நவம்பர் 2011 மற்றும் ஜனவரி 2012 மாதங்களில் வெளிவந்த சங்க முழக்கம் இதழ்களில் கூடங்குளம் அணு உலை திட்டதிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணமும் வாசகர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். முதலில் போராட்டத்தின் தன்மைகள் குறித்தும், இரண்டாவது அணு உலையின் அவசியம் குறித்தும் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மீதான விளக்கங்களை இப்போராட்டத்தை துவக்கம் முதலே உற்று நோக்கி வருபவன் என்ற முறையில் தர விரும்புகிறேன்.

kudankulam_340இது மீனவர்களின் போராட்டம் என்று அடையாளப்படுத்தி பிற சமூகத்தினர் இப்போராட்டத்தில் கலந்து விடாமல் பார்த்து கொள்ள ஒரு பொய் பரப்பல் நடந்தது. ஆனால் உண்மை என்னவென்றால் திருநெல்வேலி மாவட்ட கடற்கரை கிராமங்களில் வாழும் கிறிஸ்தவம் தழுவிய மீனவர்களான பரவர்களும், கிறிஸ்தவம் தழுவிய மற்றும்(அய்யா வழி மற்றும் அம்மன் வழி பிரிவுகள் ) ஏனைய நாடார் சமூகத்தவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் வாழும் கூடங்குளம், செட்டிகுளம், வைராவிக்கிணறு, எஸ்.எஸ்.புரம் போன்ற உள்நாட்டு கிராமங்களை சார்ந்தவர்களும் விஜயாபதி போன்ற கிராமங்களில் வாழும் இசுலாமியர்களும் இடிந்தகரை லூர்துமாதா ஆலயத்திற்கும் சித்தி விநாயகர் திருக்கோவிலுக்கும் இடைப்பட்ட மைதானத்தில் பந்தல் அமைத்து சாதி, சமய வேறுபாடு கருதாமல் "இது தமிழர் போராட்டம்" என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு போராடி வருகிறார்கள். இது யாரும் எந்த நேரமும் நேரடியாக போய் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும் உண்மை நிலையாகும். இது மீனவர்களின் போராட்டம் என்ற பொய் பரப்பலுக்குப் பின்னணியில் இருந்த இன்னொரு காரணம் இதை கிறிஸ்தவர்கள் போராட்டமாக சித்தரிக்க தயாரிக்கப்பட்ட சூழ்ச்சி திட்டமாகும்.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரத்தை தங்கள் பூர்வீக வாழ்விடமாகக் கொண்ட பாரம்பரிய மீனவர்களான பரவர்களும், முக்குவர்களும் முழுக்க முழுக்க கிறிஸ்தவம் தழுவியவர்கள் ஆவர். எனவே மீனவர் போராட்டம் என்றாலே அது கிறிஸ்தவர் போராட்டம் என்று அடையாளம் காட்ட விரும்பும் சூழ்ச்சியாகும். அதன் பின்னர் இது அந்நிய நாடு தூண்டுதல் என்பதும், வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்பதும், பணத்திற்கும் பிரியாணிக்கும் மக்கள் போராட வருகிறார்கள் என்பதும், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை குறி வைத்து ஆய்வு என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுப்பதும் மெல்ல மெல்ல விரியும் ஒரு பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

போராட்டத்தின் நியாயங்களை நேரடியாக சந்திக்க முடியாத காரணத்தால் போராட்டத்தை களங்கப்படுத்துவது என்ற மோசடி திட்டத்தை அரங்கேற்றி வருகிறது காங்கிரஸ் அரசு. அயல் நாடுகளிலிருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் இந்திய அரசின் அனுமதி பெற்று, ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு இயங்கி வருவது இங்கு ஒன்றும் புதிதில்லையே. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, சமயம் சாராத நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இருக்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சில கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களில் மட்டும் வெளிநாட்டு பணம் வந்துள்ளதாக கூப்பாடு போடுவதேன்? வேறு எந்த நிறுவனங்களும் வெளிநாட்டு நிதி பெறவில்லையா? அவை பற்றி பேசாதது ஏன்? ஆதரவாக போராடும் தொண்டு நிறுவனங்களுக்கு போராட்டத்திற்காக வெளிநாட்டு பணம் வந்ததிற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? அப்படி ஒன்றும் இதுவரை கிடைத்ததாக செய்திகள் இல்லையே. பொய்ச் செய்திகள் மட்டும்தான் வருகின்றனவே தவிர ஆதாரங்கள் முற்றிலும் இல்லை.

எளிய மீனவர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் தங்கள் அன்றாட வருமானதிலிருந்து தரும் பங்களிப்புகள்தான் போராட்டத்தின் பொருளாதாரப் பின்னணி என்று உண்மையை விளக்கினால் அதற்கு கணக்கு காட்ட வேண்டாமா என்கிறார்கள். அந்த கணக்கை காட்ட சொல்லும்போது இதுவரை நாங்கள் சொன்னதெல்லாம் தவறுகள் என்று மன்னிப்பு கேட்பதல்லவா நாகரீகம். வெளிநாட்டு பணத்தில் போராட்டம் நடக்கவில்லை என்பதை அந்த கருத்தை பரப்பியவர்கள் நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவிப்பதுதானே நேர்மை. தங்கள் வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரங்களை காக்க ஈகங்கள் செய்து பெரும் எழுச்சியுடன் எளிய தமிழ்ச்சமுகத்தினர் நடத்தி வரும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தின் நியாயங்களுக்கு பதில் சொல்ல முடியாத இந்திய அரசு, ஒன்றுபட்டு நிற்கும் சமுகத்தை சாதி, சமய அடிப்படையில் பிளவுப்படுத்தி அப்பகுதியில் பெருவாரியாக வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்கள் மீது "தேசவிரோதிகள்" என்ற முத்திரையை குத்த முயற்சிக்கும் சூழ்ச்சிதான் இது.

இதுவரை வகுப்புவாத சக்திகள் செய்து வந்த இந்த பொய் பரப்பலை இப்பொழுது காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையிலான அரசாங்கமும் செய்கிறது. அடிப்படையில் இது மதவாதம் கூட இல்லை, இது ஆதிக்க சாதித் திமிர். ஏனெனில் தென் தமிழகத்தில் அதுவும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் செறிந்து வாழும் நாடார், ஒடுக்கப்பட்டவர், பரவர், முக்குவர் கிறிஸ்தவம் தழுவியது ஆதிக்க சாதி மற்றும் ஆதிக்க வர்க்கத்தினரின் கொடுமையிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளத்தானே. இச்சமுகங்களின் மீதான தங்களின் சுரண்டலும், மேலாதிக்கமும் தளர்ந்து போன ஆத்திரத்தை தீர்துக்கொள்ளத்தானே இன்று கிறிஸ்தவர்கள் மீது இந்த பாய்ச்சல். வகுப்புவாத சக்திகளுக்கு மாற்றாக இந்த மக்கள் காங்கிரசினைக் கருதியதால் அல்லவா இன்றைக்கு அக்கட்சிக்கு தமிழக சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவமானது மிஞ்சி இருக்கிறது. இப்பொழுது காங்கிரசின் வகுப்பு, வர்க்க நலன்கள் அம்பலமாகிவிட்டதால் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையோர் நடுவில் சாயம் வெளுத்த நரியாகி நிற்கிறது காங்கிரஸ்.

யாருக்குப் பின்னால் அந்நிய நாடுகள் உள்ளன? சில்லறை வர்த்தகம் வரை நேரடி அந்நிய முதலீட்டை கொண்டு வரத்துடிக்கும் காங்கிரசின் பின்னணியிலா? இல்லை அன்றாட வருவாயில் போராட்டத்தை மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரத்தையே தாங்கும் விவசாயிகள், வணிகர்கள், மீனவர்கள் பின்னணியிலா? ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா என்று அந்நிய நாட்டின் பின்னணியில் இயங்குகிறது இந்திய அணுசக்தி துறை. அவர்களின் பின்னணி இல்லாமல் இந்த அலம்பல், புலம்பல் விஞ்ஞானிகள் நாட்டு மக்களுக்காக அவர்களது நல்வாழ்விற்க்காக ஒரு சிறு துரும்பைக் கண்டுபிடித்து தந்தார்கள் என்று சொல்ல முடியுமா? கூடங்குளம் அணு உலையை மூடும் கோரிக்கையில் வென்றால் நாட்டின் பிற பாகங்களில் உள்ள அமெரிக்க, பிரான்ஸ் கூட்டு அணுஉலை திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களும் உத்வேகமடையும் என்று அமெரிக்காவிற்குத் தெரியும் என்பது இங்கே உள்ள உலக மகாஞானிகளுக்கு தெரியாமல் போனதேன். பிறகு எப்படி அவர்கள் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தை தூண்டி விட முடியும்?

கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வை காத்துக் கொள்ள போராடக்கூடாது என்று என்று இந்தியாவில் ஏதேனும் சட்டமிருக்கிறதா? இல்லை கிறிஸ்தவ மக்கள் பங்கேற்கும் போராட்டங்களுக்கு ஆயர் பேரவை, பாதிரியார்கள் உள்ளிட்ட கிறிஸ்தவ திருச்சபை அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தருவது எந்த விதத்தில் ஒரு சனநாயக நாட்டில் தவறாகும்? தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களை பார்க்கும்பொழுது இந்த வகுப்புவாத முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சூழ்ச்சிகளுக்கு தாங்களும் இரையாகிருப்பதைக் கண்டு வருந்துகிறேன். இது வருந்தத்தக்கதும் திருத்தப்பட வேண்டியதுமாகும். 2011 செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கிய அணுஉலை எதிர்ப்பு போராட்டம் குறித்து அடுத்த மாதம் 24 -26 தேதிகளில் தங்கள் கட்டுரையில் குறிப்பிடும் திருச்சியில் கூடிய தமிழக ஆயர் பேரவை போராடும் மக்கள் தரப்பு நியாயங்களை தாங்கள் அங்கீகரிப்பதாக கருத்து தெரிவித்தது. ஆனால் தங்கள் கட்டுரையோ மேற்கண்ட ஆயர் பேரவை தீர்மானத்தையே கூடங்குளம் பகுதி மாதாகோவில்கள் நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிடுகிறது. அப்படியானால் பேரவை கூட்டத்திற்கு பிறகல்லவா போராட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும்? சங்க முழக்கத்தில் இது போன்ற தவறான தகவல் பதிவாக நேர்ந்தது துரதிர்ஷ்டமே!

ஒடுக்கப்படும் சமுகத்து மக்கள் தங்கள் அரசியல், பொருளாதார, சமுக உரிமைகளை காத்துக்கொள்ள கிறிஸ்தவம் தழுவினார்கள் எனில் இன்றும் அதே உரிமைகளை நிலை நாட்ட மக்கள் போராடும்போது கிறிஸ்தவம் எப்படி ஒதுங்கியிருக்க முடியும்? தயவு செய்து வரலாற்றை உன்னிப்பாக கவனியுங்கள். அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் கண்னசைவுக்கேற்ப அரசாங்கம் நடத்துகின்ற பா.ஜா.க, காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட ஏனையோரின் ஆதிக்கசாதி மனோபாவமும் முதலாளித்துவ கருத்தாக்கங்களும் கொண்ட தேச விரோத சக்திகள்தான் இன்றைக்கு தங்கள் உழைப்பால் இந்த நாட்டை தாங்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், மீனவர்களின் வாழ்வை, வாழ்வாதாரங்களைப் பிடுங்கி ரஷ்ய, பிரெஞ்சு முதலாளிகளின் பணப்பையை நிரப்ப கூலி வாங்கிக் கொண்டு அடியாள் வேடம் பூண்டு நிற்கிறார்கள். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் அந்நிய தூண்டுதல் இல்லை என்று ரஷ்ய நாட்டு தூதுவரே தனது நேர்காணலில் சொன்னாரே, அதற்கு ஏன் பதிலே இல்லை?(13-12 -2011 - இந்தியன் எக்ஸ்பிரஸ்)

Koodankulam_370போராட்டம் பற்றி பேசும்போது "உற்பத்தி துவக்கும் நேரத்தில் எதிர்ப்பு என்பது சற்றே உதைக்கிறது" என்று எழுதி இருக்கிறீர்கள். மேலும் "கல்பாக்கம் கண்டு அச்சம் இல்லை, கூடங்குளம் கண்டு நேற்று வரை அச்சம் இல்லை" என்று போராட்டத்தின் நேர்மை குறித்து சந்தேகத்தை எழுப்பி இருக்கிறீர்கள். 1998-இல் இந்திய -ரஷ்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளிலிருந்தே இந்த திட்டதிற்கு எதிரான போராட்டங்களும் துவங்கிவிட்டன என்பதுதான் உண்மை. அடிக்கல் நாட வரவிருந்த பிரதமரும், முதல்வரும் மக்கள் எதிர்ப்பின் காரணமாகவே வருகையை ரத்து செய்தனர். 1989 மே 1 இல் கன்னியாகுமரியில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் கூட நடைபெற்று இருக்கிறது. அதன் பின்னர் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்பதற்கு மக்கள் அஞ்சிய காரணமும் அதுதான். ஆனாலும் சின்ன சின்ன அளவிலான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஊடகங்கள் அவற்றை வெளிக்கொணரவில்லை. பின்னர் சோவித் யூனியன் சிதறுண்டதால் இங்கே திட்டம் கிடப்பில் போடப்பட்டதும் போராட்டங்களும் ஓய்ந்தன. சுமார் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட பின் மீண்டும் போராட்டங்களும் தொடங்கின. பேச்சிப்பாறை தண்ணீரை எடுக்கப்போவதில்லை என்ற வாய்மொழி உறுதியை நம்பி கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு குறைந்தது. இது குறித்து ஒப்பந்தந்தில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைவாய்ப்பு என்னும் ஏமாற்று வித்தையாலும் மக்கள் பெருமளவில் ஏமாற்றப்பட்டனர். ஆனால் அதெல்லாம் எவ்வளவு ஆபத்தான படுகுழியில் தள்ளிவிடும் பித்தலாட்டம் என்பதை மக்கள் உணர, ஜப்பான் நாட்டில் புகுஷிமாவில் அணுஉலைகள் வெடித்துச் சிதறியதை தொலைகாட்சிகளில் மக்கள் நேரில் கண்ணால் கண்டதே போதுமானதாக இருந்தது. ரஷ்யாவின் செர்நோபில் அணு உலை வெடித்துச் சிதறியபோது ஊடக வசதிகள் இத்தனை தூரம் மேன்மையுற்று இல்லாததால் மக்கள் போதிய அளவு விழிப்புணர்வு பெற முடியாமற் போனது. வெப்ப நீர் சோதனை, விபத்து பாதுகாப்பு ஒத்திகை போன்றவை மக்களை விழிப்புணர்வின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இனி எதுவாகினும் இதை அனுமதிப்பதில்லை என்று போராட்ட களம் கண்டனர் மக்கள். ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தின் உண்மைத்தன்மை இதுவாகும்.

மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி பொதுமக்கள் ஒப்புதலைப் பெற்று இருந்தால் இப்போது போராடுகிறார்களே என்ற விமர்சனம் நியாயமானதாக இருந்திருக்கும். கருத்து கேட்பே நடத்தாமல் சனநாயக மரபுக்கு விரோதமாகவும், விதிமுறைகளை மீறியும், அரச வன்முறையை ஏவிவிட்டும், பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியும் மக்கள் மீது சுமத்தப்பட்டதுதான் இந்த திட்டம். இந்தப் போராட்டதிற்கு மட்டுமல்ல எந்த போராட்டத்திற்கும் மக்களின் விழிப்புணர்வு மிக முக்கியம். கிழக்கிந்திய கம்பனி எப்போதே வந்துவிட்டதே, அப்போது ஏன் போராடவில்லை, இப்போது போய் வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்துவது சரியா என்று யாரவது கேட்பார்களா? கேட்டால்தான் அது சரியாகுமா அல்லது அறிவுடைமை ஆகுமா ? அணுசக்தி ஆணையத்தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூட போராட்டத்தின் நிஜமான காரணமாக இருக்கும் நியாயமான அச்சத்தை அல்லது போரட்டத்தின் நேர்மையை சந்தேகப்படவில்லை (18 -10 -2011 -தினமணி).

இப்போது அச்சம் குறித்து அத்தனை பேரும் மேதைகள் போல வியாக்கியானங்கள் செய்து வருவது வியப்பை தருகிறது. கல்பாக்கத்தினால் எந்த பாதிப்பும் இல்லை என்பது தவறு. அப்பகுதியில் இருக்கும் பாதிப்புகளை மருத்துவர் புகழேந்தி ஆதாரத்துடன் தெளிவாக விளக்கியுள்ளார். சென்ற மாத இந்தியா டுடே இதழ் இது குறித்து விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. அங்கே போராடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தும் நீதிமன்றம் போய் அனுமதி பெற்று போராட்டங்கள் துவங்க போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. உண்மை நிலையை மூடி மறைப்பதற்கு அணுசக்தித் துறை முழு முயற்சியும் செய்து வருகிறது. முறைகேடான வழிகளிலும், சதி வேலைகளிலும் ஈடுபட்டு மக்களை ஏமாற்றியும் வருகிறது என்பதுதான் உண்மை. வெறும் 450 மெகாவாட் தயாரிக்கும் கல்பாக்கத்திலேயே இந்த அளவிற்கு பாதிப்பு என்றால் இப்போதைக்கு 2000 மெகா வாட் தொடர்ந்து பல உலைகள் என்று திட்டமிடப்படும் கூடங்குளம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சுடுகாடாக்கும் சக்தி கொண்டதாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.

விமான, ரயில், பேருந்து விபத்துக்கள் நடப்பதால் யாரும் பயணங்கள் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்வதில்லை என்று ஒரு தவறான ஒப்பீட்டை அணுஉலை விபத்தோடு பொருத்தியுள்ளீர்கள். வாகன விபத்துக்கள் நடந்தால் அதன் பாதிப்பு அந்த விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான். அணு உலை விபத்து என்பது அணுகுண்டு வெடிப்பிற்கு ஈடானது மட்டுமல்லாமல் தொடர்ந்து வெளிப்படும் கதிர்வீச்சால் பல ஆண்டுகளுக்கு ஆபத்துகளை விளைவிக்கக் கூடியதாக இருக்கும். பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வாழும் லட்சக்கணக்கான மக்களை மீள்குடியமர்வுக்கு வாய்ப்பே இல்லாமல் அவர்களின் பூர்வீக வாழிடங்களை விட்டு இடம்பெயரசெய்து மறு வாழ்விற்குத் தேவையான நிவாரணங்களை செய்ய வேண்டியிருக்கும். உயிருள்ள எதுவும் வாழ முடியாத நஞ்சூட்டப்பட்ட பாலை நிலமாக மாறும். இத்தகைய கடும் விளைவுகளை கொண்ட அணு உலை விபத்தினை பயண நேர விபத்துகளுடன் ஒப்பீடு செய்வது மிக மிகத்தவறான ஒரு போக்கு. அணு உலை விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தருவதிலிருந்து பன்னாட்டு முதலாளிகளே பின்வாங்குவதும், தாங்கள் எந்தவிதமான பொறுப்பையும் ஏற்க முடியாது என்று கூறுவதும், அணுஉலை கழிவுகளையும் தாங்கள் திரும்பப் பெற முடியாது என்று ஒப்பந்தங்கள் போடுவதையும் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அணு உலை வெடிப்பின் பாதிப்புகளுக்கு யாராலும் இழப்பீடு செய்ய முடியாது என்பதும் அதன் விளைவுகளை யாராலும் தடுக்க முடியாது என்பதும் பேருண்மையாகும்.

செர்நோபில் விபத்திற்குப் பின் ரஷ்யா இன்று வரை புது அணுஉலைகள் எதுவும் நிறுவவில்லை. இத்தாலியில் பொது வாக்கெடுப்பில் 95% மக்கள் அணு உலைகள் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். மூன்று மைல் தீவு அணு உலை விபத்துக்குப் பின் கட்டி முடித்து இயக்கிய சோர்ஹம் அணு உலையை எரிபொருள் மாற்றி இயற்கை எரிபொருள் கொண்டு இயக்கினர். வேறு அணு உலைகள் அமைக்கப்படவே இல்லை. 2022இல் அனைத்து அணுஉலைகளையும் மூடிவிட ஜெர்மனி முடிவு செய்துள்ளது. புகுஷிமா விபத்திற்குப் பின் 28 பழைய அணு உலைகளை ஜப்பான் மூடிவிட்டது. கட்டப்பட்டுக் கொண்டிருந்த 10 அணுஉலைகளையும் கை விட்டு விட்டது. சுவிட்சர்லாந்த், மெக்ஸிகோ போன்ற நாடுகள் இருக்கும் அணு உலைகளை மூடுவது என்றும் புதிய அணு உலைகள் வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளன‌. இந்தியாவில் மேற்கு வங்கம் அணு உலைகளே வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. ஏன் கூடங்குள‌ம் திட்டமே ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களினால் துரத்தப்பட்டு தமிழர் தலையில் வஞ்சகமாகக் கட்டபட்டதுதானே.

மின்சாரம் தேவையில்லையா?

தொடரும் மின்வெட்டால் தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறதே என்னும் கேள்விகளை முன்வைத்து அதற்காக அழிவுசக்தியான அணுமின்சாரம்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பது போராட்டத்திற்கு எதிராக தூண்டப்படும் ஓர் அரசியல் சூழ்ச்சி என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மின்தேவையை ஈடுகட்ட மத்திய தொகுப்பில் இருந்து நிறுத்தப்பட்ட 1000 மெகா வாட் மின்சாரத்தை திரும்ப வழங்க வலியுறுத்துவது, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் மின்சாரம் வீணாகாமல் தடுப்பது, மின்தேவைகளுக்காக மத்திய அரசினை வலியுறுத்துவது போன்ற வகையில் போராட்டங்கள் நடைபெற வேண்டுமே அன்றி தங்கள் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் காத்துக்கொள்ள போராடும் எளிய மக்களுக்கு எதிராக மின்வெட்டால் அவதியுறும் பொது மக்களையும், பாதிக்கப்படும் சிறுகுறு தொழில் முனைவோரையும் தூண்டிவிடுவது மிகப்பெரிய சதிவேலையாகும். மின்சாரமும் தராமல், தமிழ்நாட்டின் மின்திட்டங்களுக்கான நிதியையும் தராமல் இருந்துவிட்டு, மின்வெட்டினால் எழும் மக்களின் ஆத்திரம் தங்கள் மேல் திரும்பாமல் பார்த்துக்கொள்ளவே மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது கட்சியினையும், சாதி சமய அமைப்புகளையும் தூண்டிவிட்டு அணுஉலைக்கு ஆதரவான போராட்டங்களில் இறக்கியும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கும் விதத்தில் வன்முறைசெயல்களில் ஈடுபடுத்தி வருகிறது.

கூடங்குளம் திட்டத்தைப் பொருத்தவரை அதை யுரேனியும் எரிபொருளால் இயங்கும் தொழில்நுட்பத்தை மாற்றி அமெரிக்காவின் ஷோர்ஹாம் உதாரணத்தை பின்பற்றி இயற்கை எரிவாயுவால் இயங்கச் செய்தால் மின்சாரமும் கிடைக்கும். இதுவரை செலவிட்ட பணமும் வீணாகாது, மக்களுக்கும் பாதிப்பில்லை என்ற நிலை ஏற்படும். போராட்டங்களும் ஓய்ந்து சுமூக நிலை திரும்ப வழி ஏற்ப்படும். அதை விடுத்து அணுஉலைகள் இல்லாவிட்டால் மின்சாரமே இல்லை என்பதைப் போன்ற ஒரு மாயபிம்பத்தை உருவாக்குவது விஞ்ஞானத்திற்கு முரணானது. கழிவு மேலாண்மை, அணுஉலை ஆயுள் முடிந்த பின்னர் அதனைப் பிரித்து எடுக்க, அதன் பின்னர் அதனை பாதுகாக்க ஆகும் செலவீனங்களை சேர்க்காமல் அணுமின்சாரத்திற்கான செலவு குறைந்தது என்று கூவி கூவி விற்கப் பார்க்கிறார்கள். மேற்சொன்ன செலவுகளைச் சேர்க்கும்போது அணுமின்சாரம் பலமடங்கு கூடுதல் செலவு பிடிக்கக்கூடியது என்பது புரியும்.

 நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 97% சதத்திற்கு மேல் அணுமின்நிலையங்கள் இன்றி நம்மால் இயங்க முடியுமெனில் 3% குறைவான மின்னுற்பத்திக்கு இத்தகைய பாதிப்பு உள்ள அணு உலைத் திட்டங்களை சுமப்பது அவசியமா? அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால் ஒன்று மட்டும் மிகத் தெளிவாகப் புரியும். அணு உலைகளைத் திணிப்பவர்கள் அந்நிய நாட்டு முதலாளிகளின் லாப வேட்கைக்கு நமது வளங்கள் கொள்ளை போக அயராது உழைக்கும் உள்ளூர் தரகு முதலாளிகள் ஆவர். இவர்கள்தான் இன்று காங்கிரஸ், பா.ஜா.க என்று மத்தியில் ஆளும் எந்தக் கட்சியாக இருந்தாலும் நாட்டை கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரர்கள். இவர்களுடன் கூட்டாளியாகவும் உள்ளூர் இடைத்தரகர்களாகவும் இருப்பது மாநில அரசுகள், கட்சிகள் ஆவர். இவர்களுக்கு உதவி செய்து காலைப் பிடித்து எலும்புத் துண்டுகளை பொறுக்கிக் கொள்பவர்கள்தான் மதவாத, சாதிய குழுக்கள்..

