காலியாவதேயில்லை
உன் மீதான
ஏக்கத்தின் பெருங்கோப்பை
அள்ள அள்ள குறைந்திடாத
உன் அப்பழுக்கற்ற அன்புறுதலில்
உருகத் தொடங்குமென்
உள்ளுணர்வுகள்
திசையறியா பறவையின்
தேடலைப் போல்
பருவங்களில் கரைந்து உறைந்து
வெடித்துச் சிதறுமென் பேராசைகள்
விடியாத நள்ளிரவுகளில்
வானமென விரிந்து கிடக்கும்
உனதன்பினை வாரி அணைத்திட
எப்போதும் தாகமாயிருக்கும்
தவிப்பினூடாக அலையும் நனவிழிதேக்கங்கள்
இப்போதும் எப்போதும்
மழை மேகம் தாங்கிய மருத நிலமென
உன் நினைவுகள்

- வழக்கறிஞர் நீதிமலர்

Pin It