சுயம் சுமை போல
தோன்றுவது இயல்பு
இயல்பில் நகர்தல்
இருத்தலின் இயைபு
தூரங்கள் எதுவோ
தோகைகள் சோர்வுறவில்லை
உயிர்த்துக் கொண்டிருக்கும்
இசையென
இதயத்தின் ஓசை
மயங்கலாம் எதிர்காலம்
மதி கொண்டு நிகழ்வது
என் காலம்
ஒளியோ இருளோ
உள்ளோவியம்
உணர்ந்து கொள்ளும்
பாதைகளை உருவாக்கும்
பாதங்களே துணை
தத்துவங்கள் நதி போல
நகர்ந்து கொண்டிருக்கிறேன்
நான் ஆக

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.