இடிந்தகரை-கூடங்குளம் எழுச்சி

இவர்கள் அத்தனை பேரின் தொடர் தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்து முன்னோக்கி செல்கிறது இடிந்தகரை-கூடங்குளம் எழுச்சி. இவர்களுக்கு ஆதரவாக புரட்சிகர மக்கள் சார் இடதுசாரி அமைப்புகள், தமிழ்த்தேசிய அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆர்வலர்கள், உண்மையை சீர்தூக்கி பார்க்கும் சமய-சமுக அமைப்புகள், அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக போராடும் மக்களுக்கும், இயக்கங்களுக்கும் ஆதரவு காட்டும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்த இந்த போராட்டமானது இன்றைக்கு ஒரு புதிய வரலாற்றினை எழுதிக் கொண்டிருக்கிறது. இத்தகைய வரலாற்றினை படைக்கும் மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு நாமும் தோழமை சக்தியாக மாறுவதுதான் காலம் நமக்கு இடும் கட்டளை......

- அன்ரனி க்ளாரெட்

Comments

48 comments

48
Paul Alexander
Dear Indindakari people,
We are in full support of you. We salute your courage and fight.
நரேந்திரன்
@துரை இளமுருகு: சான்றுகள் கொடுக்க முடியுமா?
Maria Joseph K.
உண்மையை உரக்கச்சொல்லி, சரியான வாதைங்களை ஆதாரத்தோடு சுட்டிக்காட்டி, பொய்களை புரம்தள்ளி, வாழ்வு போராட்ட தோழமைக்கு குரல் கொடுத்துள்ள உங்கள் குரல் ஒலிக்கட்டும் தொடர்ந்து. வாழ்க கூடங்குளம் மக்கள் போராட்டம். Life and its safety is more important than comforts and luxuries. To put anything before person is a poor excuse! I wish the success of the struggle for basic human living conditions! We will win!!
durai ilamurugu
"செர்நோபில் விபத்திற்குப் பின் ரஷ்யா இன்று வரை புது அணூலைகள் எதுவும் நிறுவவில்லை. இத்தாலியில் பொது வாக்கெடுப்பில் 95% மக்கள் அணு உலைகள் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். மூன்று மைல் தீவு அணு உலை விபத்துக்குப் பின் கட்டி முடித்து இயக்கிய சோர்ஹம் அணு உலையை எரிபொருள் மாற்றி இயற்கை எரிபொருள் கொண்டு இயக்கினர். வேறு அணு உலைகள் அமைக்கப்படவே இல்லை. 2022இல் அனைத்து அணூலைகளையும் மூடிவிட ஜெர்மனி முடிவு செய்துள்ளது. புகுஷிமா விபத்திற்குப் பின் 28 பழைய அணு உலைகளை ஜப்பான் மூடிவிட்டது. கட்டப்பட்டுக் கொண்டிருந்த 10 அணூலைகளையும் கை விட்டு விட்டது. சுவிட்சர்லாந்த், மெக்ஸிகோ போன்ற நாடுகள் இருக்கும் அணு உலைகளை மூடுவது என்றும் புதிய அணு உலைகள் வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளன‌. இந்தியாவில் மேற்கு வங்கம் அணு உலைகளே வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. ஏன் கூடங்குள‌ம் திட்டமே ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களினால் துரத்தப்பட்டு தமிழர் தலையில் வஞ்சகமாகக் கட்டபட்டதுதானே."
ஒரு கட்டுரையில் இவ்வளவு பொய்கள் எழுதமுடியும் என்று காட்டிய அன்ரனிக்கு நன்றிஅமெரிக்கா 20 அணுஆலைகள்கட்டதிட்டமிட்டுள்ளது
ருச்சியா 9அணுஆலைகள்கட்டிக்கொண்டு இருக்கிறது
பிரான்சு 2
இங்கிலாந்து 4
சப்பான் 54 அணுஆலைகள் உள்ளன. அதில் 43 அலைகள் சுனாமி மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. ஆனால் மற்ற 11அணுஆலைகள்தொடர்ந்து செயல் பட்டு வருகின்றன பாதிக்கப்பட்டாணுஆலைகள் செப்பனிடப,ட்டு வருகின்றன
ஒரு ஆலை கூட நிரந்தரமாகமுடப்படவில்லை
1. சீனம்- 13 ஆலைகள்
2. பாகிஸ்தாந் 4 ஆலைகள்
3. இந்தோனேசியா- 4 ஆலைகள்
4. பர்மா, மலேசியா போன்ற நாடுகளும் இவற்றை அமைத்து வருகின்றன.
Thirumugam, Malaysia
"மலேசியா போன்ற நாடுகளும் இவற்றை அமைத்து வருகின்றன" @துரை இளமுருகு .. .. தரும் தவறான தகவல். மிகக் கடுமையான எதிர்ப்பை சந்தித்த அரசாங்கத்தின் அணு உலை அமைப்பதற்கான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. நவீன மலேசியாவின் தந்தை எனக் கருதப்படும் டாக்டர் மகாதிர் முகம்மது அணு உலைத்திட்டத்தை கைவிடுமாறு கூறும் ஒரு கருத்தை கொண்டுள்ளதால் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் சாத்தியம் அனேகமாக இல்லை! (இந்தியாவில் புகழ் பெற்ற? போலி சாமியார்கள் போல புகழ் பெற்ற போலி விஞ்ஞானிகளும் பெருகி விட்டனர்! நல்ல வேளையாக போலி சாமியார்களிடம் போல போலி விஞ்ஞானிகளிடம் மக்கள் ஏமாறவில்லை!)
Ram Kameswaran
The risks of nuclear energy are small compared with the alternatives of oil wars, climate change, or unaffordable energy.
durai ilamurugu
இந்து நாளிதழ் 19/ 11/2011இல் வெளிவந்த மத்திய அரசு கமிட்டியின் அறிக்கையைக் காண்க.. அன்ரனி வேறு சான்றுகள் ஏதும் வைத்துள்ளாரா?
Ram Kameswaran
//சோர்ஹம் அணு உலையை எரிபொருள் மாற்றி இயற்கை எரிபொருள் கொண்டு இயக்கினர்.//

துரை இளமுருகு,

இது தவறான செய்தி. ஷோர்ஹாம் அணு மின் நிலையம் 1984 ல் கட்டி முடிக்கப்பட்டு, 5% பரிசோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பின் 1989 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. கைவிடப்பட்டதற்கு காரணம், அவசர காலத்தில் மக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் (எவாகுவேஷன் பிளான்) மீதான அச்சமே காரணம். இந்த அணு உலை அமைந்துள்ள இடம் நியூயார்க் நகரின் வெகு அருகில் உள்ள லாங் ஐலண்ட் ஆகும்.

இந்த திட்டத்தை கைவிட்டதினால் லாங் ஐலண்ட் மக்களின் தலை மீது ஏற்றப்பட்டுள்ள கடன் சுமை 6 பில்லியன் டாலர்கள். நீங்கள் சொல்லுவது போல எரி பொருளை மாற்றி இந்த மின் நிலையத்தை இயக்கவில்லை. ஒட்டு மொத்தமாக காயலான் கடையில் போட்டு பேரீச்சம்பழம் வாங்கியதுதான் நடந்தது. இல்லையென்று சொல்லாமல் ஸ்விச்கியர் மட்டும் அணு மின் நிலையத்திலிருந்து எடுத்து பிறகு அமைத்த 100மெகாவாட் காஸ் டர்பைனுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.

கூடங்குளம் டர்பைன் 1000 மெகாவாட் திறன் கொண்டது. இது ஸாச்சுரேடட் ஸ்டீம் எனப்படும் ஈரம் கலந்த நீராவியினால் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை இயக்கக் கூடிய அளவுக்கு நீராவியை நிலக்கரியை கொண்டோ எரிவாயுவைக் கொண்டோ உற்பத்தி செய்யும் கொதிகலன்கள் (பாய்லர்கள்) இதுவரை உலகில் எங்கும் தயாரிக்கப் படவில்லை.

என்வே ஒன்று கூடங்குளத்தை மொத்தமாக காயலான்கடையில் போட்டு பேரீச்சம்பழம் வாங்கி இடிந்தகரையில் உண்ணாவிரதமிருக்கும் உதயகுமார் ஆதரவாளர்களுக்கு வினியோகிக்கலாம், இல்லை என்றால் மக்களின் வரிப்பணம் 14,000 கோடி முதலீட்டில் மின் உற்பத்தி செய்து எல்லோரும் பயனடையலாம். பேரீச்சம் பழமா, மின்சாரமா மக்களே முடிவு செய்யுங்கள்?
durai ilamurugu
ராம் காமெஸ்வரன் கவனிக்கவும் சொர்ஹம் பற்றிய செய்திகளை சொல்லியது நான் அன்று. அன்ரணி என்பவர் எழுதிய கட்டுரையிலிது (மேலே காண்க) வருகிறது திருமுகம் அவர்கள் மலேசியாவில் இத்திட்டம் கைவிடப்படவில்லை ஆலோசனனையில் இருந்து வருகிறது என்று ஒத்துக் கொன்டமைக்கு நன்றி ஏன் யாரும் சப்பான் பற்றி எழுதவில்லை என்று தெரியவில்லை
tamizhkumaran
துரை இளமுருகு அவர்களின் அவசரம் எதற்கு என்று தெரியவில்லை .ஜப்பானை பற்றி யாரும் பேசவில்லை என்றும் கவலைபடுகிறார்.அன்ரனியின் பொய்யினை பற்றி பேசும் போது உங்களது பொய்யினை பற்றியும் பேசுவது நலம். ///புகுஷிமா விபத்திற்குப் பின் 28 பழைய அணு உலைகளை ஜப்பான் மூடிவிட்டது. கட்டப்பட்டுக் கொண்டிருந்த 10 அணுஉலைகளையும் கை விட்டு விட்டது. /// அனைத்து அணு உலைகளையும் மூடிவிட்டது என்று அவர் கூறவில்லை ..ஜப்பானில் மொத்தம் உள்ள 54 அணு உலைகளில் 49 மூடப்பட்டுள்ளதாக ஜப்பானின் அதிகாரபூர்வ செய்தி தெரிவிக்கிறது(ஜனவரி 2012 ) கடந்த 2011 அக்டோபர் -இல் 11 இயங்கி வந்தது அது இப்போது 6 ஆக குறைந்திருக்கிறது. நிரந்தரமாக மூட படவில்லை என்பது ஹிந்து பத்திரிக்கையின் ,உங்களின் கருத்து.அது ஜப்பானின் உண்மை நிலவரமல்ல . ஜப்பானில் மக்களிடையே அணு உலைகளுக்கு அங்கு கடும் எதிர்ப்பும் போராட்டங்களும் நடந்து வருகின்றன .மேலும் அமெரிக்கா வலுகட்டாயமாக அணு உலை தேவை என்று அதற்க்கு அனுமதி கொடுக்கிறதே தவிர மூன்று மைல் தீவு விபத்திற்கு பிறகு எந்த அணு உலையும் இதுவரை அமைக்கப்படவில்லை.இப்போதுதான் அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன.வாங்கிய அனுமதியை பல நிறுவனங்கள் திருப்பி கொடுத்து வருகின்றன அங்கேயும் பொது மக்களிடம் கடும் எதிர்ப்பு உள்ளது. ரஷ்ய பொறுத்த மட்டில் நீங்கள் கூறியது சரி . உங்களது மற்ற அனைத்து தகவல்களும் பொய்யானவையே .சீனா ,பாகிஸ்தான் போன்ற நாடுகளை குறிப்பிட நீங்கள் இந்தியாவையும் நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.ஏனென்றால் அமெரிக்கா நலனையும் ருச்சிய நலனையும் போற்றுவதொடு தங்களது அணுகுண்டு ஆசையையும் நிறைவேற்றுவதற்காக மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை என்று இந்த நாடுகள் இருக்கின்றது . மூன்றாம் உலக நாடுகளை பற்றி கேட்கவே வேண்டாம் .அவர்களின் தலையில் இவற்றை கட்டவே அமெரிக்கா ,ரஷ்ய,பிரான்ஸ் போன்ற நாடுகள் இப்படி நாடகமாடி வருகின்றன .உங்களை போன்ற ஹிந்துவை மட்டும் படித்து விட்டு அது மட்டுமே உண்மை என்று நம்புபவர்களை என்ன செய்வது . தேசத்தின் நல்வாழ்வையும் ,அமைதியையும் பற்றி அக்கறை கொள்ளாத அந்நிய நாடுகளுக்கு விசுவாசமாக இருப்பவர்களே அணு உலை வேண்டும் என்று கொடி பிடிக்கின்றனர்.ஆனால் இந்த அணு உலை எதிர்ப்பு போராட்டம் உங்களது குழந்தைகளின் நலனுக்காகவும் சேர்த்தே போராடப்படுகிறது . அணு உலைகள் செயல்படுவதில் விபரங்களை விமர்சித்த நீங்கள் கட்டுரையின் மற்ற பகுதிகளை பற்றி கொஞ்சமும் வாய் திறக்க வில்லையே ?
மனோகரன்
ஏகாதிபத்திய நாடுகள் மக்கள் மேல் அக்கறை கொள்ளாது என்பதற்கு மக்கள் எதிர்ப்பையும் மீறி அணு உலை அமைப்பதே சான்று. ருசியாவில் மண்ணின் மைந்தர்கள் அங்கு நடந்து வரும் உரேனிய சுரங்க தொழிற்சாலைகளை மூட கோரி பல வருடங்களாக போராடி வருகின்றனர். எதிர்ப்பையும் மீறிதான் அங்கு உரேனியம் எடுக்கபடுகிறது. இதனால் மக்கள் அங்கு நுரையீரல் புற்று நோயால் பாதிக்கபட்டு வருகின்றனர்.
ஆகவே அணு உலை மற்ற நாடுகளில் இருந்தால் அது மக்கள் ஆதரவோடுதான் அமைக்கபடுகிறது என்று கருத இயலாது.
ஏழுமலை
ஈரம் கலந்த ஸாச்சுரேடட் ஸ்டீம்???:
நீராவி எனபது பொதுவாக அனல் மின் நிலையங்களில் ௪௫௦ இல் இருந்து ௬௦௦ சென்டிக்ரடே வெப்பத்தில் மிக அதிகமான அழுத்தத்தில் உற்பத்தி செய்யபடுகிறது. இதில் ஈரம் கலந்துள்ளது என்ற கருத்து விநோதமாக உள்ளது . எனக்கு தெரிந்தவரை பத்திரிகைகளில் சொல்லபட்டவரை வெப்பத்தை உற்பத்தி செய்யும் முறையல் அணு மின் உலைகள் அனல் மின் நிலையங்களில் இருந்து மாற்படுகிறது. மற்றபடி நீராவியின் தன்மையிலோ அழுத்ததிலோ உள்ள வேறுபாடுகள் மெகாவாட் அமைவு திறனை பொருத்தும் டர்பைனின் லோ பிரஷர்/ஹை பிரஷர் வடிவமைப்பை பொருத்தும் அமைகின்றன. இதனால் ௧௦௦௦ மேகவத்ட் உற்பத்தி செய்யும் டர்பைனை அனல் மின் நிலையத்திலும் அணு மின் நிலையத்திலும் பயன்படுத்தலாம் என்பது அறிவியல் உண்மை.இந்த நிலைப்பாடு நீராவி உற்பத்தி செய்யும் கொதிகலனுக்கு பொருந்தக்கூடியது. இங்கு ராம் காமீஸ்வரனின் கருத்து முற்றிலும் விநோதமாக உள்ளது.மேலும் அறிவியல் தலத்தில் பாமரர்களாகிய எங்களுக்கு சில ஐயங்கள்.
Residual heat in nuclear reactor of 1000MW @ 6% approximately amounts to 90MW heat equivalent. Though this is instantenous and decaying the heat quantum is enormal. The hydrogen recombiners and passive coolers is set to be the solution for averting explosion in the reactor in case of non availability of captive power generatorsfor cooling the reactor (8MW) in the circumstances of earth quake/tsunami. The scientist in general, Mr. MR Srinivasan (politician scientist) is refusing to answer reagrding the time scale within which the cooling will be effective. If any one know abou this please throw some light on this due to wipe out the ignorance of people like me and tens of scientist who are opposing the nuclear plant.

