உன் குடை மேல்
பூத்தூவும்படி
யார் சொல்லிருப்பா
மேகமா மோகமா
ஜன்னலோரம்
நீ அமர்ந்தால்
எத்தனை கடும் மழையும்
கவி மழைதான்
திறந்து கொண்ட மழைக்குள்
சிறுபிள்ளை
ஓட்டங்களென
உன் காலடி கூழாங்கற்கள்
வரப் போகும் மழைக்கும்
வந்து விட்ட மழைக்கும்
இடையில் நிற்பது
நீயா தீயா
பொன்னிற முகத்தில்
புள்ளி புள்ளி மழைத்துளி
மூக்கில் மட்டும்
வெள்ளியானதோ
மழையும் நீயும்
ஒன்றாய் வந்தால்
இசையாய் இலையாய்
உதிரும் இதயம்
- கவிஜி