கீற்றில் தேட...

விதைத்த நம்பிக்கைகள்
துளிர் விடத் தொடங்கியபொழுது
காணாமல் போன
கவலையில்
கருகுகிறது
நேசம்.

யாவையும்
எதைக் கொண்டு
புறந்தள்ளினாயென
சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம்
கடினப்பட்டுக் கிடக்கும்
வாழ்வு மீளுருவாக.

- ரவி அல்லது