"No nuclear reactor manufactured in earth so far is a safe one" -- A nuclear scientist of European Origin..

214.ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்;
செத்தாருள் வைக்கப் படும்.

428. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
தஞ்ச லறிவார் தொழில்.

435. வருமுன்னர் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.
kumanan
அணு உலை செயல்பட்டுக் கொன்டிருக்கிற நாடுகளில் அதற்கு எதிராக மக்கள் போராடவில்லை என உங்களால் நிருபிக்க முடியுமா? மக்களின் வளர்ச்சிக்காக, பயன்பாட்டிற்காக தான் எதுவுமே இருக்க வேண்டுமே தவிர, ஒரு சில பெரும் முதலாலிகளின் பணப்பெருக்கத்திற்காக அல்ல. நீங்கள் " இந்து " பத்திரிக்கை மட்டும் தான் படிப்பிங்களா? மற்ற செய்திகளை பார்க்க மாட்டிங்களா? சோமாலியா நாட்டில் அமெரிக்காவா அல்லது பிரான்சா என்று நினைவில்லை, ஏதோ ஒரு நாடு அணு கழிவுகளை புதைத்துள்ளதை காட்டி செய்திகள் வந்துள்ளது. தனது நாட்டில் இயங்கிய அணு உலையின் கழிவுகளை வேறொரு நாட்டில் புதைத்த போதே தெரிய வில்லையா? அந்த நாட்டில் அணு உலைகளுக்கு மக்களிடம் எதிர்ப்புள்ளது என்று. பிரான்சு நாட்டில் அணு உலைக்கழிவுகளை தொடர்வண்டியில் எடுத்து செல்வதைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் தண்டவாளங்களை இறுக கட்டிக்கொண்டு போராடியதைக் கேள்விப்பட வில்லையா? பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் படிக்கும் " இந்து " பத்திரிக்கை இந்த தகவல்களை எல்லாம் தராதே.
Ram Kameswaran
அணு மின் நிலையத்திற்காக வடிவமைக்கப்பட்ட டர்பைனை அணல் மின் நிலைத்தில் பயன் படுத்த முடியாது என்று எஞ்சினியரிங் படித்து விட்டு 30 ஆண்டுகளாக பல்வேறு மின் நிலையங்களிலும் பணிபுரிந்தவன் என்ற முறையில் அடித்துச் சொல்கிறேன். ஆனால் நாங்கள் பாதிரியார் அந்தோனி கிளாரட் சொல்வதைத் தான் நம்புவோம் என்று அடம் பிடிக்கும் போது, உங்கள் தலைவிதி அவ்வளவு தான் என்று நொந்து கொள்வதைத் தவிர வேறு என்னத்த சொல்ல?
durai ilamurugu
திரு நரெந்திரன் அவர்கட்கு ,இந்து பத்திரிக்கயில் வந்துள்ள செய்தி அல்ல அது நடுவணரசுவல்லுனர் குழு அமைத்துள்ள குழுவின் அறிக்கை ,எந்த இண்யதளத்திலும் அதைக் காணலாம் அதை நீங்கள் நம்பாவிட்டால், உத்யகுமாரைத்தான் நம்புவேன் என்றால் அது உங்கள் விருப்பம் எமது நோக்கு வேனாடாமென்று சொல்ல உரிமை இருப்பது போலவே வேன்டும் என்று சொல்லுவத்ற்கும் உரிமை உண்டு என்பதே மேலும் அது மத அடிப்படைவாதத்தில் இணைந்துள்ளது இப்பொழுது அணு உலைஅடுத்தது கருக்க்கலைப்பு ,பிறகு குடும்பக்கட்டுப்பாடு கூடாது பிறகு பெண்ணடிமைத்தனம் பிறகு தடுப்பூசி போடகூடாது இப்படி வளர்ந்து கொண்டே போகும் போலியோவிற்கும் தட்டம்மைக்கும் ஏன் எந்த நோய்க்கும்தடுப்பூசிபோடக் கூடாது என்று வாதிடும் இயற்கை வாதக் குழுக்க்கள் ,மத வாதக் குழுக்களும் உண்டு அதில் சில ஆங்கிலமருத்துவர்களும் உண்டு தடுப்பூசியில் ஏற்படும் லடசத்திற்கு ஒரு பக்கவிளைவை ஊதிப்பெருக்கி அதை பயன்படுத்தக் கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு. இதற்கும் இந்து பத்திரிக்கைக்குமென்னதொடர்பு? இந்து பத்திரிக்கையைப்படிப்பது என்பது வேறு அதன் கருத்துகளை ஒத்துக் கொள்வது வேறு இதைக் கூடப்புரியாதவர்களை என்ன சொல்ல? உங்கள் கருத்தை மட்டுமே எதிரொலிக்கும் செய்திகளைத்தரும் பத்திரிக்கைகளை மட்டும் படித்து சுய இன்பம் காண்போர் வாழ்க!
சப்பன் பற்றிய செய்தியை நண்பர்தமிழ்குமரன் எங்கிருந்து எடுத்தார் என்று சொல்ல முடியுமா? அமெரிக்கவிலும் கருத்தடையை எதிர்ப்பவர்களும் உலகம் உருண்டை அல்ல தட்டையானது என்பவர்க்ளும் உண்டு ப்ல நாடுகளில் மக்கள்பலவிதமாகப்,போராடுகிறார்கள் ஈரான் அணு உலை அமைத்து வருகிறது அதனால் அது வல்லாதிக்கத்திண் அடிமை ஆகிவிடுமா?
அணு உலையைப்,பற்றிய செய்திகளை ஏற்கனவே திரு முத்துக் குட்டியவர்கள் கட்டுரையில் பின்னொட்டமாக எழுதிவிட்டேன் உண்மையில் அதை கீற்றுவிற்கு கட்டுரையாகனுப்பினேன் வெளிவரவில்லை என்வேபின்னுட்டமாக எழுதினேன் கருணையுடன் வெளியிட்ட்னர் மீண்டு ம் ஒரு முறை தருகிறேன் முடிந்தால் முத்துக் குட்டியவர்கள் கட்டுரையையுமதன் பின்னூட்டங்களயும் படிக்கவும்
durai ilamurugu
ழுமலை அவர்களே! முற்றிலும்100% பாதுகாப்பானது என்று ஒன்று இயற்கையில் இருக்கமுடியாது என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை ஒரு சுனாமியின் சேத்தத்தை ஒரு அணுகுண்டு கூடஏற்படுத்தமுடியாதே? வள்ளூவர்தான் 1000ஆண்டுகளுக்கு முற்பட்டவர் நீங்களும் அப்படியா? உங்க்கள் விட்டை வள்ளுவர் குடில் போல்தான் அமைத்து உள்ளீர்களா? மின்சாதனம் எதையும் பயன்படுததுவது இல்லையா?
எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு இதுவும் திருக்குறள் தான் உலகத்தோடு ஒட்டாமல் வழ்பாவர்கள் யார் என்பதுதான் புரியவில்லைமர்ரபடி எல்லொரும் இறக்கப் போகிறவர்களெ
நீங்கள் வருகிற தலை முறைக்கு நன்மை செய்யவில்லை மாபெரும் தீமை செய்கிறிர்கள் அறிவியலைப்பற்றிய அச்சத்தை ஊட்டுகிறிர்கள் அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டே!!
முடிந்தால் மாற்றுக்கருத்து அசிரியர்குழுவின் கட்டுரை வந்து உள்ளது அதைப்படிக்கவும்
tamizhkumaran
துரை இளமுருகு பாதிரியார்களோ ,மத அமைப்பினரோ போராடக்கூடாது என்று சட்டம் போட்டிருகிரீர்களா? இந்து பத்திரிகையின் செய்திக்கும்,அதனை ஒத்து கொள்வதிற்கும் வித்தியாசம் உண்டு என்று கூறும் நீங்கள் மனிதர்கள் மத காரியங்களில் ஈடுபடுவதற்கும் ,மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுவதற்கும் உள்ள வித்தியாசம் பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பது ஏன் ? அணு உலை தொடர்பாக விவாதித்து கொண்டிருக்கும் போது குடும்ப கட்டுப்பாடு,கருக்கலைப்பு என்று தேவை இல்லாமல் பேசி திசை திருப்ப முயற்சி செய்கிறீர்கள் .கிறிஸ்தவத்தின் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பு நன்றாக தெரிகிறது.மக்களுடைய பிரச்சனைகளை கையில் எடுத்து இந்த மத அமைப்புகள் போராடும் அளவிற்கு கூட உங்களை போன்ற புரட்சியாளர்கள் செய்வதில்லை .ஈரான் அணு உலை அமைத்தால் அது ஒன்றும் நியாயம் ஆகிவிடாது .ஆனால் அமெரிக்க ,ரஷ்ய போன்ற நாடுகளின் அணு ஆயுத அச்சுறுத்தல் காரணமாகவே அவர்கள் அணு உலையை நாடுகின்றனர்.100 சதம் பாதுகாப்பானது என்று எதுவும் இல்லை ஆனால் அணு உலைகள் 100 சதம் ஆபத்தானது என்று அனைவருக்கும் தெரியும்.ஆனால் உங்களை போன்றவர்களின் அணு ஆயுத ஆசைதான் ஆச்சரியமாக இருக்கிறது .அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும் என்றும் வள்ளுவர் சொல்லி இருக்கிறார் .மாற்று கருத்து ஆசாமிகள் ஜைதாபூரில் அணு உலை வேண்டாம் என்பார்கள் ,அங்கே மக்கள் அச்சப்படுகிறார்கள் என்பார்கள் .இங்கே அணு உலை வேண்டும் என்பார்கள் ,மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பார்கள் .அவர்கள் கட்டுரையை போய் படிக்க சொல்கிறீர்களே ?உங்களுடைய பின்னூட்டங்கள்,உங்களுடைய எழுத்துகளை அடுத்தவர்கள் படிக்க வேண்டும் என்பதில் ரொம்ப ஆர்வமமாக இருக்கிறீர்கள் .கடந்த ஆறு மாதமாக பல கட்டுரைகள் வந்திருக்கின்றன அவற்றை படித்து பாருங்கள்.நீங்கள் கண்ணை கட்டி கொண்டால் உலகம் இருண்டு விடாது. .பாருங்கள் .நிறைய தகவல்கள் உண்டு . அரை குறை அறிவு அறியாமையை விட ஆபத்தானது .இங்கே யாரும் ஒன்றும் தெரியாமல் வந்து பேசவில்லை.இந்திய அணு சக்தி துறை விஞ்ஞானிகள் அணு உலை எதிர்ப்பு விஞ்ஞானிகளுடன் நேர்காணலுக்கு வர அஞ்சுகிறார்கள்,வர மறுகின்றனர்.பதிவு நிகழ்ச்சியாக இருந்தால் வருகிறார்களாம் .பின்னர் வேண்டியதை வெட்டி விட்டு ,தேவையானதை சேர்த்து கொள்ளலாம் அல்லவா? மக்களுக்கு துரோகம் செய்யும் அயல் நாடு முதலாளிகளுக்கு விசுவாசமாக இருக்கும் இவர்களை நீங்கள் நம்புவதுதான் உங்களது அறிவின் உச்சம்
durai ilamurugu
