அன்பார்ந்த தமிழக மக்களே!
ராஜீவ் காந்தி மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் மரணத்தின் விளிம்பில் மரண தண்டனை கைதிகளாக 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது மூவரின் கருணை விண்ணப்பம் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ள செய்தி அனைத்து மக்களிடமும் கடும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு மரண தண்டனைக்கு எதிராக சனநாயக சக்திகளும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும், மக்கள் இயக்கங்களும் போராடியதன் விளைவாக, தமிழக அரசு பரிந்துரை செய்து தோழர்கள் கலியபெருமாள், தியாகு, இரங்கசாமி, லெனின், குருசாமி உள்ளிட்டவரின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர். இத்தகைய நீண்ட வரலாறு தமிழக மக்களுக்கு உண்டு.
1952ல் பாராளுமன்றத்தில் மரண தண்டனை ஒழிப்பு குறித்து தனி நபர் மசோதா கொண்டு வரப்பட்டது. 1967ல் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் மரண தண்டனை தேவையில்லை என்றார். 1967ல் மரண தண்டனைகளை குறைக்க வேண்டுவேண்டுமென சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. 1985ல் மரண தண்டனை ஒழிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 1989ல் மரண தண்டனை ஒழிப்பது குறித்து மசோதா கொண்டு வரப்பட்டது. 2007ல் அய்நா அவையில் மரண தண்டனை ஒழிப்பு தீர்மானத்தை இந்தியா எதிர்த்தது. பாராளுமன்றத்திற்கு வெளியிலும், குடியரசு தலைவர்கள் தங்கள் பதவி முடிந்த பின்பும் தான் மரண தண்டனை ஒழிப்பு குறித்து பேசுகின்றனர். அதிகாரத்தில் உள்ளபோது மவுனமாய் இருப்பதே பெரும் சாதனையாக உள்ளது.
2007ல் அய்.நாவில் மரண தண்டனை ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 52 நாடுகள் இதை எதிர்த்தன. 99 நாடுகள் ஆதரித்தன. 18 நாடுகளில் போர்க்கால குற்றங்களுக்கு மட்டும் மரண தண்டனை அளிக்கப்படுகின்றன. 27 நாடுகளில் பயங்கரவாத குற்றங்களுக்கு மட்டும் மரண தண்டனை என்று வரையறுத்துள்ளன. பொதுவாக மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடுகளில் குற்றங்கள் 3.09 என்ற விகிதத்திலிருந்து 2.74 என்ற அளவிற்கு குறைந்துள்ளன. ஆக மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை. மரண தண்டனையை ஆதரிக்கும் இந்தியா, பாகிஸ்தானில் இந்திய உளவாளி என மரண தண்டனை விதிக்கப்பட்ட சரப்ஜித் சிங்கை காப்பாற்ற சர்வதேச அளவில் கூச்சல் போடுகிறது. சரப்ஜித் சிங்கை தூக்கில் போட்டால் இறதிய பாகிஸ்தான் உறவு பாதிக்கும் என மிரட்டுகிறது.
இதே இந்திய அரசுதான் ஈழ விடுதலைக்காக போராட்டிய பல போராளிகளையும், இறுதிக்கட்ட போரின்போது 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்களையும் இனப்படுகொலை செய்த மனித இன விரோதி ராஜபக்சே கும்பலுக்கு உதவிசெய்து சிங்கள அரசைக் காப்பாற்றுகிறது. போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென உலகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் இந்த சூழலில்தான் இன்று மூன்று தமிழர்களைக் கொலை செய்யத் துடிக்கின்றது. மரண தண்டனை கைதிகளுக்கு வழக்கமாக நடக்கும் சட்டரீதியான வாய்ப்புகளைக் கூட இந்திய அரசு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு மறுக்கின்றது. அரசியல் காரணங்களுக்காகவே இந்திய அரசு இம்மூவரின் உயிரைப் பறிக்கத் துடிக்கின்றது. அப்சல் குருவை தூக்கில் போட்டால் காஷ்மீரின் ஒழுங்கு பாதிக்கும் என அம்மாநில முதல்வர் வெளிப்படையாகப் பேசுகிறார். அதுபோல் தமிழக அரசும் மூவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம்.
