தோன்றும் போதே
தோண்டல் நலம்
ஒரு புள்ளியே போதும்
பற்றி எரியும் பக்கத்துக்கு
துளி நெருப்பிலும்
ஜோதி ஏற்றலாம்
குறிப்பெடுத்து
குணநலம் பார்த்து
ஆகாது அற்புதம்
முதல் தட்டுலேயே
திறந்து விடு
நொடிநேரத் தெறிப்பு
நோம்பி நாள் பார்த்து வராது
நல்ல மழைக்குக் காத்திருந்தால்
மண்வாசனை பிடிபடுமா
அதுவாக அவிழ்கையில்
அதுவாகி அணைத்துக்கொள்
நினைக்க நினைக்கவே
நேர் நில்
சேர்த்து வைத்து ஆக்கி வைக்க
இது படையல் அல்ல
படைப்பு
- கவிஜி