தமிழ்க்குமரன் அவர்கள் என்னுடையய கிறித்துவ வெறுபை வெளிக் கொணர்ந்தமைக்கு நன்றி அவர்கள் மிகவும் புரட்சிக்கரர்கள் என்பதையும் நான் தங்கள் மூலம் அறிந்து கொண்டேன் அந்தபுரட்சியைஅமெரிக்கவில் செய்யக்கூடாது என்றுக்கேட்க மாட்டேன் அப்புறம் என்னுடைய பின்னுங்க்கள் படிக்கப்படவேண்டும் என்று விரும்புவது இயற்கையே என்னுடைய கருத்துகள் சரியானதுஎன்ற ந்ம்பிக்கையில் தான் எழுதுகிறேன் அதைவிடுத்து கிறித்துவ எதிர்ப்பு என்றெல்லாம் மடை மாற்றதீர்கள் மதவாதிகளும் பிற்போக்குத்தனங்களும் சாதியும் எல்லா மதங்களிலும் உண்டு இதை விரித்தால் பெருகும் அது செல்க
100 விழுக்காடு ஆபத்தான அணு உலைகள் உலகில் மொத்தம் 443 இருக்கின்றன என்பதை அறிவீர்களோ ? அவை யாவும் இய்ங்கிக் கொண்டுதான் இருக்கின்றன அமெரிக்கா 3 புதிய அணு உலைகளை ஜியார்ஜியாமாகணத்தில்தனியார் துறையில் அமைக்க உள்ளது ஒரு வேளை அவர்களுக்குதெரியாது போலும்! இந்த செய்தியை சொல்லவும் அதை எதிர்க்கவும் அங்கு ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது அனால் பாதிரிகள் யாரும் இல்லை
ஜைதாபூரிலனு உலையை யாரும் அச்சத்தின் காரணமாக எதிர்க்கவில்லை மாற்றாக வேலை வாய்ப்பும் நிலமும் இழப்பீடும் வழங்க் வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள் அணுஅயுத ஆசைக்கும் அணு உலையின் மூலம் மின் உற்பத்தி செய்வதற்குமென்ன நேரடித் தொடர்பு?தாராப்பூர் என்ன அழிந்து விட்டதா?சப்பான் எத்தனைஅணு குண்டுகள் வைத்திருகின்றன?அணு ஆயுத்ங்களை எதிர்க்கிறோம் ஆனால் அணுவையே தொடக்கூடாது என்ற நவீன தீண்டாமையை ஏற்பதற்கில்லை நீங்கள் எல்லாம் தெரிந்தவ்ராக இருக்கலாம் அத்ற்கென்ரு மற்ற்வர்களை ஒன்றும் தெரியாதவர்களென்பது சரியன்று
மற்றும் ஒரு செய்தி சனவரி 2012ல் எல்லா அணுலைகளும் சப்பானில் மூடப்பட்ட்ன என்பது சரிதான் அனால் அவை ஒரே அடியாக மூடப்பட்டுவிடவில்லை. பழுதுப்,பார்பதற்காக தற்காலிகமாகமூடப்பட்டவை பிப்ரவரி 14 2012 தகவல் படி சுனாமியழித்த புகுஜிமா அணுலை சீர்படுத்தப்,பட்டு அதைத்திறப்பதற்கு உலக அணு சக்தி கழகத்திடம் அனுமதி கேட்டுள்ளது சப்பன் அரசு! அங்கு செய்ய்ப்பட்ட பலகருத்துக்கணிப்பு களில்50% அணு உலை வேண்டும் எங்கின்றனர் 40% அணு உலைக்கு மாற்றக வேறு வழியில் மின்சாரம் தயாரிக்கும் வரை வைத்துக் கொள்ளாலாம் எங்கின்றனர் 10 ௧5% அணு உலையே 100%ஆபத்தானது என்று (உங்க்ளைப்,போல் ) முடிவு செய்துள்ளனர்
சரி அதை விடுங்கள் கூடங்குளத்தைப்,பற்றிய ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிறகு பதிரியார்களும் உதய்குமார்களும் உங்க்ளைப் போன்றவர்களும் ஆயததமாய் உள்ளீர்களா?
tamizhkumaran
ஜைடாபூரில் மக்கள் அச்சப்படுகிறார்கள் என்று பிரகாஷ் கராத் கூறுகிறார் நீங்கள் இல்லை என்கிறீர்கள்.செய்திகளை படித்துவிட்டு உங்களுக்கு வேண்டியது போல எழுதுகிறீர்கள் .அணு உலையை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போராடலாம் .இவர்கள்தான் போராட வேண்டும் இங்கேதான் போராட வேண்டும் ,இங்கே போராடுபவர்கள் அங்கே ஏன் போராடவில்லை.உங்கள் மனம் போனபடி அடுக்கி கொண்டே போகிறீர்கள் .போராடுபவர்களை பார்த்து கூட்டம் என்கிறீர்கள்.உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது ,இல்லை என்பதற்காக எழுத வராதீர்கள்,உங்களது நம்பிக்கையை பற்றி யாருக்கும் அக்கறை இல்லை .உண்மை இருந்தால் எழுதுங்கள். நவீன தீண்டாமை குறித்து உங்களது கருத்து சிரிப்பைத்தான் வரவழைக்கிறது . தாராப்பூரில் என்னவாயிற்று ,கல்பாக்கத்தில் என்னவாயிற்று என்று என்னிடம் கேட்டு கொண்டிராமல் நேரில் சென்று அங்கு ஏற்ப்படும் பாதிப்பை தெரிந்து கொள்ளவும் . கல்பாக்கத்தில் ஏற்ப்பட்டிருக்கும் பாதிப்பின் முழு விபரத்தையும் கடந்த இந்தியா டுடே இதழில் விரிவாக வெளியிட்டுள்ளனர் .வீட்டில் உட்கார்ந்து கொண்டு எல்லாம் தெரிந்தது போல் எல்லா நியாயத்தையும் பேச முற்படுவது முற்றிலும் தவறானது. ஜைதாபூர் பற்றியும்,ஜப்பான் பற்றியும் உங்கள் தகவல் தவறானது.தவறானது என்று தெரிந்து கொண்டே அதனை சரி என்றும் வாதாடுகிறீர்கள்.அவை தற்காலிக நிறுத்தம் அல்ல.மூடப்பட்டிறுக்கின்றன.80 சத மக்கள் அணு உலைக்கு எதிராக இருக்கின்றனர் .அதனை விடுத்து பழைய தகவல்களை இப்போது வந்து இணைக்கிறீர்கள்.ஜைடாபூரிலும் மக்கள் அணு உலை வேண்டாம் என்றுதான் போராடுகிறார்கள்.செய்திகளை முழுமையாக படிக்க தவறுவது உங்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது.மேலும் கவனமாக புரட்சியாளர் என்று உங்களைதான் குறிப்பிட்டிருக்கிறேன் .அவர்களை அல்ல.ஏனென்றால் வீட்டுக்குள் இருந்து போராடுபவர்கள்தானே உண்மையான புரட்சியாளர்கள்.அவர்கள் அல்லவே?துவக்கத்தில் இருந்து விடயங்களை திசை திருப்புபவர் நீங்கள்தான் நான் இல்லை. அமெரிக்க அணு உலை அமைப்பதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு நிலவுகிறது ,இருந்தும் அமைப்பதின் பின்னணி உங்களுக்கு தெரியாது போலும் ? மேலும் கருத்து கணிப்புக்கு நாங்கள் தயார் ! நீங்கள் தயாரா? .கருத்துக்கள் மக்களுக்கு அறிவூட்டவும்,உண்மைகளை எடுத்து சொல்வதாக இருக்கவும் வேண்டுமே தவிர உங்கள் நம்பிக்கைகாகவும், உங்கள் எழுத்துக்களை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்ற ஆசைக்காகவும் இருந்தால் இங்கே இந்த விவாதத்தை படிப்பவர்கள் உங்கள் தரத்தை தெரிந்து கொள்வார்கள்
tamizhkumaran
நாராயணசாமி மக்கள் வாக்கெடுப்பு தேவை இல்லை என்கிறார் .இப்போது தெரிகிறதா? யாருக்கு பயம் என்று.மக்கள் வாக்கெடுப்பை பற்றி போராடுபவர்களுக்கு பயம் இல்லை.எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் எழுதும் உண்மையினை திரித்து கூறும் உங்கள் போக்கு கண்டிக்கத்தக்கது.அணு உலைகள் அமைக்கப்பட்ட இடங்களில் சென்று பாருங்கள் அதன் பாதிப்பை.உங்களுடைய அனைத்து தகவல்களும் தவறானது .சார்பு தன்மை கொண்டது.
durai ilamurugu
தவறானதகவல்களைத்தருவது நான் இல்லை பிரகாசு காரத் சொன்னால் ஜைடாபுர் செய்திஉண்மை யாகிவிடாது ஜைடாபுர் அணு மின் நிலயத்தில் இருந்து ஒய்வு பெற்ற அ6திகாரி சொன்ன தகவல்களைத்தான் நான் தருகிறேன் அது இந்து பத்திரிக்கையில் வந்து இருக்கிறது ஆனால் உங்களுக்கு அது பிடிக்காது தங்களிடம் இருந்துஎடுத்துக் கொண்ட நிலத்திற்கு உரிய இழப்பீஈட்டைத்தான் கேட்கிறார்கள் அதையும் அரசு தரவில்லை
சப்பான் பற்றி நான் செய்திகள் பிப் 14 2012 நீங்கள் சொன்னதுசனவரி 2012 எது பழையது எது புதியது? உண்மைகள் உங்களுக்கு மட்டுமே உரியது அல்ல !அமேரிக்காவில் அணு உலை அனுமதிக்கப்படவில்லை என்று எழுதினீர்கள் அமெரிக்க ஜியார்ஜியாவில் மூன்று அணு உலைகள் அமைக்கப்பட இருக்கின்றன என்று நான் எழுதியத்ற்கு பதில் இலை !நீங்கள் உண்மையைப்பற்றீ பேசுகிறீகள் நகைச் சுவையாக இல்லை?
சப்பானில்80% மக்கள் அணு உலைக்கு எதிரக இருக்கின்றனர் என்ற செய்திக்கு ஆதாரம் ??? கல்பாகத்தில் அருகிலுள்ள செங்கல்பட்டில் நான் பல ஆண்டுகள் வசித்துள்ளேன் ஆதலால் நான் புதிதாக அங்கு செல்ல வேண்டிடய தேவை இல்லை நீங்கள் தாராப்ப்பூர் சென்று இருந்தால் அங்கு உள்ள நிலையைப்பற்றி சொல்லலாமே? எல்லாவற்றையும் நேரில் சென்றுதான் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்போல
நாராயணசாமி வாக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்வது இருக்கட்டும் உதயகுமார் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டு சொல்லுங்கள் தமிழ் நாடு அளவில் வாக்கெடுப்பு நடத்த தயராக உள்ளரா?இல்லை இடிந்தகரை மட்டும் தான் தமிழ் நாடா?இன்றய10 மணி செய்திகளின்படி திரு உதயக் குமார் மக்கள் ஒத்துக் கொண்டால் நங்கள் தடுக்கவில்லை என்று சொல்கிறார்!!
durai ilamurugu
பிப்ரவரி 14 2012 தகவல் படி சுனாமியழித்த புகுஜிமா அணுலை சீர்படுத்தப்,பட்டு அதைத்திறப்பதற்கு உலக அணு சக்தி கழகத்திடம் அனுமதி கேட்டுள்ளது சப்பன் அரசு!இதற்கு உங்கள்பதில் என்ன?
மனோகரன்
**பிப்ரவரி 14 2012 தகவல் படி சுனாமியழித்த புகுஜிமா அணுலை சீர்படுத்தப்,பட்டு அதைத்திறப்பதற்கு உலக அணு சக்தி கழகத்திடம் அனுமதி கேட்டுள்ளது சப்பன் அரசு**

செய்தி உண்மைக்கு புறம்பாக இருக்கிறது. 22 டிசம்பர் 2012 இல் தினமணி,இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஏனைய நாளேடுகளிலும் வந்த செய்தியை இங்கு தருகிறேன்.

