வீணை மீட்டும் லாவகத்துடன்
பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள்
அந்தப் பெரியவள் ‌‌..

மொட்டுகள் யாவும்
அவள் ஸ்பரிசத்தில் சிரித்தன
பூவுக்கும் நூலுக்கும்
மணம் முடித்து வைக்கும் நேர்த்தி
அந்தப் பக்குவத்தில் தெரிந்தது..

மனதைப் பிசையும் மல்லிகை
கண்ணடிக்கும் முல்லை
பூஜைக்கு ஏத்த சாமந்தி
பூத்து சிரிக்கும் செவ்வந்தி
கிளர்ச்சி தரும் சம்மங்கி
காதலாய்ப் பிறந்த ரோஜா
இன்னும் இன்னும்
நந்தவன சொர்க்கத்திலிருந்து
இறங்கிய மலர் தேவதைகள்
சூழலை இதமாக்கிக் கொண்டிருந்தன

விலை பேசி
கோபமாய் மாறிய மனைவி
மீண்டும் புத்தநிலையில்
தனது பூ மீட்டலைத்
தொடர்ந்த
பெரியவளின் முகத்தில்
மதிய நேரத்து சூரியன்..

ஏதுமற்றவனாய்
வசை மொழி வாங்கி
வண்டி ஏறி திரும்பிய நொடியில்
ஓரக்கண்ணால் சிரிக்கும் மரிக்கொழுந்து
என்ன தான் நினைத்திருக்கும்

- யாழ் எஸ்.ராகவன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.