வெடித்துப் பரவிய
நச்சுப்புகை தீண்டி
அரிப்பு தாளாமல்
நீராடி
வெப்பநிலை தணிக்க
குளத்தில் இறங்கிய
மூன்றாம் பிறையின்
கழுத்தை
ஆகாயத்தாமரை
சுற்றி இறுக்கிப்பிடிக்க
சிக்கிக் கொண்டது நீர்க்கோழியின் அலகில் ..
வரப்பனியின் குளிரில் நடுங்கும்
பிறைக்கு
தன் சிறகினிலே படபடத்து
வெப்பமூட்டுகிறது நீர்ப்பறவை
கரைமோதும் நீரலையில்
மிதக்கும்
பட்டாசுக் குப்பைகளினிடையே
மூச்சுத் திணருகிறது
மூன்றாம் பிறை.

- சதீஷ் குமரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.