//புகுஷிமாவை மூட 40 ஆண்டுகளும் 12.8 பில்லியன் டொலரும் தேவை

சுனாமி அனர்த்தத்தால் சேதமடைந்த ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்தை சுத்தப்படுத்த 40 ஆண்டுகளும் சுமார் 12.8 பில்லியன் டொலர்களும் தேவைப்படும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இதில் வெளியே எடுக்கும் கதிரியக்கக் குணம் கொண்ட எரிபொருளை சுற்றுப்புறத்துக்கு ஆபத்து இல்லாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கான வழிகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலையிலிருந்து, எரி கலத்தின் அடிப்புறத்துக்குச் சென்றுவிட்ட எரிபொருளை வெளியே கொண்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யவே 10 ஆண்டுகள் பிடிக்கும். அதைச் செய்வதற்கும் இயந்திர மனிதர்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

புகுஷிமா அணு உலையால் கதிரியக்க ஆபத்து 40 அண்டுகளுக்கு பின்னரும் மறைந்துவிடாது என்றும் தெரிய வருகிறது. இதில் 12.8 பில்லியன் டொலர் எரிபொருளை வெளியே எடுக்க மட்டுமாகும். இத் தகவல்களை இந்த அணு உலைக்காகவே ஜப்பானிய அரசு நியமித்துள்ள அமைச்சர் கோஷி ஹோசனோ, டோக்கியோ நகரில் நேற்று முந்தினம் தெரிவித்தார்.
//
ஏழுமலை
டேனியல் செல்லப்பா மற்றும் ஸ்ரீனிவாசன் இருவரும் முப்பது ஆண்டுகள் மேலாக அணு மின் நிலையத்தில் பணி புரிகிறவர்கள். இவர்களின் கூற்று செய்தி தாள்களிலும் தொலைகாட்சிகளிலும் வந்துள்ளது. "அணு மின் நிலையதினுடைய செயல்பாடு அனல் மின் நிலையத்திலிருந்து ரியாக்டர் என்ற ஒரு பகுதி மட்டுமே வேறுபாடு உடையது. மற்றவை கொதிகலன், டர்பைன், ஜெனரடோர் மற்றும் துணை சாதனங்கள் அனைத்தும் பொதுவானவையே. எனவே சுற்று சூழல் பாதிப்பு என்பது அனல் மின் நிலையத்திற்கும் அணு மின் நிலையத்திற்கும் பொதுவானவையே."
இதற்கு தாங்கள் விளக்கமளிக்க வேண்டுகிறேன்.
மனோகரன்
மக்களின் வாழ்வாதார விடயங்களுக்காக நடத்தபடும் போராட்டத்தை நாராயணசாமி போன்று கொச்சைபடுதுவதும் வாக்கெடுப்புக்கு வா என்று கூப்பிடுவதும் வருத்தமளிகிறது. மக்களின் அடிப்படை கேள்விகளுக்கு விடையளிப்பதை விட்டு விட்டு வாக்கெடுப்புக்கு வா என்று கூப்பிடுவது போராட்டத்தை திசை திருப்பும் ஒரு காரணியாகவே கருத முடிகிறது.
கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி தரும் ஏரளாமான தகவல்கள் அதிர்ச்சி அடைய வைக்கின்றன. அந்த தகவல்கள் எல்லாம் முதலில் சரி பார்க்க அரசாங்கமும் அணு உலைகளை ஆதரிப்போரும் முன் வர வேண்டும்.
வெறும் 200MW மவ் எடுக்கப்படும் கல்பாக்கதிற்கே இந்த நிலைமை என்றால் 2000MW எடுக்கப்படும் கூடங்குளத்தில் என்ன நிலைமை ஏற்படும் என்று மக்கள்அச்ச்சபடுவது இயற்கை. மேலும் கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாமல் தினமலர் பாணியில் உதயகுமாரை இழுப்பது ஏன் என்று புரியவில்லை. கட்டுரை இருக்கிறது. கட்டுரையின் சாரம்சங்கள் இருக்கிறது. அதை பற்றியும் பின்னூட்டம் பற்றியும் விவாதம் செய்யலாம். அதை விட்டு விட்டு உதயகுமாரை இங்கு இழுப்பது ஏனோ தெரியவில்லை.
durai ilamurugu
உதயகுமரை இழுப்பது ஏன்? தொலைக் காட்சிக்கும் ஊடகங்களுக்கும் செவ்வி அள்ளியப்பவர் அவர்தான் அவரை இழுக்காமால்வேறு யாரை இழுக்க வேண்டும் ?
கல்பாக்கம் புகழேந்தி சொல்லும் மருத்துவ தகவ ல்களும் தவறானவைனை முறையான ஆய்வு அற்றவை முடிந்தால் ஒரு முது நிலை மருத்துவ பட்டதாரியான அவரை எந்த மருத்துவக் கழகம் அல்லது மருத்துவ இதழிலாவது அதை வெளியடச்செய்யவும் பிறகு அதைப்பற்றி, பேசலாம் தகவலகள் எல்லம் ஆய்வுகளாகிடவிட மாட்டா
22டிசம்பர்2012 இன்னும் வரவில்லை நன்பரே அதற்குள் ஏன் அவரசப் படுகிறிர்கள்? பிப் 14 செய்தி இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது நீங்களும் ஜப்பன் அன்ட் நுச்ல்லெஅர் பொநெர் என்று போட்டு தே டவும் கிடைக்கும்
paul
Koodangulam project is nothing but a dubious plan of the central Govt. (whichever party rules it, that is immaterial) to annihilate the entire Tamil race. Which Government (whether it is central or State Govt.) is going to take responsibility to protect the site of Koodangulam for nearly two lakhs of years after decommissioning it in another 40 years of its commissioning? Is it possible to safeguard the site for two lakhs of years? What will happen to the tons and tons of nuclear waste that will come out of the production unit? Can the Government at least be able to give a decent compensation to the survivors, in case of a major accident? I never thought that our scientists and political leaders could be so very insensitive and senseless.
My dear fellow Tamilians, be prepared to live in constant fear ... fear of getting perished with your kith and kin, in case of an accident... Have a look at the Koodangulam power plant site, because for about another two lakhs of years, you will never dare to look at it.. Be prepared to protect your children from the potential danger emanating from radiation ..... Be prepared to do something to safeguard (if you can) your genes so that you don't give birth to deformed decendants ... Be prepared to walk towards your own dooms day, where you being chased by the so called leaders and scientists today's India!
When we face all these crisis, the central Government will keep watching with a smile, as it did during Eelam war, during the killing of 540 Tamil Nadu fishermen, Mullai periyar dam issue, Kaveri issue, Palaru issue! If you are going to wake today, you will never!
நரேண்
விடுங்க துரை/பாஸ், ஃபுகுஷிமாவில் நில நடுக்கமும் சுணாமியும் வர வைத்ததே உதயகுமார் மற்றும் தேச விரோத சக்திகள் தான். அவங்க கிட்ட நாம அணு விஞ்ஞானம் பேசி டிமெ பண்ண வேண்டுமா?

ஹே ராம்.
tamizhkumaran
துரை இளமுருகு நண்பர் மனோகரன் 2011 என்று போடுவதற்கு பதிலாக 2012 என்று போட்டு விட்டார். கை தவறுதலாக போடுவதற்கு கூட ஒரு வியாக்கியானம்.அமெரிக்காவை பற்றி நான் சொன்னதாக நீங்கள் எழுதி இருப்பது போல் நான் மேலே உள்ள பின்னூட்டங்களில் எழுதி உள்ளேனா என்று ( அனைவரும் ) பாருங்கள்.என்ன அவசரம் என்று தெரியவில்லை துரை இளமுருகுக்கு. சரியாக கூட படிக்காமல் நீங்கள் பதில்கள் தருவதும்,கேள்விகள் எழுப்புவதும் நீங்கள் தெளிவானவர் இல்லை என்பதை உணர்த்துகிறது. ஆதாரங்கள் எப்போதும் அரசு தரப்பில் இருந்து வந்தால்தான் உண்மை என்று நம்புவேன் என்பது போலதான் இருக்கிறது உங்களது பேச்சு.அரசு மக்களிடம் என்றைக்கு உண்மை பேசியிருக்கிறது ?புகழேந்தியின் தகவல்கள் அனைத்தும் உண்மை என்று நிருபிக்கப்பட்டுள்ளது.மருத்துவ இதழில் வந்தால்தான் நம்புவேன் என்று அடம் புடிப்பது சிறு குழந்தை நடத்தை போல் உள்ளது. ஜைதாபூரில் மக்கள் அணு உலை வேண்டாம் என்றுதான் போராடுகிறார்கள்.. ஜைதாபூரில் போராடும் அமைப்பு இடிந்தகரை வந்தது உங்களுக்கு தெரியுமா? மத்திய அரசிடம் கூலி வாங்கும் அணு உலை அதிகாரி மக்கள் போராட்டத்தை பற்றி சொன்ன கருத்தை உண்மை என்று கூறும் நீங்கள் திண்ணையில் சேர் போட்டு பேப்பர் படிக்கும் ரகமோ ? இப்போது இணையம் பார்ப்பீர்கள் அப்படித்தானே! செங்கல்பட்டில் இருந்தால் பத்தாது , கல்பாக்கம் அணு மின் நிலையம் எவ்வளவு தூரத்தில் உள்ளது அதன் அமைப்புகள் ,செயல்ப்பாடுகள் எப்படி என்று கூறுங்கள் பார்க்கலாம். பாதிப்புகள் இருக்கிறதா ,இல்லையா என்று மக்களிடம் நேரில் சென்று விசாரிக்கவும் . ஒன்றும் உங்களுக்கு தொலைவு இல்லையே? புகழேந்தியின் அறிக்கையினை கையில் வைத்து கொண்டு அது உண்மைதானா என்று விசாரிக்கவும் .அதற்க்கு பிறகு வேண்டுமானால் இந்த திண்ணை கச்சேரியை வைத்துக்கொள்ளலாம்
tamizhkumaran
as durai ilamurugu wants news only from hindu.here a news from hindu newspaper

all for re-think on nuclear plants

The Hindu -

John Clammer, Professor of Sociology and Asian Studies at Sophia University, Tokyo, during the lecture "Lives in the shadow of Fukushima", at National Gallery of Modern Art on Palace road, in Bangalore on February 19, 2012. Photo: K. Murali Kumar.

In the wake of the nuclear meltdown, and subsequent radiation leak at the Fukushima nuclear power plant, the debate on nuclear power, its safety and feasibility, has been rekindled.

On Sunday, at a discussion held at the National Gallery of Modern Art, John Clammer, professor of sociology at the UN University, Tokyo, shared his experiences during and after the earthquake and tsunami that claimed around 15,000 lives and exposed many more living around the Fukushima prefecture to radiation. The lecture, titled ‘Lives in the shadow of Fukushima', painted a vivid picture of how people in the areas surrounding the plant, and Tokyo, coped with the natural disaster.

Prof. Clammer spoke about how there was little information being given out by the Government, and even the official figures released were often not supported by adequate data or attempts to create awareness, or properly inform people about the risks. “At one point, the Government claimed a certain amount of radiation was safe. But this was at least 20 times more than the radiation that was declared as safe or acceptable by the World Health Organisation,” he said.

The Government was suppressing information, in fact, lying to us constantly, he said.

“Being in Tokyo was like being in a science fiction movie,” he said. While he spoke about how for weeks Tokyo remained “deserted, empty and dark”, and continues to have around 20 per cent power shortage, he also said that there have been reports about traces of increased levels of radioactive content in mothers' milk. The events at the Fukushima Daini Nuclear Power Plant have proved that nuclear power is not safe, particularly in the face of natural disasters. Even in India, Tamil Nadu is along the coast, and there is not enough discourse on the risks associated, he said, adding that there needs to be a serious re-think on nuclear plants. He also quoted newspaper reports from the ‘Japan Times' that reported that Japan had not disclosed information on the unaccounted plutonium or uranium stored in its nuclear waste dump.
மனோகரன்
22டிசம்பர்2011.

//முடிந்தால் ஒரு முது நிலை மருத்துவ பட்டதாரியான அவரை எந்த மருத்துவக் கழகம் அல்லது மருத்துவ இதழிலாவது அதை வெளியடச்செய்யவும்முடிந்தால் ஒரு முது நிலை மருத்துவ பட்டதாரியான அவரை எந்த மருத்துவக் கழகம் அல்லது மருத்துவ இதழிலாவது அதை வெளியடச்செய்யவும்//.
ஏதாவது ஒரு மருத்துவ இதழில் வந்தால் மட்டும் எதுவும் உண்மை ஆகிவிடாது. மருத்துவர் புகழேந்தி சொன்னால் அது பொய்யாகிவிடாது. இதற்கே மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருகிறது.
மாநில அரசும் மத்திய அரசும் ஒரு மிக பெரிய வல்லுநர் குழு நியமிக்கட்டும். அந்த குழு பொது மக்கள் முன்னிலையிலோ அல்லது தொலைகாட்சியியோ கூடங்குளம் மக்கள் நியமித்த வல்லுநர் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தலாமே.
durai ilamurugu
அரசு என்றைக்கு உண்மை பேசி இருக்கிறது ? சரி உதயகுமார் பேசுவது எல்லாம் உண்மை என்பதற்கு சான்றூ?

