ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு மேற்கொண்டது தமிழின அழிப்பை நோக்கமாகக் கொண்ட இராணுவ நடவடிக்கை என்பது உலக சமூகத்தின் முன் அம்பலமாகி வருகிறது. தனி ஈழம் தவிர வேறு தீர்வு இல்லாத நிலைக்கு தமிழ் மக்களை தள்ளிய சிங்களப் பேரினவாதம் இரண்டு இலட்சத்திற்கு அதிகமான ஈழத்தமிழ் மக்களை கொன்று குவித்துள்ளது. இதே இனவெறிதான் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கொன்று குவித்துள்ளது.

அண்மையில் ஈழத்தில் நடந்து முடித்த யுத்தம் மன்னிக்க முடியாத போர்க்குற்றங்கள் நிறைந்ததாக ஐ.நா அறிக்கை வெளிக்கொணர்ந்திருக்கிறது. இதன் அடிப்படையில், இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டுமென்றும், ராஜபட்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென்றும் தமிழக சட்டமன்றம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
 
இச்சமகால சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட இளந்தலைமுறையினர் ஆற்றவேண்டிய வரலாற்று கடமை குறித்து ஆலோசிக்க ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உலகளவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற சானல் 4 தொலைக்காட்சியின் காணொளி திரையிடல் நடைபெறும். மேலும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் ஈழப்பிரச்சினையின் தாக்கம் குறித்து சென்னை லொயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் மேற்கொண்ட ஆய்வு குறித்து முனைவர்.இராஜநாயகம் அவர்களின் பகிர்வும் நடைபெறும்.

இந்நிகழ்வில் பங்கேற்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
 
நாள் : 04.08.2011, வியாழன்
 
இடம் : விடிவெள்ளி தொழில்நுட்பக்கல்லூரி
 
நேரம் : மாலை 5.30 மணி முதல் 8.00 மணிவரை
 
நிகழ்ச்சி ஏற்பாடு : தேசிய இன அரசியல் இயக்கம், கன்னியாகுமரி

Pin It