ஓய்விலிருந்து
நெம்பித் தள்ளிய விழிப்பில்
கனவுகளின் கறை ஒட்டி இருந்தது
தொடர்புகளற்று.

சோம்பலில்
சுவீகரித்துக் கொண்ட பகல்
கனவை நிறைத்த வண்ணம் இருந்தது
களைப்புகளற்றும் ஆசுவாசங்களாக.

ஒரு கனவைப் போர்த்தி
இன்றையத் தூக்கத்தை
தொடர்ந்து விடலாம்தான்
அங்கு அனுமதியற்று
அழைத்துச் செல்லும்
ஆயிரம் கனவுகள்
இருக்கத்தான் போகிறது
நாளைய விழிப்பில்
கறைகள் படிய.

****

விரைவாக்கும் தணல்

மந்தார வெளுப்பில்
தேங்கிய வேலைகளை
வாகாக்கி ஓடவிட வேண்டும்
சேமிப்பின் பயன்பாட்டிற்கு.
சுட்டெரிக்கும் அனலும்
தேவையாக இருக்கிறது
மையச் சுழற்றியின்
அதட்டலில்
பிடறி தெறிக்க
ஓடுவதற்கு.

- ரவி அல்லது

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.