இடிந்த்கரைக்கு பலர் வந்து இருக்கிறார்கள் அது ஜைதபூர் போராட்டத்தை பற்றிய உண்மைகளை சொல்லியது ஆகாது அரசிடம் கூலி வாங்கும் அதிகாரி என்கிறீர்கள் ?உதயகுமார் யாரிடம் ப்ணம் வாங்குகிறார்? அரசு அதிகாரி தன்னுடைய உழைப்புக்கு ஊதியம் வாங்குகிறார் உ குமாரைப்பள்ளிகூடம் நடத்தி பொருள் ஈட்டுவது இல்லை !
புகழெந்தியின் அறிக்கையைப் பற்றி எதுவும் அறியாமல் பேசுவது நான் இல்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்? பார்க்கலாம் அவருக்கு வந்த கொலை மிரட்டலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ? கொலை மிரட்டல் விட்டது யார்? தெளிவாக சொல்லுங்கள் பிறகு கச்சேரியை தொடரலாம்
சுனாமி வந்து பல மாதங்கள் நாகையும் கூட இருண்டு தான் கிடந்ததது சுனாமி வந்தால் அங்கு ஒரு அனல்மின் நிலயமிருந்தால் அதுவும் கெட்டுப்போய் இருக்கும் / 30ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தொழில் நுடபம் தற்பொழுது மாறி இருப்பது உங்களுக்கு புரியவில்லையா?


மருத்துவ இதழில் வந்தால் நமப்லாம் சிறந்த மருத்துவ இதழ்கள் கட்டுரைகளின் உண்மையை ஆய்வு செய்த பிறகுதான் வெளியிடும் உ குமார் குழுவினர்தான் உண்மைக்கு மொத்த குத்தகை தாரர் என்பது போல் பேசுவது நல்ல் நகைச் சுவை
tamizhkumaran
அடிப்படை உண்மைகளையும் அரசினையும் பற்றி கூட தெரிந்து கொள்ளாத ஒரு நபராக இருக்கிறீர்கள். வடிவேலு போன்று என்ன எப்படி?என்று கேள்விகள் கேட்டு கொண்டே போவதில் இருந்தே உங்களுக்கு பல விடயங்கள் தெரியாது என்பது தெரிகிறது.பணம் வாங்குகிறார் உதயகுமார் என்று நாராயணசாமி உங்களை போன்று கேட்டதற்குதான் உதயகுமார் நாராயணசாமி மீது அவதூறு வழக்கு போட்டு அதற்கு நாராயணசாமி மன்னிப்பு கேட்டார் உங்களுக்கு தெரியுமா? அதே காரணத்தை பேசும் மன்மோகன் சிங்கின் மீது வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார் .சொந்த தொழில் செய்பவர்கள் எந்த முதலாளிகளுக்கும் அஞ்ச வேண்டியதில்லை.அரசு துறையில் இருப்பவர்கள் அரசு சொல்வதைத்தான் செய்ய முடியும். //அறியாமல் பேசுவது நான் இல்லை// எல்லாவற்றையும் என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கிறீர்கள்.இடிந்தகரைக்கு யாரோ பலர் வரவில்லை ,ஜைதாபூர் போராட்ட குழுவினர் மற்றும் அணு விஞ்ஞானிகள் தான் வந்திருந்தனர். இதுவரை மேலே நீங்கள் கூறிய விடயங்களையே உங்களால் சரி என்று கூற முடியவில்லை. இங்கே தொடரும் வாதத்தை நிறுத்தி விட்டால் எங்கே தோல்வி அடைந்துவிடுவோமோ என்று சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசி வருகிறீர்கள் .நகைச்சுவையாளர் யார் என்று இங்கே தொடரும் வாதங்களை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மனோகரன்
பின்வரும் சுட்டியை படித்து தெரிந்து கொள்ளவும்.
//கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி//
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=17689
durai ilamurugu
உ குமார்வழக்கு தொடரப்போவதாக சொல்லி பல நாட்கள் ஆகிவிட்டது இன்னும் போடவில்லை அவர் சுவீடன் நட்டில் உள்ள ஏதோ ஒரு அமைப்பூடன் தொடர்பு கொண்டுள்ளர் என்பதை அவர் வாயால் சொல்லுவதற்கே இத்தனை காலம் ஆகிவிட்டது மற்ற செய்திகளும் வரும் பொறுங்கள் நீங்ககள் என்னை வடிவேலு என்று சொல்லுவதன்மூலம் யாரையவது அவமதிப்பாக நினைத்தால் உங்களுக்காக வருத்தப்படுகிறேன்
மனோகரன் அ ந்த கடிதத்தை நான் படித்துவிட்டெண் ஒரு காவல்துறை அதிகாரி மிரட்டியதக் எழுதி இருக்கிறார் அது அவருடைய தகவல் அவ்வளுவுதான். பெரிய அம்மையை ஒழித்ததல்தான் எய்ட்ஸ் பரவி விட்டது . எய்ட்ஸ் என்பது அமேரிக்கர்கள் கறுப்பர்களையும் மற்றவர்களையும் கொல்லுவதற்காக தங்களுடைய ஆய்வுக் கூடத்தில் தயார் செய்தார்கள்" என்று பலவாறு பேசும் அந்த " மருத்துவரையும் நம்புவதற்கு மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் விந்தை
மனோகரன்
பல அணு உலை விபத்துகள் உலகில் நடந்து விட்டன. கைபுண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. ஆக அணு உலையின் சாராம்சங்களை நாம் விவாதித்து கொண்டிருக்கும்பொழுது அதை தவிர்த்து உதயகுமார் அந்த நாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பதும் தொண்டு நிருவதினருடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பதும் அடிப்படையான விடயத்தை திசை திருப்ப பயன்படுமே தவிர வேறு ஒன்றுக்கும் உதவாது.
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களில் பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வகை புற்று நோய்களால் பாதிகபட்டுளனர் என்று வெட்ட வெளிச்சமாக தகவல்கள் ஏற்கனவே வெளியில் வந்துள்ளது. (இந்தியா டுடே,ஜனவரி 18,2012) ஆக கல்பாக்கம் அணு உலை யால் ஒன்றுமே நேரவில்லை என்பதும் மக்கள் அதிக சுகதாரதுடன் உள்ளனர் என்பதும் வடிகட்டின பொய்யாகும்.
மேலும் அச்சுற்று வட்டார மக்களுக்கு பல்வேறு நோய்களும் நன்கொடையாக அணு உலை தந்திருக்கிறது. மேலும் கூடங்குளத்தில் அணு கழிவுகளை எப்படி மேலாண்மை செய்வீர்கள் என்று மக்கள் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. அதை கேட்டால் மற்ற நாடுகள் என்ன செய்யுமோ அதைதான் நாங்களும் செய்வோம் என்று பொறுப்பில்லாமல் பதில் சொல்லுவதும், நாட்டின் ரகசியத்தை வெளியிடமாட்டோம் என்று சொல்வதும் மக்களுக்கு இயல்பாகவே அச்சத்தை அதிகரிகின்றன. மேலும் நாடு முழுவது அணு சக்திக்கு எதிராக மக்கள் தன்னிச்சையாக போராடிவருகின்றனர். இந்திய ஏகதிபதயத்தின் எரிசக்தி கொள்கை மாறும் வரை போராட்டம் நீடிக்கும்.
மகிழ்நன்
1998-இல் இந்திய -ரஷ்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளிலிருந்தே இந்த திட்டதிற்கு எதிரான போராட்டங்களும் துவங்கிவிட்டன என்பதுதான் உண்மை. அடிக்கல் நாட வரவிருந்த பிரதமரும், முதல்வரும் மக்கள் எதிர்ப்பின் காரணமாகவே வருகையை ரத்து செய்தனர். 1989 மே 1 இல் கன்னியாகுமரியில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் கூட நடைபெற்று இருக்கிறது. அதன் பின்னர் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்பதற்கு மக்கள் அஞ்சிய காரணமும் அதுதான். //

1998 ஆ அல்லது 1988
Guest
எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு அதர்க்ககதனே போராடுகிறோம் துரை தெரியமால எங்கள் வழியில் வந்துவிட்டிர்கள் நன்றி
tamizhkumaran
அணுஉலை விபத்தை சமாளிக்கும் நிலையில் இல்லை - இனி அணு உலையே வேண்டாம்!- ஜப்பான்
29 Feb 2012 01:00,

(29 Feb) டோக்கியோ: இனி புதிய அணு மின் நிலையங்களை அமைப்பதில்லை என்றும், படிப்படியாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது. மேலும் இனி ஒரு அணுஉலை விபத்து வெடித்தாலோ, ஏற்கெனவே சேதமடைந்த புக்குஷிமா உலையிலிருந்து மீண்டும் கதிர்வீச்சு வெளிப்பட்டாலோ அதைச் சமாளிக்கும் நிலையில் ஜப்பான் இல்லை எனவும் அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் அணுஉலைகள் குறித்த மாயையில் சிக்கியிருக்கும் நாடுகளுக்கு ஜப்பானின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்று கூறிக் கொண்டு எக்கச்சக்கமாய் அணுஉலைகள் அமைத்த வளர்ந்த நாடுகள், இப்போது பயத்தின் விளிம்பில் நிற்கின்றன. செர்னோபில் கோரத்துக்குப் பிறகு தனது நாட்டில் அணு உலைகளையே அமைக்காமல் நிறுத்திவிட்ட ரஷ்யா, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் மட்டும் அவற்றை உருவாக்கி வருகிறது. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த அணுஉலைகளை அமைக்கிறது. ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் புதிய அணுஉலைகளை இனி நிறுவுவதில்லை என அறிவித்துவிட்டன. பீதியில் டோக்கியோவை காலி செய்ய தயாராக இருந்த ஜப்பான்..

