வறிய நிலையில் வாழும் மக்களும், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டித் தங் கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் பயிலவைக்கும் இந்நாளில், இம் மோகத்தை, மாயையைத் தகர்க்கும் வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் - மருத்துவர் சிரிவித்யா தம்பதியினர் தங்கள் குழந்தை கோபிகாவை தமிழ் வழியில் அரசு பள்ளியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திலிருந்து சுமார் 1/2 கி.மீ. தொலைவில் உள்ள குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேர்த்துள்ளனர்.
சமூகத் தேவை, நலன் பற்றி எந்த வித அக்கறையுமற்று தன்னலமே குறி யாய் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி தனியார் பள்ளிகளிலேயே சேர்க் கும் அதிகாரிகள் மத்தியில் இப்படி நம்பிக்கையூட்டும் விதத்தில் துணிச் சலாய் தங்கள் குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்துள்ள மாவட்ட ஆட்சியர் - மருத்துவர் தம்பதியினர்க்கு முதலில் ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் மண்மொழியின் வாழ்த்து களும் பாராட்டுகளும்.
இது மாதிரி நடவடிக்கைகளில் கணவர் மட்டும் முடிவெடுத்து வெற்றி கரமாய் நிறைவேற்றி விட முடியாது. துணைவியாரின் இசைவும் இதில் முக்கியம் என்கிற நோக்கில் இதற்கு இசைவு தந்த ஆட்சியரது துணைவி யார்-கணவர் கோரிதான் மனைவி இசைவு தந்திருப்பார் என்பது அனு மானம்.பொதுப்போக்கு. ஒரு வேளை மனைவி கோரியும் கணவர் இசைவு தந்திருக் கலாம். எப்படியானாலும் - இருவரும் ஒருமித்த கருத்தோடு இம் முடிவுக்கு வந்த முன் மாதிரி நடவடிக் கைகள் பல வகையிலும் தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டுபவை. ஊக்கம் தருபவை.
முக்கியமானவர் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் ஆங்கில வழி தனி யார் பள்ளியில் படிக்க, வக்கற்ற வீட்டுக் குழந்தைகளுக்குத்தான் அரசு தமிழ்ப்பள்ளி என்கிற நிலை இருப்ப தால்தான் அரசு பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் புறக்கணிக்கப்படுகிறது. அது அக்கறையற்ற கவனிப்பற்ற கல்வியாக ஆக்கப்படுகிறது. இதனால்தான் உண்மையிலேயே தமிழ் வழியில் படிக்க வைக்கவேண்டும் என்று ஆர் வப்படுகிற பெற்றோரும் தரமான கல்வி இங்கு கிடைக் காது என்று கருதி தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர்.
இப்படி முக்கியமானவர் வீட் டுப் பிள்ளைகளையெல்லாம் அரசு தமிழ்ப் பள்ளிகளில் சேர்த்தால் பள்ளி ஆசிரியர்களுக்கு பிள்ளைகள் மேல் கூடுதல் அக்கறை வரும். பொழுது போய் குழந்தைகள் வீட்டுக்குப் போனால் பள்ளியில் என்ன சொல்லிக் கொடுத்தார்கள் என்று பெற்றோர்கள் கேட்பார்களே என்கிற அச்சம் இருக்கும். குறைகள் இருந்தால் கவனித் துக் களைய நடவடிக்கை மேற்கொள் வார்கள். இப்படி நடவடிக்கை மேற் கொள்ளும் போதுதான் பள்ளியின் தரமும் உயரும். அனைவருக்கும் அரசு தமிழ்ப் பள்ளிகள் மீது உரிய அக்கறை யும் பிறக்கும்.
இந்த நோக்கில் அரசு தமிழ்ப் பள்ளிகள் சார்ந்த இந்த அக்கறைக்கு வழி வகுத்திருக்கின்றனர் ஆட்சியர் - மருத்துவர் தம்பதியினர். இந்த முன் மாதிரியை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும், கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரும் அதே வேளை, ஆனந்தகுமார் - சிரிவித்யா தம்பதியினருக்கும் ஒரு வேண்டுகோள்.