ஈழ மண்ணில் கொத்துக் கொத்தாக ஒரு இனமே அழிக்கப்பட்டபோது நாம் கையறு நிலையில் இருந்தோம். ஆனால் இன்றோ நம் மண்ணிலேயே 3 உயிர்களை பறிக்கத் துடிக்கின்ற வன்செயலை தடுத்து நிறுத்த நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை இந்த உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இனியும் தாமதிக்காமல் போராட்டக் களத்தை கட்டி எழுப்பி மரண தண்டனையை ஒழித்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் உயிர்களைக் காப்பதோடு, இவர்களைப் போலவே மரணக் கொட்டடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் அப்சல் குரு, பஞ்சாபின் தேவீந்தர் பால்சிங், அசாமின் மகேந்திரநாத் ஆகியோரின் உயிர்களையும் காத்திடுவோம். ஒன்றுபடுவோம்!
தமிழக அரசே!
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மீதான மரண தண்டனையை நீக்கம் செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்!
தமிழகத்தில் மரண தண்டனை ஒழித்திட சட்டம் இயற்று!
இந்திய அரசே!
இந்தியாவில் மரண தண்டனை சட்டத்தை நீக்கம் செய்!
தற்போது விதிக்கப்பட்டுள்ள அனைத்து மரண தண்டனைகளையும் திரும்பப் பெறு!
நிகழ்ச்சி நிரல்
தொடர் ஓட்டம்
சென்னை கத்திப்பாரா சந்திப்பிலிருந்து வேலூர் கோட்டை வரை
தொடக்கம்: 30.08.2011 செவ்வாய் காலை 6 மணி
தலைமை: சே.ஜெகன்ராஜ், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி
கொடியசைத்து தொடங்கி வைத்தல்:
திரு. வைகோ, பொதுச்செயலாளர், ம.தி.மு.க.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்
திரு. மோகனகிருஷ்ணன், தலைவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்
தோழர். திருமுருகன், மே 17 இயக்கம்
பொதுக்கூட்டம்
30.08.2011 செவ்வாய் மாலை 6 மணி
அண்ணா கலையரங்கம் அருகில், வேலூர்
வரவேற்புரை: வழக்கறிஞர். சந்திரசேகர், குடியுரிமை பாதுகாப்பு நடுவம்.
முன்னிலை: தோழர். வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர், உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு
தோழர். இராஜேந்திர பிரசாத், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்
தலைமை: தோழர். சா.ரஜினிகாந்த், அமைப்பாளர், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி
பங்கேற்போர்:
பேராசிரியர் S.A.R. கிலானி, செயல் தலைவர், அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்கான குழு
தோழர். கொளத்தூர் த.செ.மணி, தலைவர், பெரியார் திராவிட கழகம்
தோழர். சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
தோழர். பெ.மணியரசன், பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சி
தோழர். கி.லோ.இளவழகன், மாநில துணை பொதுச்செயலாளர், பா.ம.க.
தோழர். பேரா. சரஸ்வதி, பொறுப்பாளர், நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்
தோழர். தியாகு, பொதுச்செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்
தோழர். விநாயகம்
தோழர். வன்னியரசு, மாநில செய்தி தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தோழர். பேரா. ஹாஜாகனி, மாநில செயலாளர், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
தோழர். கேசவன், செயலாளர், அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்கான குழு
நன்றியுரை: தோழர். பிரபாகரன், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, வேலூர் மாவட்டம்
ஒருங்கிணைப்பு:
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி &
அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்கான குழு
தொடர்புக்கு: 94447 11353, 99944 95712, 94434 39869