நமத்துப்போன கதைக்கு
ஒளி ஏற்றுகிறார்கள்
அவர்கள்.
நச்சுப்புகையில்
நம் தலைமுறைகள்
நூற்றாண்டுத் திரிகளில்
பற்ற வைத்தார்கள்
அவர்கள்.
பற்றிக்கொண்டு
தீ வைக்கிறாய்
எரிகிறது உன் பொருள்
குவிந்து கிடக்கிறது
வாசலில்
சாத்திரக் குப்பைகளின்
இருள்.
ஒன்று கூடி
ஒன்றாய் நின்று
வெடிக்க வேண்டியவற்றை
வெடிக்காமல்
புஷ்வானமாகி
பட்டாசை வெடிக்கிறான்
பச்சைத் தமிழன்.

- சதீஷ் குமரன்

Pin It