கீற்றில் தேட...

குழந்தைகள் இருக்குமிடத்தைத்
தேடித் தேடி வந்து
மணியடிக்கும்
பஞ்சு மிட்டாய் விற்பவன் போலவே
திருவிழாக் கூட்டத்தில் என்னைத்
தேடித் தேடி வந்து
வண்ணம் பூசுகிறது உன்
பஞ்சுமிட்டாய் விழி.
வெட்கம் ஊதிப் பறக்கிறது
வானில் நம் காதல்.

- சதீஷ் குமரன்