குண்டுகள் தொடர்ந்து
முழங்க
நண்டுகள் போல்
ஓடியொளிய வளை தேடிய
உயிர்களின்
அவலநிலை என்சொல?

பாலுண்டு பழமுண்டு
நெய்யுண்டு சோறுண்டு
அச்சம் நிரம்பிய
ஈயக்காற்று
தொண்டை அடைக்க
தண்ணீர் கூட
இறங்காத கொடுமை என்சொல?

ஆணவப் போதையில்
குருதியாறு ஓடச்
செய்த மண்ணில்
மனிதம் என்பது
கானல்நீராய் ஓட
அந்த மண்ணில்
சிந்தப்பட்ட துளி
ஒவ்வொன்றும்
ஆழமாய் இறங்கிச்
சேமிக்கப்பட்டிருக்கிறது.

சேமித்த குருதிநீரை
உறிஞ்சும் வேர்கள்
செங்காந்தள் மலர்களாய்ப்
பூத்தே தீரும்.

- குளோரிசக்தி, கரூர்.

Pin It