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தின் காரணமாக புக்குஷிமா அணுஉலை சேதமடைந்த போது, அந்த மின் நிலையத்தின் அதிகாரிகளும், அரசும் பீதியடைந்துவிட்டார்களாம். இந்த அணுமின் நிலையம் முற்றாக சேதமடைந்து, அதன் விளைவாக பெரும் சீரழிவுகள் ஏற்பட்டு தலைநகர் டோக்கியோ முழுவதையும் காலி செய்ய வேண்டிய ஒரு சூழல் கூட கடைசி தருணத்தில் தான் தவிர்க்கப்பட்டதாக இந்த பெரும் விபத்து குறித்த சுயாதீனமான அறிக்கையை தயாரித்துள்ள நிபுணர்கள் குழு கூறியுள்ளது. இந்த அறிக்கைய எழுதிய குழுவின் தலைவரே இதனை மீடியாவுக்கு தெரிவித்துள்ளார். "அணு உலை பாதுகாப்பு எனும் மாயையயில் சிக்கியிருந்த அரசாங்கம் இப்படியான ஒரு பேரழிவை எதிர்கொள்ள தயாரான நிலையில் இல்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்படாவிட்டாலும், நாட்டின் உணவுச் சங்கிலியில் கதிரியக்க பாதிப்பு இருக்கலாம் என்ற கவலை நீடிப்பதை ஜப்பான் அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விபத்துக்குப் பிறகு புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதில்லை என்று ஜப்பான் முடிவுசெய்துள்ளது. இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வராத புக்குஷிமா! இதற்கிடையே, சுனாமி பாதிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும் இன்னும் புக்குஷிமா அணுஉலையின் கதிர் வீச்சு பாதிப்பு அகலவில்லை. இந்த அணுஉலை மையத்துக்குள் பணியாற்ற பணியாளர்கள் தயங்கி வரும் நிலையில், அணு உலையைக் குளிர்விப்பதற்கான நீரேற்றுப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வெப்பம் அதிகரித்தாலும், ஒரேயடியாகக் குறைந்தாலும் உடனடியாக கதிர்வீச்சு பெருமளவு தாக்கும் ஆபத்து இன்னும் நீடிக்கிறதாம். சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு நேற்று இந்த நிலையத்தைப் பார்வையிடச் சென்றது. இந்த அணுஉலையின் இப்போதைய நிலை, இனி வரவுள்ள ஆபத்துகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது. அணுஉலை செயல்படாத நிலையிலும், வெப்பத்தை கட்டுக்குள் கொண்டுவர, தினசரி பல மில்லியன் கேலன் தண்ணீரை செலுத்தி வருகின்றனர் பணியாளர்கள். இன்னொரு பக்கம், உலையிலிருந்து கதிர்வீச்சு மிக்க 10000 டன் நீர் மாதந்தோறும் இந்த உலையிலிருந்து கசிந்தபடி இருப்பதாகவும், இதைச் சுத்தமாக்குவது தங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும் அணுஉலை நிர்வாகத்தினர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மட்டுமே 4வது அணு உலையிலிருந்து ஒரே நாளில் 8 டன் கதிர்வீச்சு நீர் (radioactive water) வெளியேறியதாகவும், இதுதான் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டதென்றும் பணியாளர்கள் தெரிவித்தனர். அணுஉலையிலிருந்து எரிபொருளை முற்றாக அகற்றும் வரை இந்த அச்சமான சூழல் நிலவும் என அதன் புதிய மேலாளர் தெரிவித்தார். இந்த உலையின் கசிவுகளை முற்றாக அடைக்க 6 வருடங்கள் ஆகும் என்றும், எரிபொருளை முழுமையாக அகற்ற 25 ஆண்டுகள் ஆகும் என்றும் புகுஷிமா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
durai ilamurugu
புகொஷிம பற்றிய தகவல்களுக்கு சான்று அளிப்பாரா திரு தமிழ்க்குமரன்
durai ilamurugu
". ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் புதிய அணூலைகளை இனி நிறுவுவதில்லை என அறிவித்துவிட்டன"
அப்படி என்றால் இப்போது இருக்கும் அணு உலைகள்? கெர்மனியில் 2022க்குப்பிறகு அணு உலைகளை மூடப்போவதாக சொல்லுகிறது ஆபத்து என்றால் 10 ஆண்டுகள் காத்திருப்பானேன்? பிரான்சு நாட்டு யூரேனியம் வாங்குவதில் குளறுபடி லஞ்சம் ஏற்பட்டதால் சில அணு ஆலகள் இயங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது100 விழுக்காடு ஆபத்தான அணு உலைகள் உலகில் மொத்தம் 443 இருக்கின்றன என்பதை அறிவீர்களோ ? அவை யாவும் இய்ங்கிக் கொண்டுதான் இருக்கின்றன அமெரிக்கா 3 புதிய அணு உலைகளை ஜியார்ஜியாமாகணத்தில்தனியார் துறையில் அமைக்க உள்ளது
ருச்சியா 9அணுஆலைகள்கட்டிக்கொண்டு இருக்கிறது
பிரான்சு 2
இங்கிலாந்து 4
நண்பர் பொய் தவிர வேறு ஒன்றும் பேச மட்டார் போல
thomasrojar
துரை முருகு, அந்த பகுதி மக்களின் கருத்தை ஏன் அரசு ஏற்க மறுக்கிறது. கருத்து கேட்பு முறையாக நடத்த்ப்படவில்லை. பேரிடர் பயிற்சி நடத்தப்படவில்லை, ஆனால், நடத்திவிட்டோம் என்று உண்மைக்கு புரம்பாக அரசு சொல்கிறது. எங்களை சந்திக்க மறுக்கிறது. ஏன்? ஒரு விபத்து நடந்தால், எங்களை எப்படி 24 மணி நேரத்தில், எங்கே தங்க வைப்பார்கள்? ஏன் நாங்கள் அமைத்த சயின்டிஸ்ட் குழுவை சந்திக்க மறுக்கிறார்கள்?
durai ilamurugu
அணு உலைகளுக்கு தேவையான எல்லாபாதுகாப்பும் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் போராட்டத்தின் நொக்கம் அது இல்லையே அணு உலையே வேண்டாம் என்பது என்ன நீதீ?
tamizhkumaran
துரை இளமுருகு முற்றிலும் நிதானம் இழந்து பேசுகிறார்.முதன் முதலில் அவர் கேட்ட கேள்வியை போன்றே இப்போதும் கேட்கிறார். ஆபத்து நிறைந்த அணு உலையை நினைத்த மாதிரி மூடி விட முடியாது என்பதால் படி படியாக மூடத்தான் செர்மனி உள்ளிட்ட நாடுகள் திட்டம் இடுகின்றன. ஆபத்து மக்களுக்குத்தானே அணு உலைகள் ஆயுதம் தயாரிக்க அரசுகளுக்கு தேவை .மக்களின் நலனை பற்றி எந்த அரசுக்கு கவலை இருந்திருக்கிறது.அமெரிக்காவிற்கு தற்போது மின்சாரம் அதிகமாக தேவைப்படவில்லை ஆனாலும் அனுமதி தருவது உலக சந்தையில் ஏற்ப்படும் கேள்விகளை சமாளிப்பதுதான்.அமெரிக்கா அணு உலை தொடர்பாக விடுத்த டெண்டர்களுக்கு பெரிய வரவேற்பில்லை .ஏற்கனவே அனுமதி பெற்றவர்கள் கூட சிலர் தங்கள் உரிமத்தை திருப்பி கொடுத்து விட்டனர்.பிரான்ஸ் ,அமெரிக்க, ரஷ்ய போன்ற நாடுகள் நிதி பற்றாக்குறையில் சிக்கி இருப்பதும் அணு உலைகளால் விற்ப்பது மூலமாக பெரும் பொருள் ஈட்ட திட்டங்கள் வைத்திருப்பது உங்களை போன்றவர்களுக்கு தெரிந்தாலும் கண்ணை மூடி கொள்வீர்கள். உலகில் இயங்கும் 443 அணு உலைகளும் ஆபத்தானவைதான் .அவைகளில் பாதிக்கும் மேல் மூடப்படும் சூழல்கள் உள்ளது. இயங்கி கொண்டிருக்கும் ஆவிகளால் ஏற்ப்படும் பாதிப்பும் கடுமையாகத்தான் இருக்கிறது. அந்த பாதிப்புகள் அந்த அந்த அரசுகளால் மறைக்கப்பட்டு வருகிறது .சமீபத்தில் கூட பிரான்சில் அரேவா நிறுவனம் அணு கழிவுகளை சரியாக பராமரிக்காததால் நிலத்தடி நீரில் கதிரியக்கம் பரவி மக்கள் பாதிபுக்குலானார்கள். புகுஷிமா ஆதாரத்திற்கு இதற்க்கு மேலே நான் போட்ட செய்திகள் நான் சொந்தமாக எழுதியதல்ல.அதிகாரப்பூர்வமாக ஜப்பான் அரசு வெளியிட்ட தகவல்களில் இருந்து எழுதப்பட்ட செய்தி.அதனை நீங்கள் ஜப்பான் ஏடுகளில் கூட படித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வளவு பாதிப்புகள் ஏற்ப்படுத்தும் என்று தெரிந்தும் அணு உலை வேண்டும் என்று வாதாடுவது என்ன நியாயம் ?
durai ilamurugu
நன்றி தமிழ்க் குமரன் மூடினால் அவர்களை பாராட்டு கிறார்கள் ஏன் உடணே மூடவில்லை என்றால் அவர்கள் மக்கள் நலனில் நாட்டம் இல்லதவர்கள் என்று கூறீகிறிர்கள் என்ன வாதமோ?அது செல்க> எந்த சப்பானிய இணயத்திலும் நீங்கள் சொன்னசெய்திகள் காணப்,படவில்லை ஒருவெளை சப்பானிலும் உங்களுக்கு மட்டும் தெரிந்த சப்பான் மொழியில் அணு எதிர்ப்பு பசெய்தி இதழ்களில் வந்து இருக்கலாம் சுனாமி வந்த உடனேயே சப்பான் மந்திரி சபையில் ஒருவர் ( அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை அணு உலைக்கு அபாயம் நேரிடும் அதை முதலில் மூடவேண்டும் என்று கூறீ இருக்கிறார் ஆனால் அரசு அதைக் கவனத்தில் கொள்ளவில்லை செய்தியே 1 வருடம் கழித்துதன் வெளியிடப்படப்டுகிறது அணு உலை போன்ற்வற்றில் பேரிடர் காலங்களின் போது செயலியழக்க செய்யவேண்டும் என்ற அடிப்படையைக் கூட பின்பற்றாமல் அணு உலையைக் குற்றம் கூறுவது என்ன நீதி? நான் கண்ணை மூடிக் கொண்டு படுத்து உறங்குவேன் அத்னால் எனக்கு அணு உலை தேவை இல்லை என்பது உங்கள் வழக்கமாக இருக்கலாம் அனல் அறிவியல் அதை ஏற்றுக் கொள்வதில்லை எசசரிக்கையுடன் இருப்பதே நம் அடையும் பலனுக்கு நாம் கொடுக்கும் விலையாகுமிந்து பத்திரிக்கை படிக்க இயன்றவர்கள் கூடங்குளம் பற்றீ வந்துள்ள நான்கு கட்டுரைகளையும் படிக்கும்படி வேண்டு கிறேன்11/3/2012
tamizhkumaran
இந்து பத்திரிக்கைக்கு விளம்பரம் செய்யும் ,பா.ஜ .க.,இந்து முன்னணி போன்றவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் உங்களை போன்றவர்கள் ஜப்பானுக்கே அறிவுரை கூறும் அளவில் வளர்ந்திருப்பது மகிழ்ச்சி.உங்களை போன்றோர்கள் இல்லாமல்தான் அவர்களால் அணு உலை விபத்தை சமாளிக்க இயலாமல் போயிற்று.அடுத்த முறை பேரிடர்கள் வரும் போது நிச்சயமாக உங்களை ஆலோசனை கேட்பார்கள் என்றே நம்புகிறேன் .அணு உலை வேண்டாம் என்பது அறிவியல் அற்றது என்னும் உங்களது கண்டுபிடிப்புக்கு எந்த அளவிற்கு விருது தரலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள்.உங்களது அறிவின் உயரம் கண்டு அந்த அளவிற்கு உலகத்திலே யாரும் இல்லை என்பதால் எல்லோரும் மண்டையை பிய்த்து கொண்டு இருக்கிறார்கள். இணையத்தில் செய்திகளை தேடி தெரிந்து கொள்ள தெரியாது என்று சொல்லி விட்டால் நல்லது அதை விடுத்து ஜப்பானிய இணையத்தளங்களிலே வரவில்லை என்று கூறுவது உங்களின் குறைவான அறிவுக்கு தக்க சான்றாக இருக்கிறது.இதில் நக்கல் வேறு. அறிவியல் அறிவு கொஞ்சமும் அற்ற அணு விடயங்களை பற்றி எதுவும் தெரியாத(அறிவே இல்லாத) ஆங்கிலம் மட்டும் தெரிந்த ஒரு மூன்றாம் தர நிருபர் இந்து பத்திரிக்கையில் எழுதினால் கூட இந்து பத்திரிக்கையில் எழுதிவிட்டார்கள் என்று உங்களை போன்ற மெத்த படித்த அறிவாளிகள் சிலாகித்து பேசுவது வழக்கமாக உள்ளது. உங்களுக்கு சாதாரண விடயங்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு கூட தகைமை இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் உங்களின் "எல்லாம் தெரிந்த" இந்த வெற்று தனத்தினால் அதனை வெளிப்படுத்தவும் செய்கிறீர்கள். அணு சக்தியின் பாதிப்பினை இன்னும் அறிந்து கொள்ளாமல் அதனை ஆதரிக்கும் நீங்கள் பாதுகாப்பான அணு உலைகளை புனித நகரமாம் காசியில் வைத்து கொள்ளலாமே . உங்கள் புனித நகரம் மேலும் பாதுகாப்பாக இருக்குமே ? இதனை இந்து பத்திரிக்கையில் எழுத சொல்ல முயற்சி செய்யுங்கள். இந்த அணு உலை பிரச்சனையை முடித்து வாய்த்த பெருமை நம்மை சேரட்டும்
durai ilamurugu
இந்து நாளிதழில்வந்த நான்கு கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை என்பது தெளிவகத்தெரிகிறது. அவ்ற்றில் 2 கட்டுரைகள் அணு மின் நிலயத்தை ஆதரித்தும் 2 எதிர்த்தும் வந்துள்ளன. ஒரு கட்டுரை கூடங்க்குளம் அணுமின் கழகத்தலைவர் திரு பாலாஜியவர்கள் எழுதியது மற்றும் ஒன்று அணுமின் நிலயத்தில்வேலை செய்யும் ஒருவரது மனைவி எழுதியது ., எதிர்கருத்துக் கட்டுரைகளில் ஒன்று 1978ல் ஆஸ்த்திரேலிய பெண்மருத்துவர் அணு உலைகளுக்கு எதிராக எழுதிய புத்தகத்தின் கருத்துகளை க் கொண்டது. எனவே அவற்றை படித்தால் நமக்கு உண்மை ஒரளவு தெளிவாக விளங்கும் . மற்றபடி இந்து முண்ணணி , ப ச. க பற்றியசெய்திகள் நகைப்புக்குறியன. என்னை இழிவு செய்வதாக எண்ணீக் கொண்டு தாங்கள் சொல்லும் கருத்துகள் உங்க்ளின் தரத்தையே காட்டுகிறது / அது செல்க சப்பான் பற்றிய செய்திகளில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது புகோசிமா அணு ஆலை பழுது உடையது என்பது அறிந்தும் அந்த அரசு அது குறித்து கவலை கொள்ளவில்லை என்பதே சுனாமி வந்த பிறகும் அமைச்சரவையில் ஒருவர் சுட்டிக்காட்டிய பின்னரும் அதை மூடுவதற்கு உரிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உரிய நடவடிக்கையை உரிய காலத்தில் எடுத்திருந்தால்கதிர் வீச்சு தடுக்கப்,பட்டு இருக்க்லாம் அல்லது குறைக்கப்,பட்டு இருக்கலாம் என்பதே
tamizhkumaran
உங்களை இழிவு செய்வதற்கு உங்களை தாண்டி இன்னொருவர் அதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைக்க பட்டு இருக்கலாம் தவிர்க்க பட்டு இருக்கலாம் என்பதெல்லாம் சமீபத்தில் ஒரு அமெரிக்க விஞ்ஞானியின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் செய்திகள்.காலம் தாழ்ந்து பேசுவதும் முடிந்த பின்னர் அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்பதெல்லாம் வழமையாக நடப்பதுதான். அவருடைய சொற்களை நீங்கள் அப்படியே கூறுகிறீர்கள். இவ்வளவு ஆபத்துள்ள அணு உலையை தவிர்ப்பதுதான் அறிவுடைமை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.