இப்படித்தான் சொல்லி வைத்தார்கள்
உனக்கு அனுமதி இல்லை என்பதை...
இப்படித்தான் சொல்லி வைத்தார்கள்
நீ உள்ளே வரக்கூடாது என்பதை...
இப்படித்தான சொல்லி வைத்தார்கள்
நீ தீண்டக்கூடாதென்பதை
இப்படித்தான் சொல்லி வைத்தார்கள்
நீ தீட்டுப்பட்டவன் என்பதை..
இப்படித்தான் சொல்லி வைத்தார்கள்
உனக்கு திருவடி தரிசனம் கிடைக்காதென்பதை...
இப்படித்தான் சொல்லி வைத்தார்கள்
உனக்கு வீடுபேறு இல்லை என்பதை...
இப்படித்தான் சொல்லி வைத்தார்கள்
உன்னால் ஒருபோதும் அவனை
அடைய முடியாதென்பதை...
சொலவடை நஞ்சில்
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்று
காலந்தோறும்
கன்னத்தில் ஒத்திக் கொள்கிறார்கள் கண்களை மூடி.
இப்படித்தான் வேடிக்கை
பார்க்கிறார்கள்
இன்றுவரை
தள்ளிநின்று
பட்சிகள் கூடுகட்டி காதலாடி
எச்சங்கள் மண்டிய கோபுரங்களை..,

- சதீஷ் குமரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.