ஓடி வந்த நாய்
யோசனை வயப்பட்டு
நெடு நேரம் நின்றதை
எதற்கென எப்படி அறிவது.

இந்த ஓணான்களுக்குள்
நேர்ந்தப் பிணக்கை
சரி செய்யும்
ஆர்வம் இருப்பதை
அதனிடம் எப்படிச் சொல்வது.

மொழிக் கலப்பற்று
கத்தும் குருவிகளின்
குரல்களைத் தவிர
அதனை அறிய முடியாத
ஏக்கம் நின்றபாடில்லை.

செருப்பில் சிக்கி இருந்த
எறும்பு விடுவித்ததும்
தலையுயர்த்திய
செய்கையின் மனப்பிம்பம்
இறுதி நாள் வரை
இருக்கும் என்பதில்
எவ்வித ஐயமுமில்லை.

அசையாது அமர்ந்திருந்த பொழுதும்
வீட்டிற்குள் நுழைந்த எலி
விரும்பியதை தின்னட்டும் என்பதை
அது ஏனோ அறியவில்லை.

கிளம்ப வெளி வந்துவிட்ட
மனைவிக்காய்
வராது போன வார்த்தைகளைப்
பற்றிச் சொல்ல என்னிடம்
ஒன்றைத் தவிர வேறெதுவுமில்லை.

இமை மூடி ஏதுவாகும் தருணத்திற்கு
காலம் தள்ளும் என்னைப் பற்றி
எவர் எது சொன்னாலும்
எதுவுமே தவறில்லை.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.