நேற்று,
நான் போட்ட சண்டையை
இன்னும் நீ மறக்கவில்லையென
தெரியாமல் உன்னை இந்நேரம்
திட்டிக்கொண்டு இருக்கிறேன்‌.
"கலெக்டர்‌ வேல பாக்குறா
வெண்ண மவ
இன்னும் ஆன்லைன் பக்கம் வருல."
திடீரென வந்தது குறுஞ்செய்தி
நீ இல்லையென தெரிந்து
அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை
உன்னை நான் எப்போதும்
அலட்சியப்படுத்துவது போல.

நீ எனக்காக
ஏதேவொரு லிங்க் சேர் செய்வாய்
ஏதேவொரு ஸ்டேட்டஸ் வைப்பாய்
ஏதேவொரு ஸ்டிக்கர் அனுப்புவாய்
இல்லையென்றால் அழைப்பு வந்துவிடும்
ஆனால் இது எதுவுமே இன்றில்லையென
நான் உணர்வதற்கு ஓராண்டு ஆகியிருக்கிறதே.
இதெல்லாம் இத்தனை நாள்
அன்பின் வெளிப்பாடாகத் தெரியவில்லை
அலுப்பாகத்தான் இருந்ததெனக்கு.
இல்லாத அன்பை
இல்லாத உன்னை
நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
நீ இருந்தபோது
இருந்ததாகவே உணராத
உன் நான்...

- துங்கன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.