பத்திரிகையாளர் சந்திப்பு  மற்றும் அணு உலைகளின் அச்சங்களைப் பற்றிய அறிவியல் பூர்வமான  விளக்கக்கூட்டம்.

பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள் அமைப்பிலிருந்து மருத்துவர் ரமேஷ், மருத்துவர் புகழேந்தி விளக்கமளிக்கிறார்கள்.

நாள்: 22.10.2011
இடம்: அய்க்கஃப் வளாகம், சென்னை
லயோலா கல்லூரி அருகில், காலை 10 மணி

இந்தியாவிலிருந்து அணு உலைகளை முற்றிலும் மூடக்கோருவதற்கான வாய்ப்பும், தலைமையும் இயல்பாகவே தமிழகத்திற்கு வந்துள்ளது! இந்தத் தலைமையை முன்னெடுத்து மக்களைப் பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை!

பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு அனைத்து சுற்றுச்சூழல் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், சமூக நீதி இயக்கங்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மக்களைக் காக்கும் அறிவியலாளர்கள், படைப்பாளிகள், அறிவுஜீவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை இணைத்து 'அணுசக்திக்கு எதிரான மக்கள் சக்தி' என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்று உருவாக்குவதற்காக உங்களுடைய செயல்திட்டங்களுடன் வாருங்கள்!   

பூவுலகின் நண்பர்கள்,
பூவுலகு - சுற்றுச்சூழல் இதழ்

www.poovulagu.org
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

98410 31730, 94440 65336, 91765 33157