கோபிகாவை நீங்கள் அரசு தமிழ்ப் பள்ளியில் சேர்த்ததன் மூலம் தமிழகமெங்கும் நீங்கள் பாராட்¢டுக் குள்ளாகியிருக்கிநீர்கள். பல்வேறு ஊட கங்கள் வழி கோபிகா தமிழகமெங்கும் கவனிப்புக்குரிய ஓர் குழந்தையாக ஆகியுள்ளார். எனவே அக்குழந்தை யின் வளர்ச்சியும் எதிர்காலமும் இவ்வாறே கவனிக்கப்படும். ஆகவே இந்தச் சூழ்நிலையில் நாங்கள் கோருவ தெல்லாம் இந்தக் கவனிப்புகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து, நம்பிக்கை யூட்டும் விதமாக, நீங்கள் எங்கு மாறு தலாகிச் சென்றாலும், எங்கு குடி பெயர்ந்தாலும், கோபிகாவை அரசு தமிழ்ப் பள்ளியிலேயே படிக்க வைத்து, அதை வெற்றிப் பயணமாக்கி தமிழ்ச் சமூகத்துக்கு வழி காட்டுங்கள். நம்பிக்கையூட்டுங்கள் உங்கள் அடுத்த குழந்தையையும் இவ்வாறே அரசு தமிழ்ப் பள்ளியிலேயே படிக்க வையுங்கள் என்பதுதான்.
இந்த நேரத்தில் குமலன்குட்டை பள்ளித் தலைமை ஆசிரியர் ராணி அவர்களுக்கும், சக ஆசிரியர்களுக்கும் ஒரு வேண்டுகோள். மாவட்ட ஆட்சி யரின் குழந்தை உங்கள் பள்ளியில் சேர்ந்திருப்பதால் உங்கள் பள்ளி தமிழக அளவில் கவனிப்புக்குள்ளாகி யிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, உங்கள் பள்ளியின் கல்வித் தரத்தையும் கட்டுமானத்தையும் மேலும் உயர்த்த முயலுங்கள். உங்கள் பள்ளி தமிழகத்திலேயே ஒரு முன் மாதிரிப் பள்ளியாகத் திகழ சக ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டு தமிழ்ச் சமூகத்துக்கு அரசு தமிழ்ப் பள்ளிகள்பால் நம்பிக்கை ஊட்டுங்கள். நன்றி.
குறிப்பு: தற்போது குழந்தை கோபிகா குமலன்குட்டை பள்ளியில் இல்லை. நேர்மையானவர்களை நிம்மதியாய் வாழ விடாத ஆதிக்கசக்திகளும் அதிகார மையங் களும் ஆட்சியர் ஆனந்தகுமார் தங்களுக்கு வசப்பட்டு வரவில்லை என்பதால் அவரை மாறுதல் செய்து சென்னையில் வேறு துறைக்குத் து£க்கியடிக்க அவர் இடம் பெயர நேர்ந்து தற்போது கோபிகா, மருத் துவராகப் பணியாற்றும் தன் தாய் வழித் தாத்தா பாட்டியின் சொந்த ஊரான சிவகங்கைப் பள்ளியில் சேர்க்கப்பட்டு அங்கு படித்து வருவதாகக் கேள்வி .குழந்தை கோபிகா கண்ணீர்மல்க அனை வரிடமிருந்தும் விடைபெற்றுச் சென்றாராம்.
சட்ட மன்றங்களில் குறைந்து வரும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை
சமீபத்தில், சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலை விட மிகவும் குறைந்துள்ளது. இத்தனைக்கும் இந்தத் தேர்தலில் இரு மாநிலங்களில் பெண் முதல்வர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் மன்ற உறுப்பினர்களில் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது குறிப்பாக கவனத்திற்குரியதாகிறது.
தேர்தல் நடைபெற்ற அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 824. இதில் 72 பேர் மட்டுமே பெண்கள். அதாவது 9 விழுக்காட்டிற்கும் குறைவு. அதாவது நாடாளுமன்றத்திலேயே 11விழுக்காடு பெண்கள் இருக்க ,சட்ட மன்றங்களில் 9 விழுக்காடு கூட இல்லை என்பது கவலை க்குரியது. இது 2006 தேர்தலில் 80ஆகக் குறைந்து, இந்தத் தேர்தலில் 72ஆகக் குறைந்துள்ளது. இதன் விவரம் வருமாறு:
மேற்கு வங்கம் 34 (12 விழுக்காடு) அசாம் 14 (11 விழுக்காடு) தமிழ்நாடு 17 (7 விழுக்காடு) கேரளா 7 (5 விழுக்காடு) புதுச்சேரி ஒன்றுமில்லை. இதில் கட்சிவாரியாக பார்த்தால் திரிணாமுல் காங்கிரஸ் 24 (13 விழுக்காடு) காங்கிரஸ் 17 (10 விழுக்காடு) அ.தி.மு.க 12 (8 விழுக்காடு).
