பிடித்தாட்டும்
ஏதோவொன்று
காரணமற்று
உன் மேல்
பைத்தியமாக்கிப்
பார்க்க வைக்கிறது.

கண் முன் கரையும்
தருணங்கள் யாவும்
பௌதிக மாற்றத்தால்
பாலைவன அனலாக
தகித்தாலும்
விட்டகலவியலாதெனும்
ஈர்ப்பின் லயம்
பித்தாக மேவித்
தாகித்துக் கிடக்கிறது.
கருணையைக் கொஞ்சம்
அள்ளியெடுத்து
கரிசனமாகத் தடவாமல்
போனாலும்
மீட்பின் திறப்பு
நீயல்லாது
வேறொன்றில்லை
நித்தியமற்ற
இச்ஜீவியத்தில்.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.