குடும்பத்துக்காக
படிப்பை பாதியில் விட்டுவிட்டு
பேருந்தில் செல்லும் தருணங்களில்
மட்டும் கல்லூரிகளை எட்டிப் பார்த்து
இளமையின் ஆட்டங்களுக்கு
எள்ளளவும் இடமின்றி
பருவத்தில் எழுந்த காதல் மீது
கல்லைத் தூக்கி வைத்துவிட்டு
தீபாவளி பொங்கலுக்குக்கூட
ஊர்ப்பக்கம் வராமல்
அக்கா தங்கச்சியை கட்டிக்கொடுத்து
சீர்முறைகள் செய்தே
களைத்துப் போனவனுக்கு
முடியெல்லாம் கொட்டி
முன் வழுக்கை விழுந்தபின்
ஒரு பெண்ணைப் பார்த்து
மணம் முடித்து
தன் பிள்ளை முகத்தை
பார்க்கும் முன்பே மீண்டும்
வெளிநாட்டுக்கு ஓடிவிடும் ஆண்களுக்கு
பொறுப்பு என்பது மனதில் இறுக்கி
அடிக்கப்பட்ட ஆணி....

- நேசன் மகதி

More articles by நேசன் மகதி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.