ஆனால் இதில் வேடிக்கையும் வியப்பும் என்ன வென்றால் எண்ணிக்கையில்தான் பெப்ணகள் குறைந்திருக் கிறார்களே தவிர செல்வாக்கிலோ பண பலத்திலோ அல்ல.இந்த 72 பேரில் 19பேர் கோட்டீஸ்வரிகள். இதில் தமிழ்நாடு 9, அசாம் 6, மேற்கு வங்கம் 4, இதிலும் தமிழ்நாடு முதலிடம். ஜெயலலிதா 51.4 கோடி. அடுத்த இடத்தில் மேற்கு வங்கம் கஸ்தூரிதாஸ் திரிணாமுல் காங்கிரஸ் 7.2 கோடி.
சட்டமன்ற நாடாளுமன்றங்களில் பெண்களின் 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இப்புள்ளி விவரம் மிகுந்த கவனத்திற்குரியது. அதே வேளை அரசியலுக்கு வரும், அல்லது அரசியலில் வாழும் பெண்கள் எல்லோருமே சாமானியமானவர்கள் அல்ல. தற்போதுள்ளதில் கிட்டத்தட்ட 25 விழுக்காடு பெண்கள் கோட்டீஸ்வரிகள் என்பதும் இந்திய அரசியல் சூழலை வெளிப்படுத்தும் ஒரு சான்றாகவும் கொள்ளலாம்.
தேசிய தேர்தல் கண்காணிப்பு (National Election Watch) என்னும் தன்னார்வ அமைப்பின் ஆய்வுகள் இத் தகவல்களைத் தெரிவிக்கின்றன.
எனக்கு மட்டும் இல்லையா கல்வி? - குறும்படம்
தமிழகக் கல்விச் சூழலின் அவல நிலையை - பள்ளிகளின் அகக் கட்டுமானம், மாணவர்களின் ஏழ்மை, ஏலாமை, ஆசிரியர் களின் பொறுப்பற்றத்தனம், அக்கறையின்மை, கல்வித் தரம், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் முதலானவை குறித்த நிலையை விளக்கி,பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி யுள்ள ஆவணக் குறும்படம் ‘எனக்கு மட்டும் இல்லையா கல்வி?’
தமிழகமெங்கும் உள்ள பல் வேறு பள்ளிகள், அதன் கட்டுமானங்கள், பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் இப்படிப் பலரையும் நேரில் சந்தித்துத் தொகுக்கப்பட்ட பல தரப்பட்ட தகவல்களுடனும் இந்நிலை பற்றிய தமிழ கத்தின் குறிப்பிடத்தக்க கல்வியாளர் களின் கருத்துரைகளுடனும் உருவாக்கப்பட்டுளது இக்குறும் படம்.
இந்திய அரசமைப்புச் சட்டம் வழிகாட்டும் நெறி முறைகளில் இடம் பெற்றிருந்த கல்வி, 1993 உச்ச நீதிமன்ற ஆணையின்படி அடிப்படை உரிமை யாக்கப் பட்ட பிறகும், ‘கட்டாய இலவசக் கல்வி’ என்பது ஏழை எளிய மக்களுக்கு எப்படி எட்டாக் கனியாகவே உள்ளது என்பதை உள்ளத்தை உருக்கும் பல உரையாடல்களோடும் நிகழ்வுகளோ டும்,சித்தரிக்கும இக்குறும்படம், சமச்சீர் கல்வி சர்ச்சைக்குள்ளாக்கப் பட்டு நாடு முழுவதும் அது கவனிப்புக்குள்ளாகியிருக்கும் சூழலில் வெளிவந்திருப்பது சாலப் பொருத்த முடையதாகும்.
தொடர்புக்கு: 94442 99656