a muthukrishnan gujrat'தெகல்கா'வின் குஜராத் 2002 சிறப்பிதழ் வெளியான சில நாட்களில், செய்தி தொலைக்காட்சி ஒன்றில் தோன்றினார் தருண் தேஜ்பால். இந்திய ஊடகங்களின் போக்கு, குஜராத் புலனாய்வு, 'தெகல்கா'வின் அனுபவங்கள், நிதி நெருக்கடிகள் எனத் தொடர்ந்த அவரது உரை, பல திசைகளில் சென்றது. இந்த சிறப்பிதழை 'தெகல்கா' வின் அனுமதியுடன் முழுமையாக மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற ஆவல், அப்பொழுது தான் முடிவாய் உருப்பெற்றது. உடனே அனுமதியும், மொழியாக்க உரிமையும் பெறும் முயற்சிகளும் தொடங்கின.

'தெகல்கா'வின் பி.சி. வினோஜ் குமார் அவர்களின் உதவியின்றி, இந்த வெளியீட்டு முயற்சி சாத்தியமில்லை. இந்த வெளியீடு வரும் வரை தொடர்ந்து ஊக்கமளித்த தருண் தேஜ்பால் மற்றும் நீனா தேஜ்பால் ஆகியோருக்கும் நன்றி உரித்தாகட்டும். 'வாசல்' – 'தலித்முரசு' ஆகிய இரு பதிப்பகங்களின் கூட்டு முயற்சியால் இந்த வெளியீடு வருவது கூடுதல் மகிழ்ச்சி.

இன்னும் பலம் பொருந்திய பரந்த மேடையை உருவாக்கி, மதவெறியை முறியடிப்பதற்கான சூழல் நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த வெளியீடு 2008 இல் வெளிவந்த பொழுது பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்றைய சூழலில் வாசகர்கள் பலர் மீண்டும் இதனை எடுத்து வரும்படி வலியுறுத்தினர். பாசிச எதிர்ப்பாளர்கள், ஜனநாயக விரும்பிகள் நிச்சயம் இதனை கையில் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் களம் காண்கிறோம்.

புத்தகத்தினைப் படிக்க இங்கு  அழுத்தவும்.

குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?
'தெகல்கா'வின் புலனாய்வு
தமிழாக்கம் : அ. முத்துக்கிருஷ்ணன்
முதல் பதிப்பு : ஜனவரி 2008
இரண்டாம் பதிப்பு : பிப்ரவரி 2008
மூன்றாம் பதிப்பு : ஏப்ரல் 2014
விலை : ரூ. 130

புத்தகத்தினைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்:

வாசல் பதிப்பகம்
402, முதல் தெரு
வசந்த நகர்
மதுரை 625 003
செல் : 98421 02133

தலித் முரசு
எஸ் – 5, மகாலட்மி அடுக்ககம்
26/13 குளக்கரை சாலை
சென்னை 600 034
பேசி : 044 2822 1314

- அ.முத்துக்கிருஷ்ணன் (muthusmail@gmail.com)

Pin It