முன்பனிக்கால ஈரவெயில்
உன் இதழைப் போல
இளஞ்சூடானது.
முன்பனிக்கால அந்தி
உன் ஊடலைப் போல
வாதை நிறைந்தது.
முன்பனிக்காலக் குளிர்
உனதணைப் போல
வாட்டி எடுப்பது.
முன்பனிக்கால இரவு
உன் காதலைப் போல
அடர்த்தியானது.
முன்பனிக்காலம்
உன்னைப் போலவே
சமாளிப்பதற்கு
கடுமையானதும்கூட பாவாய்.

- சதீஷ் குமரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.