செல்பேசி
அலைபேசி
திறன்பேசி
செல்லிடைப்பேசி
இப்படி ஏதேதோ பேசி
ஏதுமற்றும்
ஏதுமற்றவருடனும்
ஏதுமறியா முகங்களுடன்
எப்போதும் Unlimited ஆக பேசுவதற்கு
பொழுதுகளை மேலும் கீழும் தள்ளி
தடவியபடி உரையாட
ஏராளம் உண்டு உங்களுக்கு.

இந்தியா லிமிடெட் ஆன பிறகு
யாவும் அன்லிமிடெடாய்
ஆனதில் வியப்பென்ன
குதம்பாய்
அன்லிமிடெடாய் பேச
அன்லிமிடெடாய் எழுத
அன்லிமிடெடாய் அன்பு செய்ய
அன்லிமிடெடாய் காதல் கொள்ள
சிறு பூசணிப்பூ போதுமெனக்கு.

நாங்களிருவரும்
ஒரே இனம்தான்

அங்கிங்கெனாதபடி எங்கும்
ஏகன் அனேகனாய் அலையும்
பொக்கலீன்கள் நடுவே
கான்கிரீட் சாலை உடைத்து
ஏகாந்தமாய் படர்ந்து பூத்திருக்கும்
பூசணிப்பூவாய் பூத்திருப்போம்.

பெருஅதிகார டயர்கள் ஏற்றி நசுக்கும்வரை
மகரந்தம் பரப்பி ஒளிர்வதில்
குன்றுவதில்லை

துண்டு நிலமாயினும்
நிலத்திலே படர்ந்து
நிலத்திலே மடிந்து நிலமாக
நீலமாக விதையாக மடிவோம்.

நில் கவனியென நான் கேட்கவில்லை
ஏற்றிவிட்டே கடந்து செல்லுங்கள்.
அந்த மலை போனால் என்ன
அதில் ஒரு சிறு கல்லாவது
உங்கள் பொட்டில் மலையென விழாமலா
போய்விடும்
சொல்லடி நிலமென்னும்
வல்லாளே.

- சதீஷ் குமரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.