வீட்டு நாய்களெல்லாம்
வீதிக்கு வந்துவிட்டது.
இனி தெரு நாய்களுக்கு
தினம் உணவு கிடைக்கும்.
சொறி சிரங்கு
தோல் உறிவில்
துயரம் கண்ட
துன்பம் நீங்கும்.
ஆடி மாத
அல்லாடலுக்கு
அயல் நாட்டு
இணைகள் கிடைக்கும்.
வேறென்ன இனி...
வீட்டு நாய்கள்
நக்கத்தான் செய்யும்
நம்பித் திருட வரலாம்.
தெரு நாய்கள் நக்குமென்று
உத்திரவாதம் கொடுக்கத்தான்
வீட்டு நாய்களுக்கு
யோக்கியதைகள் இல்லை.
அவைகள்
வாலைச் சுருட்டி
எப்பொழுதும் வாகனத்தில்
பயணிப்பதால்.

- ரவி அல்லது