சமூக மாற்றத்தின் உள்ளார்ந்த ஆற்றலாக உள்ள கலை, இலக்கிய போக்குகளின் செயல்பாடுகளை நோக்கி இருக்கும் இச்சூழலில் மாற்று அரங்கத்தின் தேவை பெரிதும் உணரப்படுகிறது.

அங்கொன்றுமாக இங்கொன்றுமாக வெளிப்படும் நம்பிக்கை அளிக்கும் ஒளிக்கீற்றுகளை வலுவாக்கி மாற்று அரங்க வெளியை வளர்க்க வேண்டியதும், முன்னெடுக்க வேண்டியதும் ஆரோக்கியமான தேவையாக இருக்கும்.

இந்தத் தேவையின் பின்னணியில் சங்கம் - அரங்கவெளி அதற்கான முயற்சியில் ஆர்வமுள்ளவர்களை அழைக்கின்றது.

வரும் டிசம்பர் மாதம் இறுதியில் “சங்கம் அரங்கவெளி” மாற்று அரங்கப் பயிற்சி பட்டறையை நடத்துகிறது. மரபார்ந்த பின்னணியுடன் நடைபெறும் இந்தப் பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டு பயிற்சி அளிக்க தேசிய அளவில் புகழ் பெற்ற அரங்க ஆளுமைகள், இலக்கியவாதிகள், ஓவியர்கள் வர இசைந்துள்ளனர்.

இப்பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் செல்பேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ திசம்பர் 15-ஆம் தேதிக்கு முன்பு பெயர் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் நேர்காணல் நடத்தப்பட்டு, பயிற்சி பெறுவோர் தேர்வு செய்யப்படுவர்.

சென்னையில் நடைபெறும் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு மாற்று அரங்கத்தின் அனைத்து நுட்பங்களையும் அறிந்துகொள்ள வருமாறு ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறோம்.

தொடர்புக்கு :

அமைதி அரசு: 9176230561, 9841208499

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It